SSC-மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் 24,369 காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு!


விண்ணப்பிக்க கடைசி தேதி : 30.11.2022

மத்திய ரிசர்வ் போலீஸில் (CRPF) காலியாக உள்ள காவலர் பணியிடங்களை நிரப்ப மத்திய பணியாளர் தேர்வு வாரியம் (SSC) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. காவலர் ஆக வேண்டும் என நினைப்பவர்கள் இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

மத்திய அரசின் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு எஸ்.எஸ்.சி தேர்வுகளை நடத்தி தகுதியானவர்களை நியமித்து வருகிறது. அந்த வகையில் 10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான தகுதியில் மத்திய ரிசர்வ் போலீஸ் (Central Armed Police Forces) மற்றும் SSF, Rifleman (GD) in Assam Rifles and Sepoy in Narcotics Control Bureau ஆகிய பிரிவுகளில் 24,369 கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 
காலியிடங்களின் விவரம் 

பணியின் பெயர்: கான்ஸ்டபிள் (Constable and Sepoy)

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை – 24,369

BSF – 10,497 (ஆண்கள் – 8,922, பெண்கள் – 1,575)

CISF – 100 (ஆண்கள் – 90, பெண்கள் – 10)

CRPF – 8,911 (ஆண்கள் – 8,380, பெண்கள் – 531)

SSB – 1,284 (ஆண்கள் – 1,041, பெண்கள் – 243)

ITBP – 1,613 (ஆண்கள் – 1,371, பெண்கள் – 242)

AR – 1,697 (ஆண்கள்)

SSF – 103 (ஆண்கள் – 78, பெண்கள் – 25)

NCB – 164

கல்வித் தகுதி : இந்த பதவிகளுக்கு 10 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயதுத் தகுதி : 01.01.2023 அன்று 18 வயது முதல் 23 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இருப்பினும், SC/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுகளுக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு உண்டு.

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு கணினி வழி தேர்வு (Computer Based Examination) மற்றும் உடற்தகுதி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கணினி வழி தேர்வு 160 மதிப்பெண்களுக்கு 1 மணி நேர கால அளவில் நடைபெறும். இந்த தேர்வில் ஆங்கிலம் (General English), பொது அறிவு (General Awareness), திறனறிதல் (General Intelligence & Reasoning), கணிதம் (Numerical Aptitude) ஆகிய பகுதிகளில் இருந்து தலா 20 கேள்விகள் என மொத்தம் 80 கேள்விகள் கேட்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://ssc.nic.in/ என்ற இணையதள பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ. 100, இருப்பினும் SC/ST பிரிவினர் மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 30.11.2022

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_ctgd_27102022.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

Key word : SSC,  CRPF,  CENTRAL GOVERNMENT POST, CRSF,  BSF,  SSB,  ITBP,  AR,  SSF

Post a Comment

0 Comments