தினம் ஒரு கதை - நம்பிக்கை

ஒரு நகரத்தில் பெரும்வணிகர் ஒருவர் வாழ்ந்துவந்தார். வியாபாரத்தில் கெட்டிக்காரர் மற்றும் நேர்மையானவர். தனது இளம்வயதிலிருந்தே வெற்றிகளை குவித்துக்கொண்டிருந்தவர். தனது நிறுவனத்தை பண்மடங்கு பெருக்கிக்கொண்டிருந்தவர். தனது வேலையாட்களையும் நன்கு கவனித்துக்கொண்டவர். வியாபார எதிரிகளுக்கு அசகாய சூரர். இப்படியாக அழகாய் சென்றுகொண்டிருந்த வாழ்க்கை.

திடீரென்று ஒருநாள் சரிய துவங்கியது. குருகிய நாட்களுக்குள் அதல பாதாலத்திற்கு சென்றுவிட்டது அவருடைய நிறுவனம். அதுவரையிலும் தோல்வியென்பதையே அறிந்திராத வெற்றியாளர் அவர். என்ன செய்வதென்றே தெரியாமல் மலைத்துவிட்டார். யாரிடமும் எதையும் பேசவும் முடியாமல் சொல்லவும் முடியாமல் பித்துபிடித்தது போன்று நாட்களை நகர்த்தினார். 

தன் மனதின் பாரம் தாங்காதவராய் ஒருநாள் தனது வீட்டிலிருந்து  வரும் வழியில் மகிழ்வுந்தை விட்டு இறங்கி.. ஆழமாக யோசைனை கொண்டு நடக்க ஆரம்பித்தார்.

நடந்துகொண்டே இருந்தவருக்கு சற்று அருகாமையில் ஒரு  பூங்கா கண்ணில் படவே.. உள்ளே நுழைந்தார். 

பலரும் நடை பயிற்சி செய்வதுமாய்.. விளையாடுவதுமாய்.. இங்கும் அங்கும்  அரட்டை செய்வதுமாய்.. மும்முறமாக செலவழிந்து கொண்டிருந்தது இதமான வெயிலுடன் அந்த குலுமையான காலைப்பொழுது... 

இத்தனைவருட அவ்வழியான இருவழி பயனத்தில்.. முதன் முறையாக அவர் இப்போதுதான் அந்த இடத்தை பார்க்கவே செய்கிறார்....

உள்ளே நுழைந்தவருக்கு என்ன செய்வதென தெரியாமல்.. சிறிது நடந்தவர்.. அங்கு யாரோ முதியவர் தனியாக அமர்ந்திருந்த.. ஒரு விசுப்பலகையில் சென்று மற்றொரு ஓரமாய் அமர்ந்தார். 

நிமிடங்கள் பல செலவழிந்து கொண்டிருந்தது. சோகமாய் அங்கு அமர்ந்திருந்தவர் கடைசியாய் நிருவனங்களை விற்றுவிடும் தீர்மானத்திற்கு வந்தார். 

அப்போது திடீரென்று அருகிலிருந்த அந்த முதியவர் பெருவணிகரிடம் பேச்சு கொடுத்தார்.

'என்னங்க.. வந்ததுல இருந்து ரொம்ப சோகமாவே உட்காந்திருக்கீங்க.. தப்பா எடுத்துக்களைனா என்ன பிரச்சனனு நான் தெரிஞ்சிக்கலாமா...'

மனபாரம் தாங்காத வணிகரும் தன் வேதனையை அந்த முதியவரிடம் அனைத்தையும் கூறினார். இதைகேட்ட அந்த முதியவர் 'அவ்வளவுதானே, உங்களுக்கு எவ்வளவு பணம்னாலும் நான் தருகிறேன். ஆனால் எப்போது திருப்பித்தருவீர்கள்?' என்றார்.

வணிகருக்கு.. இப்போது பேரதிர்ச்சி. நடப்பதெல்லாம் கணவா நினைவா என்றே விளங்கவில்லை... ஆனாலும் சுயநினைவுக்கு வந்தவராய்.. அதை நிராகரிக்காதவராய்...'ஒரு.... ஐந்தாறு மாதங்களில் கொடுத்துவிடுவேன்' என்றார்.

