புதிய பென்ஷன் திட்டத்தில் மாற்றம் – மத்திய அரசு ஆலோசனை அதிரடி முடிவு!!

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதற்கு பதிலாக புதிய ஓய்வூதிய திட்டத்தில் மாற்றம் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
புதிய பென்ஷன் திட்டம்:

இந்தியாவில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என பல வருடங்களாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. அதாவது, இந்தியாவில் உள்ள ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், சத்தீஸ்கர் மற்றும் ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்கனவே பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுவிட்டது. இது போக மீதமுள்ள மாநிலங்களிலும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மத்திய அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதற்கு பதிலாக புதிய ஓய்வூதிய திட்டத்தில் மாற்றங்களை கொண்டு வர திட்டமிட்டுள்ளது. அதாவது, இந்த மாற்றத்தின் படி ஊழியர்கள் பெறும் சம்பளத்தில் 40 முதல் 45% வரை ஓய்வூதியம் வழங்கப்பட இருக்கிறது. ஆனால், தற்போது வரையிலும் மத்திய அரசு எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பினையும் வெளியிடவில்லை. ஆனால், மக்களவை தேர்தலை கருத்தில் கொண்டு அடுத்த ஆண்டிற்குள் புதிய பென்ஷன் திட்டத்தில் மாற்றம் குறித்தான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

போராட்டம் 

தற்போது பென்சன் தொடர்பான போராட்டங்களில் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வருகின்றன. அதேநேரம், பாஜக அல்லாத பல மாநில அரசுகளால் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், சத்தீஸ்கர் மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

பென்சன் திட்டத்தில் பிரச்சினை!

பழைய பென்சன் திட்டத்தின் கீழ், ஊழியர்களுக்கு கடைசி ஊதியத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாக வழங்க வழிவகை உள்ளது. இது குறித்து பல்வேறு பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை செய்துள்ளன்ர். இது மாநில அரசுகளை திவாலாக்கும் நிலைக்கு இட்டுச் செல்லும் என்று அவர்கள் கூறியுள்ளனர். பழைய ஓய்வூதிய திட்டம் நிதி ரீதியாக நிலையற்றதாக உள்ளது என்றும், இதனால் மாநிலங்களின் கடன் சுமை அதிகரிக்கலாம் எனவும் எச்சரிக்கை செய்துள்ளனர்.

புதிய பென்சன் திட்டம்!

தற்போது அமலில் இருக்கும் புதிய பென்சன் திட்டம் கடந்த 2004ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது சந்தையுடன் இணைக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் ஆகும். இதில், பணியாளர்கள் அடிப்படைச் சம்பளத்தில் 10 சதவீதம் பங்களிக்க வேண்டும். அதேபோல, அரசாங்கம் 14 சதவீதம் பங்களிக்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தில் ஊழியர்கள் எந்த பங்களிப்பும் செய்யவில்லை

Post a Comment

0 Comments