யோகா படிப்பில் சேர அக்டோபர் 19 வரை விண்ணப்பம்!

யோகா மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு அக்., 19 வரை விண்ணப்பிக்கலாம் என, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை வெளியிட்ட செய்தி குறிப்பு:

அரசு மற்றும் சுயநிதி யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லுாரிகளில், 2022 - 23-ம் ஆண்டுக்கான இளங்கலை யோகா மற்றும் இயற்கை மருத்துவ பட்டப் படிப்புக்குக்கான விண்ணப்பப்பதிவு துவங்கி உள்ளது.

பிளஸ் 2வில் அறிவியல் பாடங்களுடன் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், www.tnhealth.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக அக்., 19க்குள் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்ப கட்டணம், கவுன்சிலிங் தொடர்பான தகவல்களை இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, 

செயலர், 
தேர்வுக்குழு, 
இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குனரகம், சென்னை - 106 

என்ற முகவரிக்கு தபால் அல்லது நேரடியாகவோ அக்., 19 மாலை 5:30 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

B.N.Y.S - இளநிலை இயற்கை மருத்துவம் மற்றும் யோகா அறிவியல் படிப்பு (Bachelor of Naturopathy and Yogic Science) நீட் தேர்வு மதிப்பெண் தேவையில்லை.

'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்பது சான்றோர் வாக்கு. ஆனால் எங்கு சுற்றிலும் நோய்களின் பிடியில்தான் மனிதகுலமே உள்ளது. மனித குலத்தை அல்லல் பட வைக்கும் நோய்களைக் கட்டுப்படுத்தியும், நோய்கள் வராமல் தடுத்தும் ஆரோக்கியமான வாழ்வை வாழ வைப்பது இயற்கை மருத்துவம். சித்தா, ஆயுர்வேதம், யுனானி போன்ற பாரம்பர்ய இயற்கை மருத்துவத்தைதான் நமது முன்னோர்கள் பின்பற்றி வந்தனர். காலப்போக்கில் இவற்றை நாம் மறந்துவிட, மீண்டும் தற்போது இயற்கை மருத்துவம் எழுச்சி பெற்று வருகிறது.

MBBS,BDS-க்கு மாற்று மருத்துவப் படிப்புகளான சித்த மருத்துவம், இயற்கை மற்றும் யோகா, ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானி மருத்துவம் ஆகியவற்றுக்கும் இன்று மக்கள் மத்தியில் வரவேற்பு பெருகியுள்ளது. இந்த இளநிலை மருத்துவப் படிப்புகள் தமிழ்நாடு டாக்டர்.எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட எம்.பி.பி.எஸ் படிப்புகளுக்கு இணையானவை.

ஆரோக்கியமற்ற உணவு, உடற்பயிற்சியின்மை, ஒழுங்கற்ற வாழ்க்கைமுறை ஆகியவற்றால் உருவாகும் பல நாள்பட்ட நோய்களுக்குத் தீர்வளிக்க இயற்கை மருத்துவம் மற்றும் யோகா உதவிபுரிகிறது. 

இந்திய மருத்துவ முறைகளில் ஒன்றான இயற்கை மருத்துவம் மற்றும் யோகா அறிவியல் குறித்த கல்விகளை அளிக்கும் கல்லூரிகள் இயற்கை மருத்துவம் மற்றும் யோகா அறிவியல் கல்லூரிகள் என அழைக்கப்படுகின்றன.

🔹 எங்கு படிக்கலாம்?

இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின்கீழ் சென்னை அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்தில் ஒரு அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியும், 10 தனியார் கல்லூரிகளும் உள்ளன. அரசு கல்லூரியில் 60 இடங்களும், தனியார் கல்லூரிகளில் 800-க்கும் மேற்பட்ட இடங்கள் இருக்கின்றன. தனியார் கல்லூரிகளில் இருந்து அரசுக்கு 65 சதவீத இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.

கல்லூரி - ஊர் - மொத்த இடங்கள் 

அரசு யோகா அண்ட் நேச்சுரோபதி கல்லூரி - சென்னை - 60 இடங்கள். 

ஜெ.எஸ்.எஸ்.யோகா அண்ட் நேச்சுரோபதி கல்லூரி - கோயம்புத்தூர் - 100 இடங்கள்.

சிவராஜ் யோகா அண்ட் நேச்சுரோபதி கல்லூரி - சேலம் - 40 இடங்கள்.

ஸ்ரீ ராமகிருஷ்னா யோகா அண்ட் நேச்சுரோபதி கல்லூரி - படநிலம், குலசேகரம் - 100 இடங்கள்.

SVS யோகா அண்ட் நேச்சுரோபதி மருத்துவ கல்லூரி - கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டம்- 50 இடங்கள்.

எக்ஸல் யோகா அண்ட் நேச்சுரோபதி மருத்துவ கல்லூரி - சங்கரி வெஸ்ட், பள்ளக்கப்பாளையம், கொமாரப்பாளையம் தாலுகா, நாமக்கல் மாவட்டம் - 100 இடங்கள்.

நந்தா யோகா அண்ட் நேச்சுரோபதி மருத்துவ கல்லூரி - பிச்சான்டம்பாளையம், ஈரோடு மாவட்டம் - 60 இடங்கள்.

அன்னை யோகா அண்ட் நேச்சுரோபதி மருத்துவ கல்லூரி - கோவிலச்சேரி, கும்பகோணம் - 100 இடங்கள்.

கிருஷ்னா யோகா அண்ட் நேச்சுரோபதி மருத்துவ கல்லூரி - கோட்டைமேடு, மனச்சநல்லூர் தாலுகா, திருச்சி மாவட்டம்- 100 இடங்கள்.

மதர் தெரசா யோகா அண்ட் நேச்சுரோபதி மருத்துவ கல்லூரி - வில்லுப்பட்டி, இழுப்பூர் தாலுகா, புதுக்கோட்டை மாவட்டம்- 100 இடங்கள்.

S. தங்கப்பழம் யோகா அண்ட் நேச்சுரோபதி மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் - நலனபுரம், சிவகிரி தாலுகா, தென்காசி மாவட்டம்- 100 இடங்கள்.

Post a Comment

0 Comments