உடனடியாக் அந்த பெரியவர் தனது சட்டைபையிலிருந்து.. சிறு புத்தகம் ஒன்றை எடுத்து தனது கையொப்பமிட்டு ஐம்பது லட்சம் காசோலை ஒன்றை, வணிகரிடம் கொடுத்தவர்.. 'தைரியமா போங்க.. ஆக வேண்டியத செய்ங்க.. எப்போனாலும் இங்கவந்து என்னை பாக்கலாம்..' என்றார்.

அவ்வளவுதான்.. காட்டு வெள்ளமாய் தனக்குள் வந்த தைரியமும் தன்னம்பிக்கையும் பழைய வேகத்தில் அவரை இயங்க வைத்தது... பெரு மகிழ்ச்சியுடன்.. அதை பெற்றுக்கொண்டு வங்கியிலிருந்து பணத்தை எடுக்கும் யோசனையுடன் வேகமாக அங்கிருந்து சென்றார்.

தனது மகிழ்வுந்தில் ஏறியவர் ஓட்டுனரை வங்கியை நோக்கி போகச்சொன்னார்.

மகிழ்வுந்து சென்று கொண்டிருந்தது.. 
இப்போது வணிகருக்கு திடீரென்று ஒரு யோசனை...

"நம்மிடம்தான் இப்போது இவ்வளவு பணம் இருக்கிறதே. நாம் ஏன் இதை இப்போதே எடுக்க வேண்டும். முடியாத பட்சத்தில் வேண்டுமானால் எடுத்துக்கொள்வோம்.." என்று எண்ணியவர்.. உடனடியாக வாகனத்தை நிறுவனத்திற்கு ஓட்டசெல்லி உத்தரவிட்டார்.

வாகனம் நுழைந்தது. வினாடிகள்கூட வீணாக்கமால் அலுவலகம் சென்று ஒரு இடத்தில் பத்திரமாக அந்த காசோலையை வைத்தவர்.. தனது நிறுவனத்தின் அனைத்து முக்கிய அங்கத்தினருடம் ஒரு பெரிய சந்திப்பை கூட்டினார். 

எல்லா முக்கிய கட்டமைப்புகளிலும் பெரும் மாற்றங்களை கொண்டுவந்தார்.. அதை செயல்படுத்த பெரும் முயற்சிகளை மேற்கொண்டார்.. 

நாட்கள் சுழல... ஆறுமாத காலத்தில் நிறுவன் பெரும் லாபத்தை மீண்டும் எட்டியது. மகிழ்ச்சியுடனும் பெருமையுடனும்.. பத்திரமாக வைத்திருந்த காசோலையையுடன் அந்த பெரியவரை சந்திக்க பூங்காவிற்கு சென்றார்.

உள்ளே நுழைந்தவருக்கு அந்த பெரியவரை எங்கு தேடியும் காணவில்லை.. ஒருவழியாக அதே விசுப்பலைகைக்கு அருகில் வந்து நின்றார்.. அந்த விசுப்பலகையின் ஒரு ஒரத்தில் மூதாட்டி ஒருவர் அமர்ந்திருந்தார்.

வணிகர்... அந்த மூதாட்டியிடம்.. பெரியவரை பற்றி விசாரித்தார்....

அதற்கு அந்த மூதாட்டி பதறியபடியே... 'ஏன் தம்பி உங்களுக்கும் அவர் காசோலை ஏதும் கொடுத்தாரா... ' என்றார்.

'ஆமாம்.. என்னாச்சி அவருக்கு?'.. 

'அதை ஏன் தம்பி கேட்குறீங்க... அவர் எனது கணவர்.. அவரும் பெரிய செல்வந்தர்.. ஒரு விபத்தில் அவருக்கு பைத்தியம் பிடித்துவிட்டது... நான்தான் அவரை பாரத்துக்கொள்கிறேன்... நான் உடன் இல்லாத நேரத்தில் இயலாதவர்களுக்கு உதவிசெய்வதாக கூறி காசோலை கொடுத்துவிடுகிறார்.. பணம் இல்லை என்று தெரிந்த பின்னர் மக்கள் வந்து திட்டிவிட்டு செல்வார்கள்.. உங்களுக்கும் அப்படி கொடுத்திருந்தால் அவரை மண்ணித்து விடுங்கள் தம்பி..' என்றார்.

நீதி: நம்பிக்கையே வாழ்வின் பலம். நம்பிக்கை இழக்காதவர் வாழ்வில் எந்தநிலையிலும் வெற்றி பெறக்கூடும்

Post a Comment

0 Comments