புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி நாளை திருச்சியில் மாநாடு.


புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி நாளை திருச்சியில் மாநாடு.

அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கான புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த கோரி திருச்சியில் நாளை அக்டோபர் 28 போராட்டம் ஆயத்த மாநாடு நடக்கிறது என மாநில ஒருங்கிணைப்பாளர் எம் செல்வகுமார் தெரிவித்தார் அவர் கூறியதாவது புதிய பென்ஷன் திட்டத்தை திட்டத்தால் தமிழகத்தில் 6.28 லட்சம் ஊழியர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
கொல்கத்தாவில் சிபிஎஸ் திட்டம் அமல்படுத்தப்படவில்லை 

ராஜஸ்தான் ,சட்டீஸ்கர் ,இமாச்சல் பிரதேசம்,பஞ்சாபிலும் ஜார்க்கண்டிலும் ரத்து செய்துள்ளனர்.சிக்கிம் அரசு ரத்து செய்தவதாக கூறியுள்ளது. ஆந்திரா அரசு சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இந்த மாநிலங்கள் அனைத்தும் கடந்த 20 ஆண்டாக ஊழியர்களும் பிடித்தம் செய்த அடிப்படை சம்பளத்தில் பத்து சதவீதம் தொகையை மத்திய அரசு மற்றும் மாநில பென்ஷன் ஒழுங்கு காற்று கமிஷனிடம் கட்டி உள்ளது. தமிழக அரசு அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவோ பிடித்தம் செய்த நிதி மத்திய அரசுக்கு செலுத்தவோ இல்லை எனவே புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து அறிவிக்க வலியுறுத்தி நாளை திருச்சியில் மாநில அளவிலான போராட்ட ஆயத்த மாநாடு நடைபெறுகிறது இந்த மாநாட்டில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும்.

Post a Comment

0 Comments