கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலைவாய்பப்பின்மை இந்தாண்டு உயர்ந்துள்ளது. இந்த சூழலில் வீட்டிலிருந்தோ, பகுதி நேரமாகவோ செய்யக்கூடிய எளிய பார்டைம் (Part Time Jobs) வேலைகளை இங்கு பார்க்கலாம்.
ஏற்கனவே வேலைக்கு செல்பவர்களும், சம்பளம் போதவில்லை என்றால், பின்வரும் வேலைகளை செய்து சம்பாதிக்கலாம்.
1. யூடியூப் சேனல்
யூடியூப் அனைவருக்கும் தெரிந்ததே. பலர் யூடியூப் சேனல் தொடங்கலமா என்று சிந்தித்துக் கொண்டிருப்பர். யூடியூப்பை பொறுத்தவரையில், நீங்கள் வெளியிடும் வீடியோவை பொருத்தும், உங்களுடைய கண்டன்ட் பொருத்தும் வருமானம் பெற முடியும். இனி வரும் காலங்களில் உணவு சமைப்பது எப்படி, வேட்டி கட்டுவது எப்படி போன்ற வீடியோக்கள் பிரபலமாகும். அதே போல், நாட்டு நடப்பு செய்திகளையும் அலசி ஆராய்ந்து வீடியோவாக பதவிடலாம். ஆனால், Evergreen வீடியோவாக இருந்தால், உங்களுடைய வீடியோவை பார்வையாளர்கள் எந்த காலத்திலும் பார்ப்பார்கள். இதன் மூலம் கணிசமான வருமானம் பெற முடியும்.
2. டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர்.
இதுவும் பலருக்கும் தெரிந்ததே. ஆன்லைனில் டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் உள்ளது. அவைகளில் போலியானதாகவும் இருக்கலாம். சில இணையதளங்கள் உங்களிடம் பண மோசடி செய்யலாம். எனவே, ஏதாவது ஒரு கம்பெனி உங்களிடம் பணம் கேட்டால், கொடுக்க வேண்டாம். மாறாக டேட்டா ஆபரேட்டர் வேலையை கொடுக்கும் கம்பெனியை மட்டும் ஏற்று, வேலை செய்து பாருங்கள்.
3. வீட்டின் அறையை வாடகைகக்கு விடலாம்
உங்கள் வீட்டில் ஒரு வெளிநபர் தங்குவதற்கு இடம் உள்ளதா. அப்படியென்றால், ஒரு நாள், இரு நாள் என்று உங்கள் வீட்டின் அறையை வாடகைகக்கு விடலாம். இதற்காக BNB என்ற இணையதளம் உள்ளது. அதில் சென்று உங்கள் விவரங்களை பதிவு செய்து கொண்டால் போதும். நீங்களே உங்கள் வீட்டு அறைக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை வாடகையாக நிர்ணயித்துக் கொள்ளலாம். வெளிநாடுகளில் இது போன்று வீட்டு அறையை வெளியூர் பயணிகளுக்கு வாடகைக்கு விடப்படுகிறதாம். நீங்களும் சும்மா ட்ரை பண்ணி பாருங்கள். நல்லதாக அமைந்தால், அதிலும் சிறிது சம்பாதிக்கலாம்.
4. ஷேர் மார்க்கெட்
ஒரளவுக்கு நாட்டு நடப்பு, உலக அரசியல் தெரிந்தவர்கள் ஷேர் மார்க்கெட் மூலம் சம்பாதிக்கலாம். மற்ற வேலைகளைக் காட்டிலும், ஷேர் மார்க்கெட்டில் அதிகளவு உழைப்பு வேண்டியிருக்கும். தற்போது ஒவ்வொரு நாடுகளுக்கிடையேயும் வர்த்தகப் போர் நடந்து வருகிறது. எனவே, அவை அனைத்தும் உங்களுக்கு துல்லியமாக தெரிந்திருக்கும் பட்சத்தில், ஷேர் மார்க்கெட்டில் முயற்சி செய்து பார்க்கலாம்.
5. டெலிவரி வேலை (Delivery)
அமேசானில் டெலிவரி வேலைக்கு வரவேற்பு உள்ளது. டெலிவரி பாய் என்று நினைக்க வேண்டாம். இப்போதைய சூழலில் நமக்கு பொருளாதாரம் மிக அவசியம் என்ற பட்சத்தில், டிசண்டான எந்த வேலை வேண்டுமானாலும் நாம் ஏற்றுக் கொள்ளலாம். அமேசான் பிலக்ஸ் (Amazon Flex) மூலம் இதில் இணையலாம். உங்கள் விருப்பத்துக்கு, உங்கள் நேரப்படி டெலிவரி வேலை ஏற்றுக் கொள்ளலாம். சொல்லப்போனால், அண்மையில் அரசு சார்பில் தூய்மை பணியாளர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு இன்ஜினியரிங் முடித்த பலரும் விண்ணப்பித்திருந்தனர். எனவே, நியாயமான நேர்மையான வேலையில். பெரிய கெளரவம், இழிவு என்பது இல்லை.
6. குழந்தைகளை கவனித்துக் கொள்ளுதல் (Baby-sitting)
தற்போதைய சூழலில் கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் செல்லும் நிலையே உள்ளது. இந்நிலையில், அவர்களுடைய குழந்தைகளை பார்த்துக் கொள்ள ஆட்கள் தேவைப்படுகிறார்கள். சென்னை போன்ற மாநகரங்களில் இவ்வாறு குழந்தைகளை பார்த்துக் கொள்வதற்கு நம்பகத்தன்மை வாய்ந்தவர்கள் எப்போதும் தேவைப்படுவார்கள். நீங்களும் இவ்வாறு குழந்தைகளைப் பார்த்துக் கொண்டு, அதற்கென்று சிறிது விலையை நிர்ணயிக்கலாம்.
