கம்ப்யூட்டர் படித்தால் காசு அள்ளலாம்! - எந்த பணிக்கு எந்த படிப்பு ஒரு பார்வை.

வேலையைப் பொறுத்தவரை ஒரு வற்றாத ஜீவநதி இருக்குமென்றால் அது கம்ப்யூட்டர் துறைதான். அது, இது என்றில்லாமல் எல்லாத் துறைகளிலும் ஊருடுவிவிட்டது கம்ப்யூட்டர். +2 முடித்த பிறகு, B.Sc., BCA, BE, B.Tech என கம்ப்யூட்டர் சார்ந்த பட்டப்படிப்புகளைப் படித்தவர்களுக்கு மட்டுமின்றி, குறிப்பிட்ட ஒரு தொழில்நுட்பத்தை மட்டும் கற்றுக் கொண்டவர்களுக்கும் வேலை வாய்ப்பு மிகுந்திருக்கிறது. குறுகிய காலப் பயிற்சிகள் பெற்று, எவரும் அந்த வேலை வாய்ப்புகளைப் பெற்று, கைநிறைய சம்பாதிக்க முடியும். சிறப்பு என்னவென்றால் இந்த வேலைகளை வீட்டிலிருந்தே கூட செய்ய முடியும். 

மிகச்சிறந்த எதிர்காலத்தை உருவாக்கித் தரும் சில வேலை வாய்ப்புகள்... படிப்புகள்..!

👩‍💻 இ-டைப்பிஸ்ட்

கம்ப்யூட்டரில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் டைப் செய்யத் தெரிந்து வைத்திருந்தால் பதிப்பகங்கள், பத்திரிகைகள், டேட்டா என்ட்ரி நிறுவனங்கள் போன்றவற்றுக்கு ஜாப் ஒர்க் செய்து கொடுத்து சம்பாதிக்கலாம். பத்திரிகை நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் அதிகம் உள்ளது.  என்ன படிக்க வேண்டும்? எம்.எஸ்.வேர்ட் சாஃப்ட்வேரோடு, எக்ஸெல் தெரிந்துவைத்திருந்தால் போதும்.  

👩‍💻 இ-அக்கவுன்டன்ட்/ அக்கவுன்ட்டிங் சாஃப்ட்வேர்கள்

கம்ப்யூட்டரில் அக்கவுன்ட்டிங் சாஃப்ட்வேர்களைக் கற்று வைத்துக் கொண்டால், மாநகரங்களைத் தவிர்த்துச் சிறிய கிராமப்புறங்களிலும், சிறிய நகரங்களிலும் வீட்டிலிருந்தபடி சிறிய கடைகளில், வியாபார நிறுவனங்களில், கம்ப்யூட்டர் இல்லாத இடங்களில் அவர்களை அணுகி, அவர்களது அக்கவுன்ட்ஸை கம்ப்யூட்டரில் பராமரிக்கும் வேலையை வாங்கிச் செய்யலாம்.

இந்தப் பணிக்கு வேலைவாய்ப்பும் அதிகம் உள்ளது. என்ன படிக்க வேண்டும்? 

டேலி (Tally), Tally ERP with GST, இ.எக்ஸ் (E.x)போன்ற அக்கவுன்டிங் சாப்ட்வேர்களைப் படித்தால் போதும்.

👩‍💻 இ-பிரிஸ்கிரிப்ஷன்

வெளிநாடுகளில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரியும் டாக்டர்கள், அன்றாடம் அவர்கள்  பார்க்கும் நோயாளிகளின் குறிப்புகளையும், அதற்கான மருத்துவப் பணிகள் பற்றிய செய்திகளையும் கம்ப்யூட்டரில் பதிவு செய்துவிட்டுக் கிளம்பிவிடுவர். அந்த மருத்துவக் குறிப்புகளை நம் நாட்டில் இருக்கும் நபர்கள் புரிந்து கொண்டு ரிப்போர்ட்டுகளைத் தயார் செய்து, வெளிநாட்டு டாக்டர்களின் பார்வைக்கு அனுப்பிவிடுவார்கள். இந்த  வேலைக்குப் பெயர்தான் மெடிக்கல் டிரான்ஸ்கிரிப்ஷன். வீட்டில் இருந்தபடி செய்யலாம் அல்லது மெடிக்கல் டிரான்ஸ்கிரிப்ஷன் செய்கின்ற நிறுவனங்களுக்குப் பணிக்குச் செல்லலாம்.

என்ன படிக்க வேண்டும்?

மெடிக்கல் டிரான்ஸ்கிரிப்ஷன் என்ற சாப்ட்வேரை படிக்க வேண்டும்.

