மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 7500 குரூப் ‘பி’ மற்றும் ‘சி’ பணியிடங்களை நிரப்புவதற்கான CGL (Combined graduate Level) தேர்வுக்கான அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வு வாரியம் (SSC) வெளியிட்டுள்ளது. May -04 last date.


மத்திய அரசின் வருமான வரித்துறை, சுங்கத்துறை, சிபிஐ, ஐ.பி., வெளியுறவு அமைச்சகம், ரயில்வே அமைச்சகம் என பல்வேறு துறைகளில் உள்ள குரூப் பி மற்றும் சி பணியில் காலியாக உள்ள 7500 காலியிடங்களை நிரப்ப மத்திய பணியாளர் தேர்வு ஆணையம் (எஸ்எஸ்சி) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

நிறுவனம்: மத்திய பணியாளர் தேர்வு ஆணையம்

காலியிடங்கள் - 7500

கல்வித்தகுதி - இளங்கலை பட்டப்படிப்பு 

வயது வரம்பு - 18-30

சம்பளம் - 25,500-1,51,100

விண்ணப்பிக்கும் முறை - ஆன்லைன். இணையதள முகவரி - https // ssc.nic.in மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம் - ₹ 100/-

கடைசி தேதி - மே 03,2023

முழுவிபரம்:

நிரப்பப்படும் பதவிகளின் விவரம்

குரூப் ‘பி’ பதவிகள்

Assistant Audit Officer

Assistant Accounts Officer

Assistant Section Officer

Assistant

Inspector of Income Tax

Inspector, (CGST & Central Excise)

Inspector (Preventive Officer)

Inspector (Examiner)

Assistant Enforcement Officer

Sub Inspector

Inspector Posts

Assistant/ Superintendent

Research Assistant

Divisional Accountant

Sub Inspector

Junior Statistical Officer (JSO)

Statistical Investigator Grade-II

குரூப் ‘சி’ பதவிகள்

Postal Assistant/ Sorting Assistant

Auditor

Accountant/ Junior Accountant

Senior Secretariat Assistant/ Upper Division Clerks

Senior Administrative Assistant

Tax Assistant

Sub-Inspector

கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : இந்த பதவிகளுக்கு 01.08.2023 அன்று 18 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இருப்பினும், SC/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுகளுக்கு 3 ஆண்டுகளும் மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு உண்டு.

சம்பளம் : ஒவ்வொரு பதவிகளுக்கும் ஒவ்வொரு வகையாக சம்பள முறை உள்ளது. சம்பள முறை பற்றிய விவரங்கள் பின்வருமாறு.

Pay Level-8 (₹ 47600 to 151100)

Pay Level-7 (₹ 44900 to 142400)

Pay Level-6 (₹ 35400 to 112400)

Pay Level-5 (₹ 29200 to 92300)

Pay Level-4 (₹ 25500 to 81100)

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு கணினி வழி எழுத்து தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

எழுத்துத்தேர்வானது, முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு என இரண்டு கட்டங்களாக நடைபெறும். சில பதவிகளுக்கு கூடுதல் தகுதித் தேர்வும் நடத்தப்படும்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://ssc.nic.in/ என்ற இணையதள பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ. 100, இருப்பினும் SC/ST பிரிவினர் மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 03.05.2023

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_CGLE_03042023.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

Post a Comment

0 Comments