டான்செட் 2023 தேர்வு: முன்னோட்டம்டான்செட் தேர்வு என்றால் என்ன? இது எதற்காக எழுத வேண்டும்?


டான்செட் தேர்வு, அதாவது TANCET, என்பது Tamilnadu Common Entrance Test என்பதன் சுருக்கமே.

இத்தேர்வு தமிழகத்தில் உள்ள பொறியியல், மேலாண்மை போன்ற முதுநிலைப் படிப்புகளில் சேர நடத்தப்படுகிறது. தமிழகத்தில் அரசு, தனியாா் பொறியியல் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகளில் உள்ள எம்இ, எம்டெக், எம்ஆா்க், எம்பிஏ, எம்சிஏ போன்ற முதுநிலைப் படிப்புகளில் சேர தமிழ்நாடு பொது நுழைவுத் தோ்வில் (டான்செட்) தோ்ச்சி பெற வேண்டும்.

ஆண்டுதோறும் TANCET தேர்வை தமிழக அரசு மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் இணைந்து நடத்தி வருகிறது. இந்த தேர்வில் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் கலந்தாய்வு நடைப்பெற்று மாணவர்கள் அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிக்களை தேர்வு செய்வார்கள். 

TANCET 2023

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் வெளியிடப்பட்டிருந்த அறிவிப்பில் டான்செட் 2023 தேர்வு 2023 பிப்ரவரி மாதம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 

குறிப்பாக M.E. , M. Tech. , M. Arch. , M. Plan ஆகியவற்றிற்கான தேர்வுகள் பிப்ரவரி 25ஆம் தேதியும், 

M.B.A வுக்கு பிப்ரவரி 26ஆம் தேதியும் தேர்வுகள் நடைபெறும் என திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால், திடீரென்று தற்போது அண்ணா பல்கலைக்கழகம் தங்களது இணையதளத்திலிருந்து தேர்வுக்கு அறிவிக்கப்பட்டிருந்த தேதிகளை நீக்கியுள்ளது. மேலும், மாற்று தேதிகள் மற்றும் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு தேதிகளை பற்றி அப்டேட் பெறுவதற்கு தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளதை https://tancet.annauniv.edu/tancet/index.html தொடர்ந்து பின்பற்றி கொண்டிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பப் படிவம் - பதிவுக் கட்டணம்

பொது / ஓபிசி பிரிவினர் ரூ. 800

SC / SCA / ST பிரிவு விண்ணப்பதாரர்கள் ரூ. 400

தற்போது கல்லூரிகளில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவா்களும் இத்தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம். 

2022 டான்செட் நுழைவுத் தேர்வு நடப்பாண்டில் மே மாதம் நடைபெற்றது. இந்த தேர்வை   36,710 பேர் எழுதினர்.

இது குறித்த கூடுதல் விவரங்களை https://tancet.annauniv.edu/tancet/ என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.


Post a Comment

0 Comments