எண்ணும் எழுத்தும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பணியிலிருந்து விலகிய ஆசிரியர்..
ஏன் இந்த நிலை?
ஒரு எளிய கதை
ஒரு காட்டில் பரம்பரை சொத்தில் தின்னு தின்னு அலுத்துப்போன புலி 🐅 ஒன்னு ஒரு தொழிற்சாலையை ஆரம்பிச்சுது
அங்கே ஒரு எறும்பு கொறைஞ்ச சம்பளத்தில் 🐜 வேலைக்கு சேந்துது .
அதுபாட்டுக்கு தெனம் வரும் சுறுசுறுப்பா எல்லா வேலைகளையும் செஞ்சு முடிச்சிட்டு, சாயந்திரம் ஆனா வீட்டுக்கு போயிடும்
புலியாருக்கு 🐅 சந்தோசம் கணிசமான லாபமும் கிடைச்சுது.
எல்லாமே நல்லாத்தான் போய்கிட்டு இருந்தது
ஒரு நாள் நடு ராத்திரியில் போது திடீர்ன்னு புலியாருக்கு 🐅 ஒரு ஐடியா தோணிச்சு
இந்த எறும்பு 🐜 தனியாவும் தன்னிச்சையாவும் வேலை செய்யுதே
அதை கண்காணிக்கிற அளவுக்கு நமக்கும் போதுமான நேரமும் இல்லையே (அதாவது அறிவு இல்லியே),
நாம எறும்பை 🐜 கண்காணிக்கவும் ஆலோசனை சொல்லவும் ஒரு உற்பத்தி மேலாளரை நியமித்தால் உற்பத்தி அதிகமாகும்னு நெனைச்சி ஒரு ஈ யை பெரிய சம்பளம் குடுத்து கொண்டு வந்தது.
).
அந்த ஈ சொல்லுச்சு,
"பாஸ் எறும்பை 🐜 அதன் போக்குல விட முடியாது, அதுக்கு முறையான ஒர்க் ஷெட்யூல் போட்டுக் கொடுத்தால் இன்னும் கூடுதலா வேலை வாங்கலாம். அதுக்கு நிறைய வேலை இருக்கு அதனால எனக்கு மட்டும் வேலை செய்ய ஒரு செக்ரட்ரி வேணும் முனு கேட்டுச்சு
புலிக்கு 🐅 ஏக சந்தோஷம் இந்த ஈ 🪰 என்னமா யோசிக்குது நமக்கு இவ்வளவுநாளா இது தோனலையேன்னு ஒரு முயலை 🐇 செக்ரட்டரியாக்குச்சு.
அத்தோட புலியார் 🐅 நமக்கும் கொஞ்சம் தெரியும்னு காட்டிக்க ,
"நீ கேட்ட மாதிரி PA போட்டாச்சு இனிமே எனக்கு தினமும் வேலை முன்னேற்றம் குறித்து ரிப்போர்ட் வரைபடமாவும் அட்டவனையாவும் கொடுக்கனும்" என்று சொல்லுச்சு
"ஓகே பாஸ் அதுக்கென்ன, பிரமாதமா செஞ்சிடலாம் அதுக்கு ஒரு கம்ப்யூட்டர், பிரின்டர், புராஜக்டர் எல்லாம் வேணுமே" ன்னது,
அப்படியே வாங்கிகிச்சு
ஒரு கம்ப்யூட்டர் 🖥 டிபார்ட்மெண்டும் பூனை 🐈 ஒன்றின் தலைமையில் அமைச்சாச்சு.
இப்போ ஏகப்பட்ட கெடுபிடி நெருக்கடிகளால் விரக்தியடைந்த அந்த எறும்போட 🐜 வேலையில் ஒரு தொய்வு வந்துச்சு
உற்பத்தி குறைஞ்சுச்சு.
புலி 🐅 எல்லாம் சரியா இருந்தும் ஏன் இப்படி ஆச்சி?ன்னு ஈ ய கேட்டுச்சி ...
அதுக்கு ஈ
தன்னோட (அதாவது ஈ யோட) ஐடியாக்களை எறும்புக்கு 🐜 விளக்கமா எடுத்துச்சொல்ல ஒரு தொழில்நுட்ப ஆலோசகரை போடுங்க ன்னு பாஸ் புலி 🐆 கிட்ட சொல்லிச்சி.
உடனே எறும்பு🐜 யை விட அதிக சம்பளத்தில் ஒரு குரங்குக்கு 🐒 அந்த வேலையை புலி 🐆 கொடுத்தது.
ஏற்கனவே டல்லான எறும்பை 🐜 இப்போது குரங்கும் 🐒 அதன் பங்குக்கு குழப்ப அன்றய தினத்துக்காக திட்டமிடப்பட்ட வேலைகளை அன்றைக்கே முடிக்க முடியாமல் போனது எறும்புக்கு 🐜.
மேலும் உற்பத்தி குறைஞ்சி கம்பெனி நஷ்டத்தில் இயங்கியது .
எதைத்தான் தின்னா பித்தம் தெளியும்' என்ற மனநிலைக்கு ஆளான புலியார் 🐅 நஷ்டத்தை சரி செய்ய என்ன செய்லாம்னு ஆராய குரங்கை 🐒 விட பெரிய சம்பளத்தில் ஒரு ஆந்தையை 🦉 நியமிச்சது.
ஆந்தை 🦉 மூன்று மாத கடும் ஆராய்ச்சிக்கு பின் கடைசியா இப்படி சொன்னது.
"தொழிற்சாலையில் தேவைக்கு அதிகமா ஆள் இருப்பதே காரணம் யாரையாவது வேலையை விட்டு எடுத்துட்டா நிலைமை ஓரளவு சீராகும்"
"யாரை எடுக்கலாம் அதையும் நீயே சொல்லிடு" என்றது புலி 🐅 .
"அதிலென்ன சந்தேகம் சரியாக வேலை செய்யாத அந்த எறும்பைதான்" 🐜 என அதிரடியாக சொன்னது ஆந்தை 🦉.
இப்படித்தான் உலகெங்கும் பொதுத்துறை மற்றும் தனியார்துறைகளில்
வேலை எதுவும் செய்யாமலே...
*படம் காட்டுபவனும்* ..
. *ஜால்ரா அடிப்பவனும்*-..
. . . . *திருட்டு தனம் செய்பவனும்*..
. . . . . . . . . *வெறும் வாயால் வேலை செய்பவனும்*..
பிழைத்துக் கொள்கிறான்.
வேறெதுவும் தெரியாமல்
*வேலையை மட்டுமே செய்பவன்*
*பாதிப்புக்கு உள்ளாகிறான்*
0 Comments
*இங்கு இடம்பெறும் கருத்துக்கள் யாவும் பார்வையாளர்களின் சொந்த கருத்தாகும்
* கருத்துக்கள் பண்பட்ட வாரத்தைகளாக அமைய வேண்டுகிறேன் .
* தவறுகளை சுட்டிக்காட்டும் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது
*உங்கள் கருத்துக்கள் பிறறைப் புண்படுத்தும் வகையில் இருந்தால் உடனடியாக நீக்க உரிமையாளருக்கு முழு உரிமை உண்டு. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.