7. மாலை நேர வேலை (Evening job)
சென்னை போன்ற நகரங்களில் ஹோட்டல், ரெஸ்டாரண்ட் போன்றவைகளில் மாலை நேர வேலைக்கு எப்போம் டிமாண்ட் உண்டு. எனவே, கூச்சப்படாமல் உங்கள் வீட்டருகே இருக்கும் ரெஸ்டாரண்ட் அல்லது ஹோட்டல்களில் பகுதி நேர வேலை கேட்கலாம். உங்கள் தேவைக்கு ஏற்ப சம்பளம் கிடைத்தால், தாரளாமாக வேலை செய்லாம். குறைந்தபட்சம் பணி அனுபவம் பெற முடியும்.
8. ஃபிரீலன்சர் (Freelancer)
ஃபிரீலன்சர் என்பது நீங்கள் எந்த கம்பெனிக்கு வேண்டுமானாலும் வேலை செய்து கொடுக்கலாம். உங்களுடைய படிப்பு, திறமைக்கு ஏற்றவாறு ஒவ்வொரு கம்பெனியிலும் குறிப்பிட்ட ஒரு பதவிக்கு Freelancer ஆக பணிபுரிய முடியும்.
ஆன்லைனில், Freelancer என்று பிரத்யேகமாக இணையதளமே உள்ளது. அதில் சென்று, உங்களுடைய விவரங்களை பதிவு செய்யலாம். மேலும், எங்கெங்கு Freelancer வேலைகள் உள்ளது என்பதை பார்த்து, அதற்கு விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் ஒரே நேரத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நிறுவனங்களில் பணியாற்றி சம்பாதிக்க முடியும்.
8. வீட்டு செல்லப் பிராணிகளை கவனித்துக் கொள்ளுதல் (Pet care)
நகர்ப்புறங்களில் வீட்டு செல்லப் பிராணிகளை கவனித்துக் கொள்வதை ஒரு வேலையாகவே பார்த்து, சம்பாதிக்கலாம். குறிப்பாக சிறிது வசதி படைத்தவர்கள், 3 நாட்கள் வெளியூர் செல்லும் போது அவர்களது வளர்ப்பு பிராணிகள், நாய்க்குட்டி, மீன் போன்றவை யாரிடமாவது ஒப்படைத்து விட்ட போகலாம் என்று நினைப்பார்கள்.
அந்த பொறுப்பை நீங்கள் ஏற்று சிறிதளவில் பணம் சம்பாதிக்கலாம். இது முழுக்க முழுக்க உங்களுடைய திறமையைப் பொறுத்தே உள்ளது. உங்கள் நட்பு வட்டாரத்தை விரிவுபடுத்திக் கொள்ள வேண்டும். பக்கத்து ஏரியாக்களில் உள்ளவர்களுக்கு உங்களைப் பற்றி நல்ல அபிப்ராயம் இருக்க வேண்டும்.
9. வாடிக்கையாளர் சேவை பிரதிநிதி (Customer Service Representative)
சராசரி ஊதியம்: ஒரு நாளைக்கு 1,266 முதல் மாதத்திற்கு 40000 வரை வருமானம் ஈட்டலாம்.
வாடிக்கையாளர் சேவை பிரதிநிதிகள் பொதுவாக ஒரு நிறுவனத்தில் பணிபுரிகின்றனர், வாடிக்கையாளர் கேள்விகளுக்கு தொலைபேசி அழைப்புகள் அல்லது மின்னஞ்சல் மூலம் பதிலளிக்கின்றனர். கேள்விகளுக்கு பதிலளிப்பது, வாடிக்கையாளர் தகவல்களை சேகரிப்பது மற்றும் சிக்கல்களுக்கு தீர்வுகளை வழங்குவது ஆகிய சேவைகளை செய்கிறது. இந்த பணியில் நீங்கள் முழு நேரமாகவோ அல்லது பகுதி நேரமாகவோ வேலை செய்யலாம், உங்களுக்கு ஓய்வு நேரம் கிடைக்கும் போதெல்லாம் வாடிக்கையாளர்களுக்கு உதவலாம்.
10. மொழிபெயர்ப்பாளர் (Translator)
சராசரி ஊதியம்: மாதத்திற்கு 20000 முதல் 30 ஆயிரம் வரை வருமானம் பெறலாம்.
மொழிபெயர்ப்பாளர்கள் பொதுவாக வேறு மொழியில் இருக்கும் எழுதப்பட்ட ஆவணங்கள், ஆடியோ கோப்புகள் அல்லது படங்ககளை ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு மொழிபெயர்ப்பது ஆகும். நிலையான மொழிபெயர்ப்பு தேவைப்படும் ஒரு நிறுவனத்தில் நீங்கள் வேலை செய்யலாம் அல்லது ஒரு ஃப்ரீலான்ஸராகவும் பணிபுரியலாம்.
(இது ஒரு மீழ்பதிவு)
0 Comments
*இங்கு இடம்பெறும் கருத்துக்கள் யாவும் பார்வையாளர்களின் சொந்த கருத்தாகும்
* கருத்துக்கள் பண்பட்ட வாரத்தைகளாக அமைய வேண்டுகிறேன் .
* தவறுகளை சுட்டிக்காட்டும் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது
*உங்கள் கருத்துக்கள் பிறறைப் புண்படுத்தும் வகையில் இருந்தால் உடனடியாக நீக்க உரிமையாளருக்கு முழு உரிமை உண்டு. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.