👩‍💻 இ-பப்ளிஷிங்/ DTP 

காகிதத்தில் அச்சடிக்கப்படும் பெரும்பாலான புத்தகங்களும் பத்திரிகைகளும் வெப்சைட்டில் வெப் பக்கங்களில் படிக்கும்படியான புத்தகங்களாகவும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதுபோல ஆன்லைனில் படிக்க உதவும் புத்தக வடிவமைப்புக்கு இ-பப்ளிஷிங் என்று பெயர். இ-பப்ளிஷிங் வடிவமைப்புக்கு உதவும் சாஃப்ட்வேர்களைக் கற்றுக்கொண்டு பதிப்பகங்களை அணுகி ஆர்டர் பெறலாம் அல்லது அங்கேயே பணிக்குச் செல்லலாம். 

என்ன படிக்க வேண்டும்? 

அடோப் இன்-டிஸைன், போட்டோஷாப், இல்லஸ்டிரேட்டர், கோரல் டிரா, ஹெச்.டி.எம்.எல், பி.எஸ்.பி போன்ற இன்டர்நெட் மொழிகளைப் படிக்க வேண்டும்.

👩‍💻 இ-டியூஷன்

கம்ப்யூட்டர், இன்டர்நெட் தொழில் நுட்ப வளர்ச்சியின் உச்சகட்டத்தில் இருக்கும் இன்று உட்கார்ந்த இடத்தில் இருந்தே வகுப்புகளை எடுக்கவும், வகுப்புகளைக் கவனிக்கவும் வாய்ப்புகள் வந்துவிட்டன. ‘ஆன்லைன் டியூஷன்’ என்ற வசதிதான் அது. இதனை டியூஷன் எடுக்க ஆர்வம் இருக்கின்ற யார் வேண்டுமானாலும் கற்றுக்கொண்டு வீட்டிலிருந்தபடி சம்பாதிக்க முடியும். அமெரிக்கா போன்ற நாடுகளில் வாழும் தமிழர்கள் ஸ்கைப்பில் மிருதங்கம், வயலின், பாட்டு என சர்வ கலைகளையும் ஆன்லைனில் கற்று வருகிறார்கள். கற்றுத்தருபவர்கள் நம்மூர் வாத்தியார்கள்தான்.

என்ன படிக்க வேண்டும்?

அடிப்படை கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் தொழில்நுட்பங்கள் அனைத்தும் அறிந்து வைத்திருப்பது சாலச்சிறந்தது. மேலும், அவரவர் சப்ஜெக்ட்டில் புலமை பெற்றிருத்தல் அவசியம். Zoom meeting, Google classroom போன்ற ஆன்லைன் சேவைகளை பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.

👩‍💻 வடிவமைப்பு - டெஸ்க் டாப் பப்ளிஷிங்

நாம் படிக்கின்ற பத்திரிகைகள், புத்தகங்கள் போன்றவற்றில் உள்ள தகவல்களை வடிவமைக்கும் தொழில்நுட்பத்துக்கு டி.டி.பி. என்று பெயர்.  பெரும்பாலான பதிப்பகங்கள் இன்று தங்கள் புத்தகங்களை லே -அவுட் செய்யும் பணியை விரைவாக முடித்துத் தருகின்ற தனியார் டி.டி.பி. பணியாளர்களைக் கொண்டே செய்து முடிக்கின்றன. இத்தொழிலில் நேர்மையும், குறித்த நேரத்துக்குள் பணியை முடிக்கின்ற திறனும் இருந்துவிட்டால் போதும், பணத்தை அள்ளலாம். 

என்ன படிக்க வேண்டும்?

அடோப் இன்-டிஸைன் Adobe InDesign) அடோப் போட்டோஷாப் (Adobe Photoshop) இல்லஸ்டிரேட்டர் (Adobe Illustrator) கோரல் டிரா (CorelDraw Graphics Suite)

Adobe Photoshop
Best for Raster and Layer Editing 

Adobe Illustrator
Best for Vector Editing and Illustration 

Adobe InDesign
Best for Publication Layout and Design 

Adobe XD
Best for Web and Mobile Interface Design

CorelDraw Graphics Suite
Best for All-in-One Illustration and Page Design

Sketch
Best for Collaborative Interface Design and Prototyping

Adobe Creative Cloud Express
Best for Template-Driven Social Posts

https://www.pcmag.com/picks/the-best-graphic-design-software

👩‍💻 புகைப்படம் மற்றும் வீடியோ வடிவமைப்பு  

போட்டோ வீடியோ எடிட்டிங் திருமணம், பிறந்த நாள் போன்ற வீட்டு நிகழ்ச்சிகளானாலும் சரி, கார்ப்பரேட் நிறுவன அலுவலக நிகழ்ச்சிகளானாலும் சரி புகைப்படம் மற்றும் வீடியோ என்பது கட்டாயமாகி உள்ளது. அவற்றை எடிட் செய்து ஆல்பம் தயாரிப்பதையே முக்கியப் பணியாகக்கொள்ளும் அளவுக்கு அதில் எதிர்காலம் உள்ளது.

என்ன படிக்க வேண்டும்?

