தினம் ஒரு கதை - வாழ்க்கை இனிமையானதா ? இல்லை கடுமையானதா?



சீடன் தனது குருவிடம் தன் சந்தேகத்தைக் கேட்டான். குருவே, வாழ்க்கை இனிமையானதா ? இல்லை கடுமையானதா? என்றான்.

அதற்கு அந்த குரு, வாழ்க்கை பூனையின் பற்களைப் போன்றது என்று பதிலளிக்க, சீடனுக்கு ஒன்றும் புரியவில்லை.

நாம் வாழ்க்கையைப் பற்றிக் கேட்டால், இவர் பூனையின் பற்களைப் பற்றிச் சொல்கிறாரே என்று, ஒன்றும் புரியாமல் குழம்பி நின்ற சீடனிடம், குரு அதனை விளக்கினார்.

·         ஒரு பூனையின் குட்டியிடம் பூனையின் பற்கள் எப்படிப்பட்டது என்று கேட்டால், பூனையின் பற்கள் மிக மென்மையானவை, இனிமையானவை என்று சொல்லும். பூனை தன் குட்டிக்கு சிறிதும் வலிக்காதவாறு, அக்கறையுடன் அதனை மிகப் பாதுகாப்பாக தன் பற்களால் கவ்விக்கொண்டு போகும்.

·         ஒரு எலியிடம் பூனையின் பற்கள் எப்படிப்பட்டது என்ற அதே கேள்வியைக் கேட்டால், ஐயோ.. பூனையின் பற்கள் மிகக்கொடுமையானவை என்ற பதில்தான் வரும்.

பூனையின் பற்களைப் போலத்தான் வாழ்க்கையும். வாழ்க்கையை நாம் எப்படிப் பார்க்கிறோம் ? எப்படி எடுத்துக் கொள்கிறோம் ? என்பதைப் பொருத்தே அமையும் என்று விளக்கினார் அந்த துறவி.

Post a Comment

0 Comments