தொடர்ந்து ஆட்சியில் அமர்ந்து 2 ஆண்டுகளாக வாக்குறுதி நிறைவேறாத நிலையில் கடந்த டிசம்பர் 2022 ல் மீண்டும் ஒரு உயிர்துறக்கும் உண்ணாவிரதம் நடைபெற்றது.
அந்த போராட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் மயக்கமடைந்து மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில் , தமிழக முதல்வர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் DA அறிவித்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்க ஒருநபர் குழு அமைத்தார்.
அந்தக்குழு 3 மாதத்தில் அறிக்கையை அளிக்கும் என்று கூறிய நிலையில் தற்போது. 8 மாதங்களை கடந்து இதுவரை எந்த அறிவிப்பும் இல்லாத சூழலில் மீண்டும் ஒரு மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்க முடிவெடுத்துள்ளது SSTA அமைப்பு.
அதன் ஒரு பகுதியாக இன்று 13.08.2023 ஆயத்த மாநாடு சென்னை தேனாம்பேட்டை காமராசர் அரங்கில் நடைபெற்று வருகிறது .
எதிர்பாராத விதமாக தமிழகம் முழுவதும் இருந்து 100 க்கும் மேற்பட்ட வாகனங்களில் 5000 க்கும்
மேற்பட்ட ஆசிரியர்கள் வருகை தந்து அரங்கை அதிர வைத்துள்ளனர். அரங்கம் நிறைந்து, இருக்க இடமில்லாமல் அரங்கத்திற்கு அருகில் ஒரு தனி பந்தல் அமைத்து LED திரையில் ஒளிபரப்பப்பட்டு , மேலும் ஒரு பந்தல் அரங்கத்திற்கு வெளியே அமைக்கப்பட்டு LED திரையில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. மேலும் ஆசிரியர்கள் தனியாக பேருந்து, இரயிலில் வந்த ஆசிரியர்கள் தொடரந்து வருகை புரிந்து வருகின்றனர். நிகழ்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
புகைப்படங்கள்
0 Comments
*இங்கு இடம்பெறும் கருத்துக்கள் யாவும் பார்வையாளர்களின் சொந்த கருத்தாகும்
* கருத்துக்கள் பண்பட்ட வாரத்தைகளாக அமைய வேண்டுகிறேன் .
* தவறுகளை சுட்டிக்காட்டும் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது
*உங்கள் கருத்துக்கள் பிறறைப் புண்படுத்தும் வகையில் இருந்தால் உடனடியாக நீக்க உரிமையாளருக்கு முழு உரிமை உண்டு. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.