59 ஆண்டுகளுக்கு பிறகு வானில் ஓர் அதிசயம்.. நாளை 26.09.2022 பூமிக்கு மிக அருகே வரும் "மெகா" கோள்.. இவ்வளவு பக்கமா?


நமது சூரிய குடும்பத்தில் மிகப்பெரிய கோளான வியாழன் கோள், பூமிக்கு மிக அருகில் வரும் 26-ம் தேதி (நாளை ) வரவுள்ளதாக நாசா அறிவித்துள்ளது.

59 ஆண்டுகளுக்கு பிறகு வானில் இப்படி ஓர் அற்புத நிகழ்வு நடைபெறவுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அன்றைய தினம் வியாழன் கோளின் பிரம்மாண்டத்தை மனிதர்கள் காண முடியும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

நமது பிரபஞ்சம் எண்ணிலடங்காத சூரியக் குடும்பங்களையும், நட்சத்திரக் கூட்டங்களையும் உள்ளடக்கிய ஒன்று என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஒவ்வொரு சூரியக் குடும்பத்திலும் ஏராளமான கோள்கள் அமைந்திருக்கின்றன.

பிரம்மாண்ட கோள்

அந்த வகையில், நமது சூரியக் குடும்பத்தில் பூமி உட்பட 9 கோள்கள் இருக்கின்றன. இந்த கோள்களிலேயே மிகப் பெரியதாக அறியப்படுவது ஜூபிட்டர் எனப்படும் வியாழன் கோள் தான். இதன் அளவை விளக்குவது என்றால், நம் பூமியை போன்ற அளவுடைய 1,300 பூமிகளை வியாழன் கோளுக்குள் அடக்கிவிட முடியும் எனக் கூறலாம். அந்த அளவுக்கு பிரம்மாண்டமானது வியாழன் கோள்.

69 நிலவுகள்..

அதுமட்டுமல்லாமல், வியாழன் கோளுக்கு இன்னும் பல சிறப்பம்சங்கள் இருக்கின்றன. இது முழுக்க முழுக்க ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் வாயுக்கள் நிரம்பிய கோள் ஆகும். அனைத்து கோள்களையும் விட மிக வேகமாக சுற்றும் கோளாகவும் வியாழன் உள்ளது. சனிக் கோளை போலவே வியாழன் கோளை சுற்றிலும் வளையங்கள் அமைந்துள்ளன. இது தூசுப் படலங்களால் ஆனவை. அதேபோல, வியாழன் கோளில் 69 நிலவுகள் இருக்கின்றன.

59 ஆண்டுகளுக்கு பிறகு..

இத்தனை சிறப்பு வாய்ந்த பிரம்மாண்ட வியாழன் கோள் தான், நாளை 26.09.2022 பூமிக்கு மிக நெருக்கமாக வரவுள்ளது. 59 ஆண்டுகளுக்கு பிறகு வானில் நிகழும் ஓர் அரிய நிகழ்வு இது என நாசா விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். அன்றைய தினம், மேற்கில் சூரியன் அஸ்தமிக்கும் போது கீழக்கு திசையில் இருந்து வியாழன் எழுகிறது. இவ்வாறு பூமிக்கு நேர் எதிர் திசையில் நெருக்கமாக வியாழன் வருவதால் அதன் தோற்றம் மிக பிரம்மாண்டமாக இருக்கும்.

எவ்வளவு பக்கத்தில்?

வழக்கமாக, பூமியில் இருந்து 965 மில்லியன் கி.மீ. தொலைவில் இருக்கும் வியாழன் கோள், திங்கள்கிழமை அன்று பூமிக்கு 365 கி.மீ. தொலைவுக்கு நெருக்கமாக வந்துவிடும். இவ்வாறு பாதிக்கும் குறைவாக இரு கோள்களுக்கும் இடையேயான தூரம் குறைவதால், வியாழன் கோளை எந்த அளவுக்கு பக்கத்தில் காண முடியும் என நீங்களே சிந்தித்துக் கொள்ளுங்கள். இவ்வளவு பக்கத்தில் வருவதால் அன்றைய நாள் இரவு நம்மால் வியாழனை தெளிவாக பார்க்க முடியும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

அதே சமயத்தில், பைனாக்குலர் அல்லது சாதாரண டெலஸ்கோப்பை கொண்டு பார்த்தால் இன்னும் அருகாமையில் வியாழனின் பிரம்மாண்டத்தை பார்க்கலாம் எனவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இதற்கு முன்பு 1963-ம் ஆண்டு இந்த அற்புத நிகழ்வு வானில் நடந்ததாகவும், அதற்கு பின்னர் தற்போதுதான் இந்நிகழ்வு நடக்கவுள்ளதாகவும் நாசா கூறியுள்ளது.

Post a Comment

0 Comments