தினம் ஒரு கதை - மனிதநேயம் தேடி பயணிப்போம்.

 #நாய்க்குட்டிகள்விற்பனைக்கு’ என்று எழுதிய பலகையை தனது கடைக் கதவுக்கு மேல் மாட்டிக் கொண்டிருந்தார்

அதன் உரிமையாளர்.


அந்தப் பலகை #குழந்தைகளை ஈர்க்கும்

என்று நினைத்தார் அவர். அதன்படியே ஒரு சிறுவன், கடையின் முன் வந்து நின்றான்.


"நாய்க்குட்டிகளை நீங்கள் என்ன விலைக்கு விற்கப் போகிறீர்கள்?" என்று கேட்டான்.


1000 ரூபாயிலிருந்து 2000 ரூபாய் வரை என்று கடைக்காரர் பதில் சொன்னார்.


நான் நாய்க் குட்டிகளைப் பார்க்கலாமா?"

என்று கேட்டான்.


கடை உரிமையாளர் புன்னகைத்து, உள் பக்கம் திரும்பி விசிலடித்தார். நாய்க் கூண்டிலிருந்து பந்துகளைப் போல ஐந்து குட்டியூண்டு நாய்க்குட்டிகள் ஓடி வந்தன.


ஒரு குட்டி மட்டும் மிகவும் பின்தங்கி மெதுவாக வந்தது. பின் தங்கி, நொண்டி நொண்டி வந்த அந்தக் குட்டியை உடனே கவனித்த சிறுவன்,"என்னாச்சு அதுக்கு?"

என்று கேட்டான்.


அந்தக் குட்டி நாயைப் பரிசோதித்த கால்நடை மருத்துவர், அதற்குப் பிற்பகுதி சரியாக வளர்ச்சி அடையவில்லை.எனவே எப்போதும் முடமாகத் தான் இருக்கும் என்று கூறி விட்டதாக விளக்கினார் கடைக்காரர்.


சிறுவனின் முகத்தில் ஆர்வம்.

"இந்தக் குட்டிதான் எனக்கு வேணும்."என்றான்.


"அப்படின்னா நீ அதுக்குக்

காசு கொடுக்க வேணாம். நான்

அதை உனக்கு இலவசமாகவே தர்றேன்"

என்றார் கடைக்காரர்.


அந்தக் குட்டிப் பையனின் முகத்தில்

இப்போது சிறு வருத்தம்.

கடைக்காரரின் கண்களை நேருக்கு நேராகப் பார்த்து விரல் நீட்டிச் சொன்னான்.


"நீங்க ஒண்ணும் எனக்கு இலவசமாகக்

கொடுக்க வேணாம். மற்ற நாய்க்

குட்டிகளைப் போலவே இதுவும்

விலை கொடுத்து வாங்கத்

தகுதியானது தான்.


நான் இந்தக் குட்டிக்கு உரிய முழுத்

தொகையையும் கொடுக்கிறேன்.

ஆனா, இப்போ எங்கிட்ட கொஞ்சம் பணம் தான் இருக்கு. பாக்கித்

தொகையை மாசா மாசம்

கொடுத்துக் கழிச்சிடறேன்." என்றான்.


ஆனாலும் கடைக்காரர் விடவில்லை.

"பையா... இந்த நாய்க் குட்டியால

உனக்கு எந்தப் பிரயோஜனமும் இல்லை. இதால மற்ற நாய்க்குட்டிகளைப் போல ஓட முடியாது...குதிக்க முடியாது... உன்னோட விளையாட முடியாது."என்றார்


உடனே, அந்தப் பையன்

குனிந்து தனது இடது கால்

பேண்டை உயர்த்தினான்.

வளைந்து, முடமாகிப் போயிருந்த

அக்காலில் ஓர் உலோகப்

பட்டை மாட்டப்பட்டிருந்தது.


இப்போது அவன்

கடைக்காரரை நிமிர்ந்து பார்த்துச்

சொன்னான்.


"என்னாலும் தான் ஓட முடியாது...

குதிக்க முடியாது. இந்தக்

குட்டி நாயின் கஷ்டத்தைப்

புரிஞ்சிக்கிறவங்க தான் இதுக்குத்

தேவை!" என்றான்.


கடைக்காராரின் #கண்களில்_கண்ணீர் வழிந்து சிறுவனை அணைத்துக் கொண்டார்.


மனிதர்கள் நிறையப் பேர் வாழ்கிறார்கள் இவ்வுலகில் ஆனால் #மனிதநேயதுடன் வாழ்பவர்கள் எத்தனைப் பேர்.....?


உன் #வலியை உன்னால் #உணர முடிந்தால் நீ #உயிரோடு இருக்கிறாய்.

ஆனால் பிறர் வலியை உன்னால் உணர முடிந்தால் நீ #வாழ்ந்து கொண்டிருக்கிறாய்.....!


மனிதநேயம் தேடி பயணிப்போம்.

Post a Comment

0 Comments