வாக்குறுதியை நிறைவேற்ற இன்னும் எவ்வளவு காலம் வேண்டும் மாண்புமிகு முதல்வரே????? உரிமையை மறத்தல் தகுமோ? மறுத்தல் முறையோ? - மு.அன்பரசு தமிழக அரசு ஊழியர் சங்கம்

ஒரு மாநில அரசில் பணிபுரியும் ஐஏஎஸ்,  ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் நீதிபதிகள் உள்ளிட்ட உயர் பிரிவு அதி காரிகள் மட்டும் அரசின் அனைத்து உரிமை களையும் அனுபவித்துக் கொள்வதும், அவர்களின் கீழ் பணியாற்றும் ஊழியர்களுக்கு அவை மறுக்கப்பட்டு  நிதிநிலை மோசமாக உள்ளது என்று முதலைக்கண்ணீர் வடிப்பதும் எத்தனை ஆட்சியாளர்கள் மாறினாலும் மாறாத காட்சியாக நிலைபெற்று வருகிறது.  தங்களுக்குண்டான உரிமைகளை - சலுகைகளை ஒரு சல்லிக்காசு கூட குறையாமல் பெற்றுக்கொண்டி ருக்கும் அதிகார வர்க்கம்தான் ஊழியர் களின் உரிமைகள் மீது ஏவுகணைத் தாக்கு தல்களை தொடுத்து அவர்களின் எதிர்கால வாழ்வாதாரத்தை கேள்விக்குரியதாக்கி வருகிறது.

ஊழியர்களுக்கு இருக்கின்ற  உரிமைகளை பறிப்பதை அழுத்தந்திருத்த மாக செய்துவரும் அதிகார வர்க்கமும் அதை எதிர்த்து நின்று போராடும் ஊழியர்களைப் பார்த்து உங்களுக்கு போராட, வேலை நிறுத்தம் செய்ய உரிமை யில்லை என்று தீர்ப்பெழுதும் நீதிமன்றங் களும்தான் சுதந்திர இந்தியாவின் சுடர் மணிகளாக திகழ்கின்றன. விலைவாசி உயர்வுக்கேற்ப வழங்கப்படும் அக விலைப்படியும் கூட உயரதிகாரிகளுக்கு உடனடியாக வழங்கப்பட்டு விடுவதும் அரசு ஊழியர்கள் அதையும்கூட ஆர்ப்பாட்டமும் போராட்டமும் நடத்தி பல மாதங்கள் கடந்தும் வாங்க இயலாத சூழ்நிலை உள்ளதும் ஆட்சியாளர்களும் உயரதிகாரிகளும் அரசு ஊழியர்கள் மீதும் எவ்வளவு அக்கறை வைத்துள்ளார்கள்  என்பதைக் காட்டும் காலக் கண்ணாடி களாகும். அரசமைப்புச் சட்டத்தால் வரையறுக்கப்பட்ட, அரசாங்கங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு உறுதிப் படுத்தப்பட்ட அரசு ஊழியர்களுக்கான உரிமைகளை இந்த நாட்டின் நிதி யமைச்சர் ஒருவரே சமூக அநீதி என்று கூறுவது நீதியா?. சரண் விடுப்பை பணமாக்கிக் கொள்ளும் உரிமை மறுப்பு, அகவிலைப் படி வழங்காதிருத்தல், ஆட்குறைப்பு, பணி பறிப்பு, துறை இணைப்பு, அவுட் சோர்சிங், துறைகள் தனியார்மயமாக்கல் என்று அரசு ஊழியர்கள் மீது அடுக்கடுக் கான தாக்குதல்கள் அரசாங்கத்தால் தொடுக்கப்பட்டு வரும் நிலையில், அவற்றை எதிர்த்துப் போராடும் ஊழியர் வர்க்கத்தை அடக்க நினைப்பதும் துறை சார்ந்த நடவடிக்கைகள் மூலம் முடக்கப் பார்ப்பதும் ஒரு சமூக நல, மக்கள் நல அரசுக்கு அழகல்ல. 
ஓய்வூதியத் திட்டம்

