எண்ணும் எழுத்தும் - இணைய வழி சந்திப்பின் சில முக்கிய குறிப்புகள்

எண்ணும் எழுத்தும் - இணைய வழி சந்திப்பின் சில முக்கிய குறிப்புகள் 
 
* Module 1 க்குரிய FA( B ) செயல்பாடானது,  திங்கள்கிழமை வரை TNSED APP இல் இருக்கும்.. அதன் பின் நீக்கப்பட்டு விடும்... எனவே வெள்ளிக்கிழமை விடுமுறை எடுத்த மாணவர்கள்,  திங்கள்கிழமை வருகை புரிந்த பின், FA (B) மதிப்பீட்டை மேற்கொள்ளலாம்.. திங்கள் கிழமையும் அம்மாணவன் வரவில்லை என்றால், LONG ABSENT என்று பதிவு செய்து கொள்ளவும்...

* எண்ணும் எழுத்தும் ஆசிரியர் கையேட்டில், கடைசியாக கொடுக்கப்பட்டிருக்கும், *தமிழ் கையேடு( நான் கற்றவை - ப. எண் 99) ஆங்கில கையேடு( I CAN DO - ப. எண் - 103), கணித கையேடு( என்னால் முடியும்- ப. எண் - 95)* முதலியவற்றில் கொடுக்கப்பட்டிருக்கும் செயல்பாடுகள் *FA (A)* செயல்பாடுகள் ஆகும்...

* ஈராசிரியர் பள்ளி என்றால் 1-3 வகுப்புகள் ஒரு ஆசிரியரும், 4,5 ஆம் வகுப்புகளை தலைமை ஆசிரியரும் கையாள வேண்டும்...

* மூன்று ஆசிரியர்கள் பணிபுரியும் பட்சத்தில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பிரித்துக் கொள்ள வேண்டும்...
* எடுத்துக்காட்டாக ஒன்றாம் வகுப்பை ஒரு ஆசிரியரும், இரண்டு மற்றும் மூன்றாம் வகுப்புகளை ஒரு ஆசிரியரும், நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்புகளை தலைமை ஆசிரியரும் கையாள வேண்டும்....

* எந்த காரணம் கொண்டும் மூன்று மற்றும் நான்காம் வகுப்புகளை இணைத்து,  ஒரு ஆசிரியர் கையாளக்கூடாது

Post a Comment

0 Comments