SSLC பொதுத்தேர்வு எழுதிய தனித்தேர்வர்களுக்கு ஒரிஜினல் சான்றிதழ் வழங்கும் தேதி அறிவிப்பு!

தமிழ்நாடு பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு துணைத்தேர்வு எழுதிய தனித்தேர்வர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் தேதி இடம் குறித்து அரசு தேர்வுகள் இயக்ககம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. எப்படி வாங்குவது? எங்கு வாங்க வேண்டும் என்பதை கட்டுரையில் தெரிந்து கொள்ளுங்கள்.
 
கடந்த 2022 ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடைபெற்று முடிந்த பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு +2 வகுப்புகளுக்கான துணைத்தேர்வு எழுதிய தனி தேர்வர்களுக்கு ஒரிஜினல் மதிப்பெண் சான்றிதழ்கள் அல்லது மதிப்பெண் பட்டியல் வழங்குவது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

பல்வேறு சூழல்களால் நேரடி கல்வி நிலைய படிப்பை தொடர முடியாமல் அல்லது கல்வி நிலயத்திற்கே செல்ல முடியாமல் தனித்தேர்வர்களாக பதிந்து பலரும் தங்கள் முயற்சியிலேயே படித்து அரசின் பொது தேர்வுகளை எழுதி தேர்ச்சி பெற்று வருகின்றனர். வருடம்தோறும் நேரடி பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடக்கும் சமயத்தில் அல்லது முன்பின் தள்ளி இவர்களுக்கான தேர்வும் நடத்தப்படும்.

அப்படி தேர்வெழுதியும் தேர்ச்சி பெறாமல் இருக்கும் மாணவர்களுக்கு நேரடி பள்ளி மாணவர்களை போலவே துணைத்தேர்வுகள் நடத்தப்படும். கல்வியாண்டு 2022க்கான பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாமல் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடைபெற்ற துணைத்தேர்வுகளில் பங்குபெற்று தேர்வுழுதியுள்ள பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் / ஒரிஜினல் மதிப்பெண் சான்றிதழ் 31/10/2022 அன்று திங்கட்கிழமை முதல் வழங்கப்படுகிறது.

தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய மையங்களிலேயே தங்களது சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம். மேலும் விவரங்களை அறிந்துக் கொள்ள விரும்பும் நபர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக தெரிந்துக் கொள்ளலாம். மாணவர்கள் தங்களின் தேர்வு எண் மற்றும் சுய விவரங்களோடு சென்று தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments