கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு, பி.டெக் தொழில்நுட்ப பட்டப்படிப்புகளில் சேர்வதற்கான தரவரிசைப்பட்டியல் நாளை வெளியிடப்படுகிறது.



தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் இளநிலை பட்டப்படிப்புகளுக்கான இந்த தரவரிசைப்பட்டியல், நாளை காலை 10 மணிக்கு adm.tanuvas.ac.in, tanuvas.ac.in/ என்ற இணையதளங்களில் வெளியாகவுள்ளது. 

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு ஜூன் 12-ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம் தலைவாசல், உடுமலைப்பேட்டை, தேனி வீரபாண்டி ஆகிய 7 இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. 

இந்தக் கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்புக்கு (பிவிஎஸ்சி - ஏஹெச்) 660 இடங்கள் உள்ளன. 

சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய 4 கல்லூரிகளில் உள்ள 420 இடங்களில் மட்டும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 63 இடங்கள் (15 சதவீதம்) ஒதுக்கப்படுகின்றன.

 இதுபோக, தமிழகத்துக்கு 597 இடங்கள் உள்ளன.

Post a Comment

0 Comments