2003ஆம் ஆண்டு ஜெயலலிதா அவர்கள் தமிழகத்தில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்தபோது அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கலைஞர் கருணாநிதி அவர்கள் திமுக ஆட்சிக்கு வந்ததும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை திரும்பப் பெற வழிவகைகள் காணப்படும் என்றார். 2006ஆம் ஆண்டில் அவர் முதல்வராக வந்தபிறகு 2011 வரை பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தவில்லை. அரசு ஊழியர்களின் ஊதிய மாற்றங்களில் நிகழ்ந்த குறைபாடுகளும் கண்டுகொள்ளப்படவில்லை. 2011ல் இருந்து 2021 வரை அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதியத் திட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கை களும் போராட்டங்களும் அதிமுக  ஆட்சியாளர்களாலும் கண்டு கொள்ளப்படாத நிலையில், 2021-ஆம் ஆண்டு தேர்தல் காலத்தில் திமுக ஆட்சி அமைத்தால் உடனடியாக பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளும் பரிசீலிக்கப்படும் என்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உறுதிமொழியின்பால் நம்பிக்கைக் கொண்டனர் அரசு ஊழியர் களும் ஆசிரியர்களும். புதிய அரசு பதவி யேற்று சுமார் இரண்டாவது ஆண்டும் முடியும் நிலையிலும் திமுக தலைவர் பழைய ஓய்வூதியத்திட்டத்தை செயல்படுத்தாமல் இருப்பது, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மத்தியில் நம்பிக்கை இழக்கச் செய்துள்ளது.  தில்லி முதல்வர் கெஜ்ரிவால் அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தியதைத் தொடர்ந்து சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், ராஜஸ்தான் மாநிலங்களும் தாங்கள் ஆட்சிக்கு வந்தபிறகு அதற்கான முனைப் பான நடவடிக்கைகளை எடுத்து வரு கின்றனர். சமீபத்தில் பஞ்சாப் முதல்வர் பழைய ஓய்வூதியத் திட்டததை அமல் படுத்துவதற்கான அறிவிப்பை வெளி யிட்டு அது சம்பந்தமான நடவடிக்கை களை மேற்கொள்ள துறை அதிகாரி களுக்கு உத்தரவிட்டுள்ள கடித நகலும்  வெளியாகியுள்ளது. சமீபத்தில் இமாச்சலப் பிரதேசத்தில் பதவியேற்ற காங்கிரஸ் அரசின் முதல்வர் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என ஊடக வியலாளர் முன்னிலையில் அறிவித்துள்ளார். இவற்றை தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
வாக்குறுதிகள் நிறைவேறுமா?

அதேபோல மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் அவுட்சோர்சிங் முறையில் பணியாளர்களை எடுப்பதற்கான ஆணைகள் வெளியிடப்பட்டு அதற்கான குழுக்களும் அமைக்கப்பட்டன. அரசு  ஊழியர் சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கங் களும், பல அரசியல் கட்சிகளும் அவற்றை  எதிர்த்த பிறகு அந்த ஆணைகளில் மாற்றம் செய்வதாக கூறி நிறுத்தப் பட்டுள்ளன. பல ஆண்டுகளாக அரசுத்  துறைகளில் காலியாக உள்ள பணி யிடங்களை நிரப்பாமல் இருப்பதோடு இனி வேலைவாய்ப்பு என்பது வெளி முகமை கள் மூலமாக நடத்தப்படும் என்ற நடை முறை, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், இளைஞர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் உள்ளிட்ட உழைக்கும் வர்க்கத்தினருக்கு இந்த அரசு கொடுத்துள்ள வாக்குறுதிகள் நிறை வேறாதோ என்ற ஏமாற்றத்தை ஏற்படுத்தி யுள்ளது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் போராட்டக் களம் கண்டுதான் மத்திய அரசுக்கு இணையான ஊதியம், மருத்துவப்படி, போனஸ், தனி ஊதியம், ஊதிய மாற்றம், மத்திய அரசு அதன் ஊழி யர்களுக்கு அகவிலைப்படி வழங்கும் அதே நாளில் தமிழ்நாடு அரசு ஊழியர் களுக்கும் வழங்கும் ஏற்பாடு, சிறப்பு நிலை ஊதிய குறைபாடு களைதல், நிபந்தனையின்றி தேர்வுநிலை வழங்குதல்  போன்ற உரிமைகளை பெற்றுள்ளது. வீரஞ்செறிந்த போராட்டங்கள் மூலமாக அரசு ஊழியர்களிடமிருந்து பறிக்கப்பட்ட பண்டிகை முன்பணம் பெறும் உரிமை, சரண்டர், பணிக்கொடை, சேமநலநிதி குறைப்பு போன்றவற்றை மீளப்பெற்று வரலாறு படைத்துள்ள இயக்கம்தான் அரசு ஊழியர் இயக்கம்.

