பொதுவெளியில் பகிரப்படும் 4,5 ம் வகுப்பு இரண்டாம் பருவத்தேர்வு தேர்வு வினாத்தாள்கள் ????

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் 4,5 ம் வகுப்புகளுக்கு முதல்பருவத்திற்கான  தேர்வுகள் அரசு அந்தந்த BRC  வழியாக வழங்கி மிகவும் பாதுகாப்பாக தேர்வு நாள் அன்று காலையில் பெற்றுக்கொண்டு மிக ரகசியமாக வினாத்தாள் வெளியாகி விடக்கூடாது என்ற கவனத்தில் கையாண்டு தேர்வு நடத்தியது. பல விமர்சனங்களை  சந்தித்தபோதும்  தேர்வு  முடிந்தது.   

     தற்போது  இரண்டாம் பருவத்திற்கும் அதே முறைப்படி வினாத்தாள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது SCERT மூலமாக வெளிவந்த தகவல் படி அந்தந்த பள்ளிகள் பள்ளியளவில் வினாத்தாள்களை தயார் செய்து இரண்டாம் பருவத்தில் நடத்த வேண்டும் என்றும் , இல்லை என்றால் EMIS இணையதளத்தில் SCHOOL LOGIN ல்  அனைத்து பாடங்களுக்குமான வினாத்தாள்கள் PDF வடிவில் UPLOAD செய்யப்பட்டுள்ளது.  அதை பதிவிறக்கம் செய்து கொண்டு தேர்வு நடத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சிறந்த முயற்சி இதில் உள்ள விமர்சனம் என்னவென்றால் EMIS LOGIN ல்  வழங்கப்பட்டுள்ள வினாத்தாள்கள் அனைத்தும் பல ஆசிரியர்களால்  download  செய்யப்பட்டு பொது வெளிகளில் , சமூகவலைதளங்களில்  தினமும் பகிரப்பட்டு வருகிறது. 

     தற்போது நான்கு ஐந்து வகுப்புக்கான இரண்டாம் பருவ தேர்வு வினாத்தாள் அனைவருடைய சமூக வளைதளங்களில் சரளமாக பகிரப்பட்டு வருவதால்  தேர்வுக்கான முக்கியத்துவம் , வினாத்தாள் ரகசியம் குறைந்துள்ளதாக கருத்து வெளியாகி உள்ளது.

 இந்த வினாத்தாள்களை குறிப்பிட்ட பள்ளியின் தலைமை ஆசிரியருடைய் சொந்த LOGIN ல் DOWNLOAD  செய்யும்படியான ஒரு பாதுகாப்பை வழங்கி இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என்ற  கருத்தும் உலாவருகிறது. வினாத்தாள்  வெளியாகி விடக்கூடாது கசிந்து விடக்கூடாது என்பதில்  இன்னும் சற்று கவனமாக இருந்திருக்கலாம் என்பது பல ஆசிரியர்கள், கல்வியாளர்கள்,   மற்றும் பொதுமக்களின் கருத்தாக உள்ளது. 

      எனினும்  பள்ளி அளவில்  ஆசிரியர்கள்  வினாத்தாள்களை  தயாரித்து  தேர்வு  நடத்தலாம் என்று அரசு  தெரிவிக்கப்பட்டுள்ளதால்.  இந்த வினாத்தாள்களை  எதிர்பார்க்காமல்.  பல பள்ளி  ஆசிரியர்கள் தாங்களாகவே  புதிய வினாத்தாள்களை  தயார்செய்து  வருவது பாராட்டுக்குறியது.  

Post a Comment

0 Comments