தினம் ஒரு கதை - நாமே தான் நமக்கு தேவையானைதை முடிவுச் செய்ய வேண்டும்.

ஒரு கதை.

ஒரு மீனவர் வழக்கம் போல மீன் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது பசியால் வாடிய ஏழை இளைஞன் ஒருவன் அவரிடம் வந்து, "என் பசியைப் போக்க ஒரு மீன் கிடைக்குமா" என்றான். அதற்கு அந்த மீனவர்,  "இளைஞனே உனக்கு மீன் பிடித்துத் தர வேண்டுமா? அல்லது மீன் பிடிக்கும் கலையைக் கற்றுத் தர வேண்டுமா?" எனக் கேட்டார். மேலும், "மீன் பிடித்துக் கொடுத்தால், மீன் பிடிக்கும் கலையைக் கற்றுக் கொடுக்க மாட்டேன். மீன் பிடிக்கும் கலையைக் கற்றுக் கொடுத்தால், மீன் பிடித்துத் தர மாட்டேன். நான், இரண்டில் ஒன்றைத் தான் செய்வேன்" என்றார்.

அதற்கு அந்த இளைஞன், "எனக்கு மீன் வேண்டாம். மீன் பிடிக்கும் கலையைக் கற்றுக் கொடுங்கள். அதுத் தெரிந்தால் நான் தினமும் மீன் பிடித்து என் வருமையை நிரந்தரமாகப் போக்கிக் கொள்வேன்" என்றான்.

மீனவர் உடனே அவனுக்கு மீன் பிடிக்கச் சொல்லிக் கொடுத்தார். அந்த இளைஞனும் கற்றுக் கொண்டான். நன்றாக கற்றுக் கொண்டு சுயமாக மீன் பிடித்துக் கொண்டான். அவனது வறுமையும் நீங்கியது.

உண்மையில் நமக்கு என்ன வேண்டும்? மீன் வேண்டுமா? அல்லது மீன் பிடிக்கும் கலை வேண்டுமா? 

நீங்களே தீர்மானியுங்கள்.

இந்த உலகில் எல்லா நேரங்களிலும் அடுத்தவர் உதவி நமக்குக் கிடைக்காது.

நாமே தான் நமக்கு தேவையானைதை முடிவுச் செய்ய வேண்டும்.

Post a Comment

0 Comments