கடந்த பதிமூன்று ஆண்டுகளாக தனித்தும் ஜாக்டோ-ஜியோ கூட்ட மைப்புடன் இணைந்தும் புதிய பென்சன்  திட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி யும், காலிப்பணியிடங்களை நிரப்பிடக் கோரியும், சத்துணவு அங்கன்வாடி, வருவாய் கிராம ஊழியர், ஊர்ப்புற நூலகர், எம்.ஆர்.பி செவிலியர் உள்ளிட்ட  சிறப்பு காலமுறை ஊதியம் *தொகுப்பூதியம்* பெறுபவர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம், ஓய்வூதியம், சாலைப் பணி யாளர்களுக்கு 41 மாத பணி நீக்க காலத்தை  பணிக்காலமாக சேர்ப்பது அரசுத்துறை களில் உள்ள கொத்தடிமை கூலி முறை களை ரத்து செய்து நிரந்தரப் பணி யாளர்களை நியமித்தல் போன்ற கோரிக்கைகளுக்காக தொடர்ந்து இயக்கங்களும், மாநாடுகளும், மாநில செயற்குழு கூட்டங்களும், பிரதிநிதித் துவப் பேரவைகளும் நடத்தி வருகிறது தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம். இந்த ஆண்டு நடைபெறும் மாநில  பிரதிநிதித்துவப் பேரவை ஒரு வித்தி யாசமான பின்புலத்தில் நடைபெறுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் முந்தைய ஆட்சி யாளர்களுடன் இருந்த எதிர்மறைப் போக்குகள் இன்றி, இந்த அரசுடன் சுமூக உறவு பேணி ஊழியர்களுக்கான உரிமைகளை பெறுவதற்காக, அரசு ஊழியர்களுக்கான உரிமைகளை -சலுகைகளை அவ்வப்போது நினை வூட்டி இணக்கமான அணுகுமுறையில் உரிமைகளை பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசுடன் சுமூகமான போக்கு இருப்பதாலேயே ஜாக்டோ-ஜியோவுடன் இணைந்து ஒரு பெரிய மாநாடு நடத்தி அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தியது இந்த இயக்கம்.  இந்த அரசாங்கம் அரசு ஊழியர் களின் உரிமைகளை சலுகைகளை புறந் தள்ளாத நிலையில் உரிய அறிவிப்புகள் வருமென்று அரசு ஊழியர்கள் காத்திருக் கிறார்கள். முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஜாக்டோ-ஜியோ  மாநாட்டில் தான் ஆட்சிக்கு வந்ததற்கு முக்கிய காரண மாக இருந்தது அரசு  ஊழியர்கள்தான் என்று ஒப்புரை வழங்கினார். உங்களு டைய கோரிக்கைகளை நான் மறக்க வும் இல்லை, மறுக்கவுமில்லை, மறைக்க வுமில்லை என்று தெரிவித்துள்ளார். எனினும், நீண்ட காத்திருப்பில் அதை வைத்திருப்பது நியாயமானதில்லை. 
இன்றுவரை குறைந்தபட்சமாக அகவிலைப்படி, சரண் விடுப்பை பண மாக்கிக் கொள்ளும் கோரிக்கை களைக்கூட நிறைவேற்றவில்லை. உடனடியாக நிறைவேற்ற வேண்டியது முதல்வரின் பொறுப்பாகும்.  சேலத்தில் நடைபெறும் மாநில பிரதி நிதித்துவப் பேரவை, அரசு ஊழியர்களின் உரிமைகளை மீட்பதற்கான இயக்கங் களை முன்னெடுக்கக்கூடிய ஊழியர்களை ஒன்று திரட்டி ஒன்றுபட்ட வலிமையை காண்பிக்கும்  முன்னோட்டக் களமாக இருக்கும். 

கட்டுரையாளர்: *மாநிலத் தலைவர்,  தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்*

Post a Comment

0 Comments