தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் தொகுத்தறி மதிப்பீட்டில் கடந்த பருவத்தைப் போல அல்லாமல் இந்த பருவத்தில் மாணவர்களின் நிலைக்கு ஏற்ப வினாக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
1. முதல் வகுப்பு மாணவர்களுக்கு அரும்பு நிலைக்குண்டான கேள்விகள் மட்டுமே இடம்பெறும்.
2. இரண்டாம் வகுப்பில் அரும்பு நிலையில் உள்ள மாணவர்கள் அரும்பு நிலைக்குண்டான அனைத்து கேள்விகளுக்கும் சரியாக பதில் அளிக்கும் பட்சத்தில் அதற்கு அடுத்த நிலையான மொட்டு நிலை கொண்ட கேள்விகள் அவர்களுக்கு தோன்றும்.
3. அதே இரண்டாம் வகுப்பில் மொட்டு நிலையில் உள்ள குழந்தைகளுக்கு மொட்டு நிலைக்கு உண்டான கேள்விகள் மட்டுமே இடம்பெறும்.
4.மூன்றாம் வகுப்பில் அரும்பு நிலையில் உள்ள மாணவர் அவர் நிலைக்குண்டான தொகுத்தறி மதிப்பீட்டில் அனைத்து கேள்விகளுக்கும் சரியாக பதில் அளிக்கும் பட்ச த்தில் அதற்கு அடுத்த நிலையான மொட்டு, மலர் நிலைக்கான கேள்விகள் அவருக்கு ஒன்றன்பின் ஒன்றாக தோன்றும்.
5.அதே மூன்றாம் வகுப்பில் மொட்டு நிலையில் உள்ள மாணவர்கள் அவர்கள் நிலைக்கு உண்டான தொகுத்தறி மதிப்பீட்டில் அனைத்து கேள்விகளுக்கும் சரியாக பதில் அளிக்கும் பட்சத்தில் அதற்கு அடுத்த நிலையான மலர் நிலைக்குண்டான கேள்விகள் அவருக்கு தோன்றும்.
6.அதே மூன்றாம் வகுப்பில் மலர்நிலை குழந்தைகளுக்கு அவர்கள் நிலைக்கு உண்டான கேள்விகள் மட்டுமே இடம்பெறும்.
0 Comments
*இங்கு இடம்பெறும் கருத்துக்கள் யாவும் பார்வையாளர்களின் சொந்த கருத்தாகும்
* கருத்துக்கள் பண்பட்ட வாரத்தைகளாக அமைய வேண்டுகிறேன் .
* தவறுகளை சுட்டிக்காட்டும் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது
*உங்கள் கருத்துக்கள் பிறறைப் புண்படுத்தும் வகையில் இருந்தால் உடனடியாக நீக்க உரிமையாளருக்கு முழு உரிமை உண்டு. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.