கிராம நிர்வாக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க தேவையான விவரங்கள்
கடைசி தேதி : 07.11.2022
தேர்வு நாள் : 30.11.2022
நேர்முகத்தேர்வு நாள் :15,16-12-2022
கல்வித்தகுதி : 5ம்வகுப்பு தேர்ச்சி
1. பெயர்
2. கணவர் / தந்தை பெயர்
3. முகவரி & pincode
4.மதம்& இனம்
5.பிறந்த தேதி
6. சொந்த மாவட்டம்
7. தாலுகா
8. கிராமம்
9. விண்ப்பிக்கும் இடம் (ஒரு மாவட்டத்திற்கு குறிப்பிட்ட தாலுகாவில் குறிப்பிட்ட கிராமத்தை உள்ளடக்கிய இடத்திற்கு ஒரு விண்ணப்பம் மட்டுமே)
10. மொபைல் எண்
11. மெயில் Id
12. கல்வித்தகுதி (5 pass 01.07.2022 நிலவரப்படி)
13. தொழில்நுட்ப தகுதி ஏதாவது இருந்தால்
14. சைக்கிள் ஓட்டத்தெரியவேண்டும் (கட்டாயம்)
15. ஓட்டுநர் உரிமம் விவரம் லைசன்ஸ் (கட்டாயமில்லை)
16. 2 வீலர், 4 வீலர் ஓட்டத்தெரியுமா?
17. படிக்க எழுத தெரிந்த மொழிகள்
18. கிரிமினல் வழக்கு ஏதேனும் உள்ளதா?
தேவையான ஆவணம்
1. புகைப்படம்
2. கையொப்பம்
3. இருப்பிடச்சான்று
4. கல்வி தகுதிச்சான்று
5. லைசன்ஸ் (கட்டாயம் இல்லை)
6. சாதிச்சான்றிதழ்
2748 கிராம உதவியாளர் பணியிடங்கள்; குறைந்தபட்ச கல்வித் தகுதி போதும்; உடனே அப்ளை பண்ணுங்க!
தமிழக அரசின் வருவாய் துறையில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் மொத்தம் 2748 பணியிடங்கள் நிரப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
தமிழகத்தில் காலியாக உள்ள 2748 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி இதற்கான விளம்பரம் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியானது.
விண்ணப்பங்களை நவம்பர் 7 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் பரிசீலனை நவம்பர் 14 ஆம் தேதி வரை நடைபெறும். இதற்கான எழுத்துத் தேர்வு நவம்பர் 30 ஆம் தேதியும், நேர்காணல் டிசம்பர் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் நடத்தப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தற்போது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி : குறைந்தபட்சம் 5 ஆம் வகுப்பு தேர்ச்சியும், தமிழில் எழுத, படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : பொதுப்பிரிவினர் 21 முதல் 32 வயதிற்குள் இருக்க இதர பிரிவினர் 37 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ 11,100 – 35,100
தேர்வு முறை: இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
இந்தப் பணியிடங்களுக்கு அந்தந்த வட்டத்தில் உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். எனவே உங்களுடைய மாவட்ட இணையதளப் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளவும்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://agaram.tn.gov.in/onlineforms/formpage_open.php?id=43-171 என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்
விண்ணப்பிக்க கடைசி தேதி: 07.11.2022
இது தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய அந்தந்த மாவட்ட அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்புகளைப் பார்வையிடவும்.
0 Comments
*இங்கு இடம்பெறும் கருத்துக்கள் யாவும் பார்வையாளர்களின் சொந்த கருத்தாகும்
* கருத்துக்கள் பண்பட்ட வாரத்தைகளாக அமைய வேண்டுகிறேன் .
* தவறுகளை சுட்டிக்காட்டும் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது
*உங்கள் கருத்துக்கள் பிறறைப் புண்படுத்தும் வகையில் இருந்தால் உடனடியாக நீக்க உரிமையாளருக்கு முழு உரிமை உண்டு. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.