இந்தியாவின் டிஜிட்டல் கரன்சி (e₹) இன்று (01.11.2022) வெளியீடு


*♾️♾️   ႮᏢᎠᎪͲᎬ    ♾️♾️*

 ⏭️  *இந்தியாவின் டிஜிட்டல் கரன்சி: இன்று (01.11.2022) வெளியீடு*

⏭️ *e₹ என்று சொல்லப்படும் இந்தியாவின் டிஜிட்டல் கரன்சி நாளை முதல் செயல்பாட்டுக்கு வரும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.*

 ⏭️ *அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் Wholesale பரிவர்த்தனைகளுக்காக சோதனை முயற்சியில் நாளை முதல் டிஜிட்டல் ருபாய் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.*

⏭️ *அதனைத் தொடர்ந்து ஒரு மாதத்தில் Retail பரிவர்த்தனைகளுக்கும் டிஜிட்டல் பணம் நடைமுறைக்கு வரும்.*

*Digital Currency*

நாம் தினசரி பயன்படுத்தும் பணம் என்பது பேப்பர் வடிவிலும் உலோக நாணய வடிவிலும் உள்ளது. இதே போல டிஜிட்டல் கோட்கள் (Digital Code) மூலம் உருவாக்கப்படுவது டிஜிட்டல் நாணயங்கள் அல்லது டிஜிட்டல் கரன்சி என்று கூறப்படுகிறது.

இவற்றை அரசாங்கம் மட்டுமின்றி தனியார் நிறுவனங்களும் தயாரித்து வருகின்றன. காகித பணத்திற்கு சமமாக இந்த டிஜிட்டல் பணமும் மதிக்கப்படும்.

இந்த டிஜிட்டல் நாணயத்தை ஒரு சில நாடுகள் மட்டும் அங்கீகரித்துள்ளன. இந்தியாவில் 2022-23ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ரூபாய்க்கு இணையான டிஜிட்டல் நாணயங்களை ரிசர்வ் வங்கி வெளியிடும் என அறிவித்திருந்தார். அதன்படி, நாடு முழுவதும் சோதனை முறையில் டிஜிட்டல் நாணயங்களை நாளை அறிமுகப்படுத்த உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

பாரத ஸ்டேட் வங்கி, பேங்க் ஆப் பரோடா, யூனியன் பேங்க் ஆப் இந்தியா, எச்.டி.எப்.சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, கோடக் மகேந்திரா வங்கி, யெஸ் வங்கி, ஐ.டி.எப்.சி பர்ஸ்ட் வங்கி, எச்.எஸ்.பி.சி வங்கி ஆகிய 9 வங்கிகள் மூலம் டிஜிட்டல் நாணயம் அறிமுகம் செய்யப்படுகிறது.

அடுத்த ஒரு மாதத்திற்குள் முழு பயன்பாட்டிற்கு வரும் எனவும், அரசு பத்திரங்கள், பங்கு சந்தை பரிவர்த்தனை பயன்பாட்டிற்கு இந்த டிஜிட்டல் நாணயம் பயன்படுத்தலாம் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
Key word : E currency, bitcoin

Post a Comment

0 Comments