பார்வை திறன் குறைபாடுடைய பெண் குழந்தைகளுக்கான அரசு பள்ளி.. எங்க இருக்கு தெரியுமா?



திருச்சி புத்தூரில் அமைந்துள்ள பார்வைத்திறன் குறைபாடுடைய (vision impaired) மகளிருக்கான அரசு மேல்நிலைப் பள்ளி மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ளது.
இப்பள்ளியில் உள்ள வசதிகள் மற்றும் பயிற்சிகள் குறித்து விளக்குகிறார் இப்பள்ளி தலைமை ஆசிரியர் ‌‍சுப்ரமணியம், 

“தமிழ்நாட்டில் மொத்தம் 3 பள்ளிகள் உள்ளன. பார்வைதிறன் குறைபாடுடைய ஆண்களுக்கான பள்ளி சென்னையிலும் , இருபாலருக்குமான பள்ளியானது தஞ்சையிலும், பெண் குழந்தைகளுக்கான பள்ளி திருச்சியிலும் அமைக்கப்பட்டுள்ளது. பள்ளியிலேயே விடுதி வசதியும் உள்ளது. பெரும்பாலும் இங்குள்ள குழந்தைகள் விடுதியில் தங்கியே பயில்கின்றனர்.

1956ம் ஆண்டு இந்த பள்ளியானது ஞானம் ஆதிக்கம் என்பவரால் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் 1-5ம் வகுப்பு வரையே தொடங்கப்பட்டது. அதற்கு பிறகு இந்த பள்ளியானது 1969ல் அரசிடம் ஒப்படைக்கப்பட்டு 1990ல் மேல்நிலைப் பள்ளியாக மாறியது. தற்போது இந்த பள்ளியில் 94 மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். 7 ஆசிரியர்களுடன் இப்பள்ளியானது சிறப்பாக இயங்கி வருகிறது.

மேலும் இங்கு பிரெய்லி (Braille) பயின்ற ஆசிரியர்களால் மாணவிகளுக்கு பிரெய்லி முறையில் பயிற்றுவிக்கப்படுகின்றன. இது மட்டுமல்லாமல் கணினி பயிற்சி, மொபிலிட்டி (mobility) என்று சொல்லக்கூடிய பார்வைதிறன் குறைபாடுடைய குழந்தைகள் பிறர் துணையின்றி தனித்து எங்கும் சென்றுவர பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன” என தெரிவித்தார்.

Video link: 

Post a Comment

0 Comments