தினம் ஒரு கதை

பாரசீகத்தின் மன்னர்,  இளவரசனுக்கு கல்வி கற்பதற்கு ஒரு ஆசானை நியமித்தார். இளவரசன் பண்புள்ளவர் சிறந்த மாணவராகத் திகழ்ந்தார்.  இருந்தாலும் ஒரு நாள் அந்த ஆசான் எந்த தவறும் செய்யாத இளவரசனை கடுமையாகத்திட்டி அவமானப்படுத்திவிட்டார். முதுகில் ஓர் கடுமையான அடியும் விழுந்தது .

அன்றிலிருந்து இளவரசனுக்கு ஆசானின் மீது வெறுப்பு ஏற்பட்டது. அந்த அவமானம் அவர் நெஞ்சில் உறைந்து விட்டது.

இளவரசர் வளர்ந்தார் .தந்தைக்குப் பிறகு சிம்மாசனம் ஏறினார்.

பாதுஷாவாக முடிசூட்டிக்கொண்ட உடனேயே காரணம் இல்லாமல் தன்னை அடித்து ஆசானை வரச்செய்தார் .

அன்று எந்த தவறும் செய்யாமல் ஏன் என்னை அநியாயமாக அடித்தீர்கள் என்று கேட்டார்.

பாதுஷா அவர்களே ஒரு நாள் சிம்மாசனத்தில் அமர போகிறீர்கள் என்பதும் எனக்கு தெரியும். அப்போது நீங்கள் நீதி பரிபாலனமும் செய்வீர்கள்.  பல வழக்குகள் உங்கள் முன் வரும்.  ஒன்றும் தவறு செய்யாத அப்பாவிகளும் உங்கள் முன் குற்றம் சுமத்தி நிறுத்தப்படுவார்கள்.  தவறு செய்யாமல் ஒருவர் தண்டிக்கப்பட்டால் அது எவ்வளவு வலியைத்தரும் என்பதை உணர்ந்தால்தான் அதுபோல தவறான நீதியை வழங்க மாட்டார்கள்.  எனவே அநீதியின் சுவையை நீங்கள் அறியவேண்டும் என்பதற்காகவே அப்படி ஒரு செயலை நான் செய்தேன்.

ஒரு நாளும் நீங்கள் மறக்கமாட்டீர்கள் உங்களை எல்லோரும் மன்னர் நீதி தவறாதவர் என்று பாராட்ட வேண்டும் என்று அச்செயலை செய்தேன் என்று குறிப்பிட்டார். மன்னர் வியப்பில் உறைந்து போனார்.

🍀எந்த தவறும் செய்யாத போதும் சில நேரங்களில் உங்களுக்கு இயற்கை  கஷ்டங்களை கொடுக்கிறது என்றால் உங்களை மேன்மை அடையச்செய்ய வேண்டும் என்பதற்காகவே... 🌺🌺🌺

Post a Comment

0 Comments