பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர், பெற்றோர் இடையிலான பிரச்னைகள் மற்றும் குறைகளை தீர்க்கும் வகையில், மாநில, மாவட்ட அளவில் குறைதீர் மன்றம் அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், ஆசிரியர்கள் மீதான பாலியல் புகார்கள், மாணவர்கள் இடையிலான மோதல், பெற்றோர், ஆசிரியர் இடையிலான பிரச்னைகள் போன்றவை, சமீப ஆண்டுகளாக அதிகரித்துள்ளன.
பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கூறியதாவது: ஆசிரியர், மாணவர் இடையில் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுகின்றன. இந்த விவகாரங்களை சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் கல்வி அதிகாரிகள் ஆகியோரே விசாரிக்கும் நிலை உள்ளது.
இதில், இரு தரப்பினர் இடையே நடுநிலையான தீர்வுகள் கிடைக்க வாய்ப்பில்லை. எனவே, ஓய்வுபெற்ற நீதிபதிகளை தலைமையில், மாவட்ட, மாநில அளவில் கல்வித்துறை குறை தீர் மன்றம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
0 Comments
*இங்கு இடம்பெறும் கருத்துக்கள் யாவும் பார்வையாளர்களின் சொந்த கருத்தாகும்
* கருத்துக்கள் பண்பட்ட வாரத்தைகளாக அமைய வேண்டுகிறேன் .
* தவறுகளை சுட்டிக்காட்டும் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது
*உங்கள் கருத்துக்கள் பிறறைப் புண்படுத்தும் வகையில் இருந்தால் உடனடியாக நீக்க உரிமையாளருக்கு முழு உரிமை உண்டு. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.