பெண் குழந்தைகளை கௌரவிக்கும் வகையில் இன்று மகள்கள் தினம் உலகின் பல்வேறு பகுதிகளில் செப்டம்பர் மாதம் நான்காவது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது.
ஆண்களின் வாழ்வில் ஒவ்வொரு கட்டத்திலும் கடந்து செல்பவர்கள்தான் பெண்கள். அம்மாவாக, காதலியாக, தோழியாக, மனைவியாக, உறவினராக அன்பைப் பொழிகிறார்கள். இத்தனை பெண்களையும் தாண்டி, ஒருவனுக்கு மகிழ்ச்சியையும், வாழ்க்கை மீதான பிடிப்பையும் தருவது மகள் என்ற உறவு மட்டும்தான்....
பெற்றோர் எவ்வளவுதான் செல்லமாக வளர்த்தாலும், பெண் என்பவள் வேறொரு வீட்டில் வாழப்போகிறவளாகவே பார்க்கப்படுகிறாள். ஆனாலும், புகுந்தவீட்டிற்கு அவள் சென்றபின் பிறந்துவளர்ந்த வீடு வெறிச்சோடிப் போய் விடுகிறது...
சகோதர சகோதரிகளுடன் ஆடிப் பாடிய பால்ய பருவம், பூப்படைந்ததும் மாறி விடுகிறது. புகுந்த வீட்டிற்குச் சென்றபின் புதுப்புது உறவுகள் என பெண்ணுக்கு புதுப் பிறவியாகவே அமைகிறது.
மகள் பிறந்த போது அவள் வடிவில் ஒரு தாயும் பிறக்கிறாள் என்பது பழமொழி. கருத்தரிக்கும் பேறு- இயற்கை பெண்களுக்குத்தான் தந்துள்ளது. பத்துமாதம் சுமந்து குழந்தையைப் பிரசவிக்கும்போது அவள் மறுபிறவி எடுக்கிறாள்..
அனைத்துத் துறைகளிலும் பெண்கள் ஆளுமை செலுத்திவரும் இந்தக் காலத்தில், பெண்சிசுக்கொலை, பாலியல் வன்கொடுமை, குழந்தைத் திருமணம் போன்ற கொடுமைகளும் நடைபெறத்தான் செய்கின்றன. பெண்களுக்கு எதிரான தீங்குகள் ஒழியட்டும், பெண்களின் பெருமையை இவ்வுலகம் என்றென்றும் போற்றட்டும்...
0 Comments
*இங்கு இடம்பெறும் கருத்துக்கள் யாவும் பார்வையாளர்களின் சொந்த கருத்தாகும்
* கருத்துக்கள் பண்பட்ட வாரத்தைகளாக அமைய வேண்டுகிறேன் .
* தவறுகளை சுட்டிக்காட்டும் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது
*உங்கள் கருத்துக்கள் பிறறைப் புண்படுத்தும் வகையில் இருந்தால் உடனடியாக நீக்க உரிமையாளருக்கு முழு உரிமை உண்டு. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.