*💥டிட்டோஜாக் சார்பில் 13.10.2023 அன்று சென்னை DPI வளாகத்தில் 30 அம்சக் கோரிக்கைகளை வலியுருத்தி மாபெரும் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் இன்று உயர்மட்டக்குழு உறுப்பினர்களை தொடக்கக்கல்வி இயக்குநர் திரு கண்ணப்பன் DPI வளாகத்தில் பேச்சுவார்த்தை நடத்த டிட்டோஜாக் அமைப்பில் உள்ள 11 சங்க பொறுப்பாளர்களுக்கு கடிதம் மூலம் அழைப்பு விடுத்திருந்தார்.*
*💥இயக்குநரின் அழைப்பை ஏற்று டிட்டோஜாக் உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.பேச்சுவார்த்தையை தொடக்கக்கல்வி இயக்குநர் திரு கண்ணப்பன்,பள்ளிக்கல்வி இயக்குநர் திரு அறிவொளி ஆகியோர் இன்று DPI வளாகத்தில் காலை 11.45 மணியளவில் பேச்சுவார்த்தை நடத்தினர்.*
*💥இயக்குநர்கள் இருவரும் 30 அம்சக்கோரிக்கைகளை ஒவ்வொன்றாக படித்து ஏற்றுக்கொள்ளக்கூடிய கோரிக்கைகள் பற்றி விளக்கினர்.அவர்கள் கூறிய பதில்கள் சில...*
*♦️1.6.2006 முதல் இடைநிலை ஆசிரியர்கள் ஊதியம் சரிசெய்ய குழு அமைக்கப்பட்டு பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றது...*
*♦️ஆசிரியர்,மாணவர் வருகைப்பதிவைத்தவிர EMIS பணியிலிருந்து 25.10.2023 க்கு பிறகு ஆசிரியர்கள் விடுவிக்கப்படுவார்கள்.*
*♦️எண்ணும் எழுத்தும் திட்டம் 2025 க்கு பிறகு இருக்காது.இது முதல்வரின் திட்டம்.*
*♦️RP பணிக்கு ஜனவரி-2024 க்கு பிறகு ஆசிரியர்கள் பயன்படுத்தப்படமாட்டார்கள்.*
*♦️SMC கூட்டம் ஆண்டுக்கு 4 முறை மட்டும் நடக்கின்ற வகையில் விரைவில் உத்தரவு வரும்.*
*♦️அரசு நிதி உதவி பள்ளிகளில் பணிநியமனம் பெற்றவர்களுக்கு வருடாந்திர ஊதிய உயர்வு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.*
*♦️உயர்கல்வி பயின்றவர்களுக்கு விரைவில் பின்னேற்பு அனுமதி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது.*
*♦️தற்போது உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு பெற்றுவருபவர்கள் முன் அனுமதி பெறவில்லை என்பதால் சில BEO க்கள் காழ்ப்புணர்ச்சி காரணமாக 1.1.2023 முன்னுரிமைப்பட்டியலிலிருந்து பெயர் நீக்கம் செய்துள்ளனர் என கூறப்பட்டதற்கு அதை உடனே சரிசெய்யப்படும் என கூறினார்.*
*♦️தேர்வுநிலை பெற்ற தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு ரூ.5400 தர ஊதியம் சரியானதாகும் இது பற்றிய தணிக்கைத்தடை சரிசெய்யப்படும்.*
*♦️B.Lit தகுதியில் ந.நி.பள்ளி த.ஆ ஆன பின் B.Ed முடித்து வாங்கிய ஊக்க ஊதியம் ரத்துசெய்யப்படமாட்டாது.விரைவில் உத்தரவு வரும்...*
*♦️B.T முடித்து ந.நி.பள்ளி த.ஆ வாக உள்ளவர்களுக்கு DEO(தொ.க) அலுவலகத்தில் மாநிலம் முழுக்க 51 DI பதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.*
*♦️வட்டார சீனியாரட்டியை மாநில சீனியாரிட்டியாக மாற்ற நீதிமன்றம் கருத்துக்கேட்டுள்ளது.இன்னும் முடிவாகவில்லை.*
*♦️அரசு உதவிபெறும் பள்ளியில் 6000 இ.நி பணியிடம் உபரியாக உள்ளது மாதம் ரூ 638 கோடி வீணாகின்றது.ஆனாலும் அவர்களை மாவட்டம் விட்டு மாறுதல் வழங்கவில்லை.*
*💥மற்ற கோரிக்கை அரசின் பாலிசி தொபர்புடையது இப்போது பதில் கூற இயலாது என்றார்.*
0 Comments
*இங்கு இடம்பெறும் கருத்துக்கள் யாவும் பார்வையாளர்களின் சொந்த கருத்தாகும்
* கருத்துக்கள் பண்பட்ட வாரத்தைகளாக அமைய வேண்டுகிறேன் .
* தவறுகளை சுட்டிக்காட்டும் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது
*உங்கள் கருத்துக்கள் பிறறைப் புண்படுத்தும் வகையில் இருந்தால் உடனடியாக நீக்க உரிமையாளருக்கு முழு உரிமை உண்டு. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.