7 லட்சம் வரை 0% வருமான வரி.. உண்மை என்ன? குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி..! : பட்ஜெட் 2023
பட்ஜெட் 2023 அறிவிப்புகளில் மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்பட்ட ஒன்று 7 லட்சம் ரூபாய் வரையிலான வருடாந்திர வருமானத்திற்கு வருமான வரி இல்லை என்பது தான்.
இது எந்தளவுக்குச் சாமானிய மக்களுக்கும், நடுத்தர மக்களுக்கும் பலன் அளிக்கிறது..? இது அனைவருக்கும் பலன் அளிக்குமா..? டாக்ஸ் ரிபேட் என்றால் என்ன..? 7 லட்சம் ரூபாய் வரையிலான டாக்ஸ் ரிபேட் எந்த அளவுக்குப் பலன் அளிக்கும்..? இப்படி மக்கள் மத்தியில் 7 லட்சம் வரையிலான வருடாந்திர வருமானத்திற்கு வரி இல்லை என்ற அறிவிப்பு குறித்துப் பல கேள்விகளுக்கும், குழப்பமும் உள்ளது.
இதை அனைத்தையும் உரிய உதாரணத்தோடு அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் பார்ப்போம் வாங்க.
7 லட்சம் ரூபாய்
முதல் முக்கியமான விஷயம் இந்த 7 லட்சம் ரூபாய் வரையிலான வருடாந்திர வருமானத்திற்கு டாக்ஸ் ரிபேட் என்ற அறிவிப்பு புதிய வருமான வரி விதிப்பைப் பயன்படுத்துவோருக்கு மட்டுமே பொருந்தும்.
நிர்மலா சீதாராமன் 2020 அறிவிப்பு
அதாவது எவ்விதமான முதலீடும், வரிச் சலுகை அளிக்கும் திட்டங்களில் முதலீடு செய்து வரிக் கழிப்புகள் இல்லாதவர்கள் எளிதாக வருமான வரி தாக்கல் செய்ய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2020 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட புதிய வருமான வரி விதிப்பு முறையைப் பயன்படுத்துவோருக்கு மட்டுமே இது பொருந்தும்.
டாக்ஸ் ரிபேட்
இப்புதிய வருமான வரி விதிப்பு முறையின் கீழ் வருமான வரி தாக்கல் செய்வோரின் சம்பளத்தைப் பொருத்து தான் அனைத்துமே உள்ளது. 0 முதல் 7,00,000 ரூபாய் வரையில் சம்பளம் வாங்குவோருக்கு மட்டுமே புதிய வருமான வரி விதிப்பு முறையின் கீழ் டாக்ஸ் ரிபேட் கிடைக்கும்.
வரிப் பிடித்தம்
அதாவது 7,00,000 ரூபாய் வருடாந்திர வருமானம் கொண்டவர்களுக்கு அவர்கள் பணியாற்றும் நிறுவனமோ, வங்கியோ ஏதேனும் வகையில் வரி பிடித்திருந்தால் அதை முழுமையாகவும், மொத்தமாகவும் திரும்பப் பெற முடியும். இது தான் டாக்ஸ் ரிபேட், இதையும் வருமான வரி தாக்கல் செய்த பின்பு தான் வாங்க முடியும்.
இந்த பட்ஜெட் அறிவிப்பில் பழைய மற்றும் புதிய வருமான வரி விதிப்பு முறைக்கு கீழ் 50000 ரூபாய் Standard deduction சலுகை அளிக்கப்பட்டு உள்ளது.
வித்தியாசம்
இந்த நிலையில் உங்களுடைய சம்பளம் 8,00,000 ரூபாயாக இருந்தால்
0- 3 லட்சம் வரையில் 0% வரி,
3-6 லட்சம் வரையில் 5 சதவீத வரி மூலம் 15000 ரூபாய்,
6- 8 லட்சத்திற்கு 6-9 லட்சம் வரிப் பலகை மூலம் 10 சதவீத வரி விதிப்பு மூலம் 20000
என மொத்தம் 35000 ரூபாயை சர்சார்ஜ் மற்றும் செஸ் உடன் செலுத்த வேண்டும்.
சம்பளம் தான் அனைத்தும்
இதனால் உங்களுடைய வருடாந்திர வருமானம் 750000 ரூபாய்க்குக் கீழ் இருந்தால் மட்டுமே லாபம், இல்லையெனில் அனைத்து தரப்பினர் போலவே வரி செலுத்த வேண்டும். இது 750001 ரூபாய் வந்தால் கூடப் பொருந்தும் என்பது தான் உண்மை. இதேபோல் 749999 வரையில் வருமானம் பெறுபவர்களுக்குப் புதிய வருமான வரிக் கீழ் 0% வருமான வரி கிடைக்கும்.
TAX REBATE VS TAX EXEMPTION
மத்திய நிதியமைச்சர் தனது பட்ஜெட் அறிவிப்பில் 700000 வரையில் TAX REBATE அளிக்கப்படும் என்று தான் கூறியுள்ளார், இதுவே TAX EXEMPTION எனக் கூறியிருந்தால் 7 லட்சம் வரையில் மொத்தமாக வரி விலக்குக் கிடைத்திருக்கும்.
தற்போது புதிய வருமான வரி விதிப்பு முறையின் கீழ் 0 - 300000 வரையில் TAX EXEMPTION அளிக்கப்படுகிறது.
அதாவது 3 லட்சம் வரையில் எவ்விதமான வரியும் இல்லை. TAX REBATE மற்றும் TAX EXEMPTION-க்கு மத்தியில் இருக்கும் வித்தியாசம் இதுதான்.
பழைய வருமான வரி விதிப்பு
இதேபோல் பழைய வருமான வரி விதிப்பு முறையின்கீழ் வீட்டுக் கடனோ, 80சி பிரிவின் கீழ் 1.5 லட்சத்திற்கான முதலீடுகளையோ, 80டி பிரிவின் கீழ் மொத்த குடும்பத்திற்கும் ஹெல்த் இன்சூரன்ஸ் எடுத்திருந்தால் புதிய வருமான விதிப்பு முறையின் காட்ட முடியாது.
புதிய வருமான வரி விதிப்பு முறை
புதிய வருமான வரி விதிப்பு முறை மற்றும் பழைய வருமான வரி விதிப்பு முறையின் கீழ் எவ்வளவு வரி செலுத்துகிறோம், எவ்வளவு சேமிக்கிறோம் என்பதற்காக விளக்கத்தை EY இந்தியா கொடுத்துள்ளது.
0 Comments
*இங்கு இடம்பெறும் கருத்துக்கள் யாவும் பார்வையாளர்களின் சொந்த கருத்தாகும்
* கருத்துக்கள் பண்பட்ட வாரத்தைகளாக அமைய வேண்டுகிறேன் .
* தவறுகளை சுட்டிக்காட்டும் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது
*உங்கள் கருத்துக்கள் பிறறைப் புண்படுத்தும் வகையில் இருந்தால் உடனடியாக நீக்க உரிமையாளருக்கு முழு உரிமை உண்டு. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.