மருத்துவ கல்லூரிகள் இவ்வளவு தான் கட்டணம் வசூலிக்க வேண்டும், தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

தனியார் மருத்துவ கல்லூரிகள் அதிக கட்டணம் வசூலிக்க கூடாது என்பதற்காகவும் , மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டும் கல்விக் கட்டணத்தை நிர்ணயிப்பதற்கான குழு நீதிபதி வெங்கட்ராமன் அவர்களின் தலைமையில் இயங்கி வருகிறது. இந்த குழுவில் சுகாதார துறையின் செயலாளர் உட்பட உறுப்பினர்கள் இருப்பர்.

தனியார் மருத்துவ கல்லூரிகள் முன்மொழியும் கல்விக்கட்டணத்தை ஆய்வு செய்து , அது நியாயமானதாக இருக்கும் பட்சத்தில் அதை அங்கீகரிப்பது மற்றும் கல்லூரிகளுக்கு ஆலோசனை வழங்குவது போன்ற வேலைகளை இந்த குழு செய்து வருகிறது. இந்நிலையில் கல்வியாண்டு 2022 - 2023 க்கான தனியார் மருத்துவ கல்லூரிகளின் கல்விக் கட்டணத்தை இறுதி செய்து தற்போது வெளியிட்டுள்ளது.

இந்த கல்வி கட்டணம் ஆசிரியர்களின் சம்பளம் உட்பட 20 விதமான காரணங்களை கொண்டு தீர்மானிக்கப்படுகிறது. கமிட்டி நிர்ணயித்துள்ள கட்டணத்தை மீறி ஒரு ருபாய் கூட கல்லூரிகள் மாணவர்களிடம் இருந்து வசூலிக்கக் கூடாது. இந்த கல்விக்கட்டண நடைமுறை மூன்று ஆண்டுகள் செயல்பாட்டில் இருக்கும். இதற்கு இடையில் எந்த கல்லூரியாவது கட்டணத்தை உயர்த்த நினைத்தால் கமிட்டியை அணுகலாம்.

அதன்படி இந்தாண்டு 18 தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கான கல்விக் கட்டணத்தை நிர்ணயித்து வெளியிட்டுள்ளது. அரசு ஒதுக்கீடு இடங்களுக்கு 4,50,000 த்தில் துவங்கி மேனேஜ்மென்ட் ஒதுக்கீடு இடங்களுக்கு 13,50,000 மற்றும் என்ஆர்ஐ மாணவர்களுக்கு 24,50,000 NRI Lapsed ஒதுக்கீடு இடங்களுக்கு 21,50,000 என்று கல்விக்கட்டணம் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதோடு கல்லூரிகள் மாணவர்களிடமிருந்து வளர்ச்சி கட்டணம் என்ற பெயரில் 40000 ரூபாய் வாங்கி கொள்ளலாம்.

மேற்குறிப்பிட்ட கட்டணத்தில் விடுதி கட்டணம், உணவு அல்லது போக்குவரத்து ஏற்பாடுகள் உள்ளிட்ட கட்டணங்கள் அடங்காது. இதை மீறி கல்லூரிகள் நடந்துக் கொண்டால் அபராதம் விதிப்பது முதல் கல்லூரியின் உரிமம் ரத்து செய்யுமளவுக்கு நடவடிக்கை எடுக்கப்படலாம்.

Post a Comment

0 Comments