அடோப் போட்டோஷாப், இல்லஸ்டிரேட்டர், பிரிமியர் (Adobe Premier) ஆப்பில் ஃபைனல்கட் புரோ (Apple Finalcut Pro) போன்ற வீடியோ எடிட்டிங் சாப்ட்வேர்களில் திறன்

👩‍💻 ஆடைகளில் வடிவமைப்பு - டெக்ஸ்டைல் டிஸைனிங்

நாம் அணியும் ஆடைகளில், பட்டுப் புடவைகளில் உள்ள டிஸைன்கள் அனைத்துமே கம்ப்யூட்டர் மூலம் வடிவமைக்கப்படுபவையே. அந்தத் தொழில்நுட்பத்துக்கு ‘டெக்ஸ்டைல் டிஸைனிங்’ என்று பெயர்.  கிரியேடிவிடிதான் இத் துறையின் மிகப் பெரிய முதலீடு.
என்ன படிக்க வேண்டும்?

கோரல் டிரா, போட்டோஷாப்பில் கூட ஆடை வடிவமைப்பு செய்ய முடியும் என்றாலும் அதை கற்றுக்கொடுக்கும் பயிற்சி நிறுவனங்கள் அதற்காகவே பிரத்யேகமாக வைத்துள்ள சாஃப்ட்வேர்களிலும் பயிற்சி தேவை.

👩‍💻 வெப்சைட் வடிவமைப்பு - வெப் டிஸைனிங்

இன்டர்நெட்டில் வெப்சைட்டு
களில் உள்ள வெப் பக்கங்களில் தகவல்களை முறையாக வடிவமைத்து வெளிப்படுத்தும் வேலையே வெப் டிஸைனிங் எனப்படுகிறது. கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் மொழிகளைக் கற்றுக்கொண்டு, கிரியேடிவிடியுடன் செயல்பட்டால் போதும், இத்தொழிலிலும் நல்ல வருமானம் பார்க்க முடியும். மிகச் சுலபமாக வெப் டிஸைனிங் செய்வதற்கு ஏராளமான வசதிகள் உள்ளன.

என்ன படிக்க வேண்டும்?

ஹெச்.டி.எம்.எல், பி.ஹெச்.பி, ஜாவா ஸ்கிரிப்ட், விபி ஸ்கிரிப்ட், ஜாவா, டாட் நெட் என பல்வேறு இன்டர்நெட் மொழிகளில் புலமை தேவை. வேர்ட் பிரஸ், ஜூம்லா போன்ற வெப்டிஸைனிங் பேக்கேஜ்கள் கற்றுப் பழகி இருந்தால் வெப்சைட்டுகளை எளிதாக வடிவமைக்கலாம்.

👩‍💻 கட்டடங்களில் வடிவமைப்பு  CAD

கட்டட வடிவமைப்புக்கும் கம்ப்யூட்டரில் ஏராளமான சாஃப்ட்வேர்கள் உள்ளன. இதற்கு Computer Aided Designing and Drafts (CAD) என்ற சாஃப்ட்வேரைக் கற்றுக்கொண்டால், ரியல் எஸ்டேட் பணி சிறப்பாக உள்ள இந்நாளில் கட்டட கான்ட்ராக்டர்களை அணுகி  ஆர்டர் எடுத்து வருமானம் ஈட்டமுடியும்.

என்ன படிக்க வேண்டும்?

CAD, AutoCAD, 3D studioMax, Archi CAD போன்ற சாஃப்ட்வேர்களில் பயிற்சி தேவை.

👩‍💻 மல்டி மீடியா

நமது கற்பனைக்கு எட்டாத ஒரு கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுப்பதுதான் அனிமேஷன். மல்டி மீடியாவின் அடிப்படை ஆதாரமாக உள்ள அனிமேஷன் துறையில் ஏராளமான வேலை மற்றும் தொழில் வாய்ப்புகள் உள்ளன. கிரியேடிவிடி! இது ஒன்றுதான் இத்துறையின் மிகப்பெரிய முதலீடு. கார்ட்டூன் அனிமேஷன் நிறுவனங்கள், கல்வி சம்பந்தப்பட்ட மல்டிமீடியா சிடிக்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் போன்றவற்றை அணுகினால், இத்துறையில் பெரிய அளவில் சம்பாதிக்க முடியும்.

என்ன படிக்க வேண்டும்?

அடிப்படையில் ஃப்ளாஷ் (Adobe Flash), ஆஃப்டர் எஃபக்ட் (Adobe After Effects), மாயா Maya, டிரீம் வீவர் (Adobe Dreamweaver), போட்டோஷாப், இல்லஸ்டிரேட்டர், கோரல் டிரா, ப்ரீமியர் (Adobe Premiere) போன்ற சாப்ட்வேர்களில் புலமை தேவை என்றாலும், அனிமேஷன் பயிற்சி தரும் நிறுவனங்கள் கொடுக்கின்ற முழுமையாகப் பயிற்சியில் தேர்ச்சிப் பெற்றிருத்தல் அவசியம்.

Keyword : Computer course,  Computer job,  part-time job

Post a Comment

0 Comments