*தினமும் ஒரு குட்டி கதை*
*'' சுயநலமும்- பொதுநலமும்''..*
*♻️தனி மனிதனின் சிந்தனை வளர்ச்சிக்கு, அவனது பொதுநல அக்கறையே அளவுகோள்.*
*♻️ஒரு ஆசிரியரிடம் பல மாணவர்கள் மாலை நேரங்களில் தனியாக படித்துக் கொண்டு இருந்தனர்.*
*♻️அதில் இரண்டு மாணவர்கள் மிகப் புத்திசாலிகள்.*
*ஒரு முறை தங்களில் யார் மிகவும் புத்திசாலி என்பதில் இவர்களுக்குள் சண்டை ஏற்பட்டது. செய்தி ஆசிரியருக்குத் தெரிய வந்தது.*
*♻️அவர் அந்த இரண்டு மாணவர்களை மட்டும் அழைத்து இன்று ஏனோ எனக்கு அதிகமாகப் பசிக்கிறது.*
*♻️அதோ! இரண்டு பேரும் அதோ அந்த மரத்தில் இருக்கும் பழங்களைப் பறித்து வாருங்கள், என்றார்.*
*♻️அந்த இரண்டு மாணவர்களும் மரத்தை நோக்கி ஓடினர். மரத்தை நெருங்க முடியாமல், முள் செடிகள் சுற்றி நின்றன.*
*♻️முதல் மாணவன் சற்று பின்னோக்கி வந்தான். பின்னர் முன்னோக்கி வேகமாக ஓடினான். ஒரே தாண்டில் மரத்தைத் தொட்டான்.*
*♻️பழங்களை முடிந்தளவுக்கு பறித்தான். மீண்டும் ஒரே தாவில் ஆசிரியருக்கு முன்னால் வந்து நின்று, பார்த்தீர்களா! கணநேரத்தில் கொண்டு வந்து விட்டேன், என்றான் பெருமையோடு.*
*♻️இரண்டாமவன் ஒரு அரிவாளை எடுத்து வந்தான். முள்செடிகளை வெட்டி ஒரு பாதை அமைத்தான்.*
*♻️அப்போது சில வழிப்போக்கர்கள் அலுப்போடு வந்தனர். அவர்கள் வெட்டப்பட்ட பாதை வழியே சென்று, பழங்களைப் பறித்து சாப்பிட்டனர். மரத்தடியில் படுத்து இளைப்பாறினார்கள்.*
*♻️மாணவனும் தேவையான அளவு பழங்களைப் பறித்து வந்து ஆசிரியரிடம் கொடுத்தான்.. ஆனால் அவன் வருவதற்கு கொஞ்சம் காலதாமதாகி விட்டது..*
*♻️இப்போது ஆசிரியர் முதல் மாணவனிடம், இரண்டாவதாக வந்த மாணவன் தான் அதிபுத்திசாலி என்றார்.*
*♻️முதலாமவன் கோபப்பட்டான்.அய்யா.. இன்னும் போட்டியே வைக்கவில்லை. அதற்குள் அவனை எப்படிச் சிறந்தவன் என சொன்னீர்கள்? என்றான்.*
*♻️ஆசிரியர் அவனிடம், ' நான் பழம் பறிக்கச் சொன்னதே ஒரு வகை போட்டி தான்! நீ மரத்தருகே தாவிக்குதித்து, பழத்தைப் பறித்தது சுயநலத்தையே காட்டுகிறது.*
*♻️ஏனெனில், அதை எனக்கு மட்டுமே தந்தாய். நான் மட்டுமே பலன் அடைந்தேன்.*
*♻️இரண்டாமவனோ பாதையைச் சீரமைத்ததால், எனக்கு மட்டுமின்றி ஊராருக்கும் இன்னும் பல நாட்கள் பழங்கள் கிடைக்கும்.*
*♻️எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கச் செய்பவனே அதிபுத்திசாலி, என்றான்.*
*♻️ஆம்.,இங்கே செயல் ஒன்று தான். ஆனால், செய்த விதத்தில் தான் வித்தியாசம்.*
*😎ஆம்.,நண்பர்களே.*
*🏵️ஆசையற்றத் தெளிவான மனம் பொது நலனில் அமைதி காணும். அமைதி வேண்டுமா.? அதற்குப் பொதுநலனே மருந்து...*
*⚽பொதுநலன் ஆசையில் ஈர்ப்பு இல்லாத மனநிலையைத் தோற்றுவிக்கும். அதுதான் உண்மையான மகிழ்ச்சி..*
0 Comments
*இங்கு இடம்பெறும் கருத்துக்கள் யாவும் பார்வையாளர்களின் சொந்த கருத்தாகும்
* கருத்துக்கள் பண்பட்ட வாரத்தைகளாக அமைய வேண்டுகிறேன் .
* தவறுகளை சுட்டிக்காட்டும் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது
*உங்கள் கருத்துக்கள் பிறறைப் புண்படுத்தும் வகையில் இருந்தால் உடனடியாக நீக்க உரிமையாளருக்கு முழு உரிமை உண்டு. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.