தினம் ஒரு நீதிக்கதை- விவசாயியின் கோழி

 சந்தைக்குப்  போன விவசாயி ஒருவர், தனது தோட்ட காய்கிறகளை விற்றுவிட்டு வரும் வழியில் புததிதாக கோழி ஒன்றை வாங்கி வந்தார். வீட்டிற்கு  வந்த கோழி, புதிய இடம் என்பதால் பயந்து பயந்து இரைகளைத் தேடி தின்றுக் கொண்டிருந்தது. இதைக் கவனித்த விவசாயி,  கோழியை கையில் பிடித்து பாசமுடன் தடவி இரையூட்டினார். நாட்கள் கடந்தன.  கோழி வளர்ந்து பெரிதானது.
             விவசாயியின் கோழியைப் போலவே பக்கத்து வீட்டில் ஒரு கோழி இருந்தது. அந்தக் கோழி, விவசாயியின் கோழிக்கு வைக்கும் உணவையெல்லாம் திருடித் தின்று வந்தது. ஒருநாள் இதைப் பார்த்து விட்ட விவசாயியின் கோழி, சண்டை போட ஆரம்பித்தது. இரண்டும் கடுமையாக  மோதிக் கொண்டன. இதைப் பார்த்த விவசாயி, பக்கத்து  வீட்டுக் கோழியை விரட்டியடித்தார். இதன்பிறகு பக்கத்து வீட்டுக் கோழி எப்போதும் கிண்டல் அடித்துக் கொண்டும், வம்பு பேசிக் கொண்டும்  சண்டைக்கு இழுத்துக் கொண்டே இருந்தது. இதையெல்லாம் காதில்  வாங்கிக் கொள்ளாமல் அமைதியாக இருந்தது விவசாயியின் கோழி. 
 கொஞ்ச நாட்கள் கழித்து விவசாயியின் கோழி முட்டை வைத்து குஞ்சுப்  பொறித்தது.  தன்னுடைய கோழிக் குஞ்சுகளை கண்ணும் கருத்துமாக பாதுகாத்து வந்தது. இதைப் பார்த்த பக்கத்து வீட்டுக் கோழி மீண்டும் கிண்டல் செய்து, கோபமூட்டி வம்புக்கு இழுத்தது.

 ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த விவசாயிகள்  கோழி சண்டை போட ஓடியது. ஓடிய வேகத்தில்  கால்களை தூக்கியடித்து, சண்ட போட ஆரம்பித்தது. இந்த நேரம் தனியே நின்ற குஞ்சுகளில் ஒரு கோழிக்குஞ்சை கழுகு தூக்கிச் சென்றது. கோழிக் குஞ்சு கதறும் சத்தம் கேட்ட தாய்க் கோழி, சண்டையை விட்டுவிட்டு ஒடிவந்தது. ஆனால் அதற்குள் கழுகு அந்த கோழிக்குஞ்சை   உயரமாக தூக்கிச் சென்றுவிட்டது.  ‘’ பொறுமையிழந்து  கொஞ்சம் கோபப்பட்டதால  என் ஒரு பிள்ளையை இழந்துட்டேனே” என்று வருத்தப்பட்டு  அழுதது விவசாயியின் கோழி.

        கவலையாக இருந்த விவசாயியின் கோழி முன்பு  மீண்டும் ஏளனமாக பேசி கிண்டல் செய்தது பக்கத்து வீட்டுக் கோழி. என்ன செய்வதென்று தெரியாமல் பொறுமையாய் இருந்தது விவசாயியின் கோழி. அடுத்த நாள் பக்கத்து வீட்டுக் கோழி கதறும் சத்தம் கேட்டது.  அது என்ன சத்தம் என்று விவசாயியின் கோழி பார்த்தது.
          அங்கே அடித்து குழம்பு வைப்பதற்காக பக்கத்து வீட்டுக் கோழியை தூக்கிச் சென்று கொண்டிருந்தார்கள்.

 நீதி:

 *பொறுமை கடலினும் பெரிது*
#Story
#Tamil story
# Daily story

Post a Comment

0 Comments