தினம் ஒரு கதை - என்னுடையது

என்னுடையது...?

ஒரு காட்டிலே குரு ஒருவர் இருந்தார்.அவருக்கிட்டே சந்நியாசி நிறைய பேர் இருந்தாங்க.

ஒரு நாள் இரவு ஒரு சந்நியாசியை கூப்பிட்டார்.

“நீ உடனே அரண்மனைக்கு புறப்பட்டுப் போ... அரசவையிலிருந்து ஞானம் பெற்று வா!” அப்படின்னார்      

“குருவே நான் இந்த ஆசிரமத்திலே கற்றுக்கொள்ளாததை  
அரண்மனையிலிருந்து என்ன கற்றுக்கொள்ளப் போறேன்..!”ன்னார் அவர்.

“பேசாம நான் சொல்றத கேள் மற்றதையெல்லாம் அரசனிடம் 
கேட்டுக்கொள்..” அப்படின்னார் குரு.

வேற வழியே இல்லை...

அரண்மனைக்கு போய் சேர்ந்தார் சந்நியாசி. அங்க போய் பார்த்தா மது 
மயக்கத்தில் நடனமாடிக்கிட்டிருந்தாங்க...இவருக்கு சங்கடமாப் போச்சு...

இருந்தாலும் அரசன் இவரை வரவேற்று உபசரிச்சான்..

“நீங்க இந்த ராத்திரி இங்க தங்கணும்” -ன்னு கேட்டுகிட்டான்.

“இன்றைக்கு ராத்திரி இங்க நான் தங்கறது அர்த்தமில்லாத செயல்!” அப்படின்னார் சந்நியாசி.

இருந்தாலும் அரசன் விடற மாதிரி தெரியலே...!

“நீங்க காலைலே குளிச்சிட்டு சாப்பிட்டுட்டுப் போகலாமே!” –ன்னான்.

‘சரி’- ன்னு சொல்லி சந்நியாசி அங்கேயே தங்கினார்.

அன்றைக்கு ராத்திரி அவருக்கு தூக்கமே வரல...

“இந்த இடத்துலே நான் எப்படி ஞானம் பெற முடியும்?” –ன்னு யோசிச்சுப் பார்த்தார். .

காலையிலே எழுந்ததும் அரசன் அவர்கிட்டே வந்தார்.

“அரண்மனைக்குப் பின்னால் உள்ள நதியில் குளித்துவிட்டு வரலாம்...வாங்க!” –ன்னு கூப்பிட்டார். இருவரும் குளிக்கச் சென்றனர்.

அந்த சமயத்துல திடீர்-ன்னு பயங்கர கூச்சல். என்னானு பார்த்தா அரண்மனை தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது.

அப்போது சந்நியாசி பெரிய தீப்பிழம்பினைக் கண்டு உடனே ஓட ஆராம்பித்தார்.

“எதுக்காக அங்கே ஓடறீங்க?” –ன்னு கேட்டான் அரசன். அங்க அரண்மனையிலே என்னோட துணி ஒண்ணு கிடக்கு அது எரிஞ்சிடப் போகுது-ன்னு அவசரத்துல ஓடுறேன்-ன்னு சொல்லிக்கிட்டே ஓடினார்.

அப்போ ஓடிக்கிட்டு இருக்கும் போதே அவருக்குள் ஒரு யோசனை.
அரசனோட அரண்மனையே தீப்பிடித்து எரிஞ்சுகிட்டிருக்குது அவர் நதியில நின்னுக்கிட்டு இருக்கார். ஆனால் நான்...?.

அப்புறம் கேட்டார்: “ அங்க அரண்மனையே தீப்பிடித்து எரிஞ்சுகிட்டிருக்குது ஆனால் நீங்க நதியில நிக்கறீங்களே இதை என்னால் புரிஞ்சுக்க முடியலே”-ன்னார்.

இப்போ அந்த அரசன் சொன்னான். நான் அந்த அரண்மனை என்னுடையது என்று கருதியிருந்தால் நான் இங்கு நின்றுகொண்டிருக்கமாட்டேன்.

அரண்மனை என்பது அரண்மனை. நான் என்பது நான்.
      

நான் பிறப்பதுக்கு முன்னாடியும் அரண்மனை இருந்தது. நான் இறந்த பிறகும் அரண்மனை இருக்கும். பிறகு அது எப்படி என்னுடையதாக இருக்க முடியும்?.
  

நீங்க அந்த துணியை உங்களுதா நினைச்சீங்க... அதனாலே ஓடறீங்க அப்படினான்... சந்நியாசி-க்கு தெளிவு ஏற்பட்டது.

மனிதன் தன்னுடைய நோக்கத்தினாலேயே  அடிமையாகின்றான்”.,.

Post a Comment

0 Comments