NEET - 2023 : மீண்டும் மீண்டும் தேர்வெழுதியோர் ஆதிக்கம்.

நீட்: மீண்டும் மீண்டும் தேர்வெழுதியோர் ஆதிக்கம்.

மருத்துவக் கல்வியில் தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு அளித்த போதும், நீட் தேர்வில், மீண்டும் மீண்டும் தேர்வெழுதியவர்களின் ஆதிக்கம் அதிகமிருப்பது புள்ளிவிவரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

அதாவது, தமிழக அரசு வழங்கியிருக்கும் 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், அரசுப் பள்ளியில் படித்த 2,993 மாணவர்கள் மருத்துவக் கல்வியில் இடம் கிடைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.

ஆனால், அதே வேளையில், 2,363 மாணவர்கள் (79 சதவிகிதம் பேர்) நீட் தேர்வை மறுமுறை எழுதி தேர்வாகியிருக்கிறார்கள்.

ஆனால், வெறும் 630 மாணவர்கள்தான், நீட் தேர்வை முதல் முறை எழுதி தேர்ச்சி பெற்றுள்ளனர் என்கிறது புள்ளிவிவரம்.

மீதமிருக்கும் அரசு ஒதுக்கீட்டு இடங்களிலும் இதே நிலைதான் நிலவுகிறது.

அதாவது, மருத்துவ சேர்க்கைக்கு தகுதி பெற்ற 25,856 பேரில் 8,426 பேர்தான் முதல் முறையாக நீட் தேர்வெழுதியவர்கள். 17,430 பேர் (67 சதவிகிதம்) மீண்டும் மீண்டும் தேர்வெழுதியவர்கள்.

தமிழகத்தில் இந்த ஆண்டு 28,849 விண்ணப்பதாரர்கள், மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்க தகுதிபெற்றிருக்கிறார்கள்.

இவர்களில் 19,793 பேர் அதாவது 69 சதவிகித மாணவர்கள் நீட் தேர்வை ஒன்றுக்கும் மேற்பட்ட முறை எழுதி தேர்ச்சி பெற்றவர்கள்.

Post a Comment

0 Comments