செப் -5 மாநாடு?? முதல்வரை சந்தித்த ஜாக்டோ -ஜியோ நிர்வாகிகள்

*ஜாக்டோ- ஜியோ முதல்வருடன் சந்திப்பு.* 
இன்று 16/08/22 காலை *மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை* தலைமைச் செயலகத்தில் *ஜாக்டோ ஜியோ* ஒருங்கிணைப் பாளர்கள் *இரா.தாஸ், கு.தியாகராஜன், கு.வெங்கடேசன் ஆகியோர்* சந்தித்து 17 நிமிடங்கள் பேசினார்கள்.
*மாண்புமிகு முதல்வர் அவர்கள்* இன்முகத்துடன் வரவேற்று மகிழ்ச்சியாக உரையாடினார்கள்.
அப்போது 75 வது சுதந்திர தினத்தில் 
அகவிலைப்படி உயர்வு அளித்ததற்கு நன்றி தெரிவித்துக் வாழ்த்து கூறினோம்,  

கடந்த ஆட்சியில் ஒரு முறைகூட  முதல்வரை சந்திக்காத நிலை இருந்ததை யாரும் மறந்திருக்க மாட்டோம். 
ஆனால் தற்போதைய *முதல்வரை* மூன்று நான்கு முறை சந்திக்க வாய்ப்பை வழங்கிய *முதல்வரை இந்த நேரத்தில் எண்ணிப்பார்த்து ஜாக்டோ ஜியோ மகிழ்ச்சி அடைகிறது*.

*கடந்த 01/08/22 ல் சந்தித்து* கோரிக்கைகளை கொடுத்து  கோரிக்கை மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என்று கோரியபோது, *கோரிக்கை மாநாட்டை நன்றி அறிவிப்பு மாநாடாக* இருக்கும் வகையில் சில கோரிக்கைகளை அறிவித்துவிட்டு மாநாட்டில் கலந்து கொள்கிறேன் என்று கூறிய *மாண்புமிகு முதல்வர் அவர்கள்* தற்போது அகவிலைப் படியை அறிவித்து உள்ளார்கள்.
அதிலே ஆறுமாதம் இழப்பு ஏற்பட்டதை இன்றைய சந்திப்பில் சுட்டிக்காட்டி, *கலைஞர் வழியில் வந்த தாங்கள்* DA நிலுவைத் தொகையை அளிக்க வேண்டும் என்று அன்பான வேண்டுகோளை வைத்தோம்.
சில கோரிக்கைகளை அறிவித்துவிட்டு மாநாட்டில் கலந்து கொள்வதாக கூறிய *முதல்வர் அவர்கள்* இன்று அகவிலைப் படியை அறிவித்துள்ளார்கள்.
மாநாடு நடைபெறுவதற்குள் இன்னும் சில கோரிக்கைகள் அறிவிப்பார்கள் என்ற நம்பிக்கையை இன்றைய சந்திப்பு தந்தது.
மேலும் மாநாட்டின் தேதியை கேட்கும்போது *முதல்வர் அவர்கள்* உதவியாளரிடம் எந்த தேதி கொடுத்துள்ளோம் என கேட்க,உதவியாளர் அவர்கள் செப்டம்பர் 05 என்று கூறியதுடன் அன்றைக்கு வேறு நிகழ்ச்சி உள்ளதை அவரே நினைவுபடுத்தி இருப்பினும் ஆசிரியர் தினத்தில் மாநாட்டை வைப்பதுதான் சரியாக இருக்கும் என்று கூறியதோடு அன்றே வைத்துக் கொள்ளலாம் என்று கூறியது மட்டற்ற மகிழ்ச்சியை கொடுத்தது.

 *ஆசிரியர் அரசு ஊழியர் மீது அவருக்கு உள்ள அன்பையும் அக்கறையையும் வெளிப் படுத்துவதாக இருந்தது.*

*பங்களிப்பு ஓய்வூதியத்தை இரத்து செய்தல், அரசாணை 101,108, இரத்து,இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு,நிறுத்திவைத்துள்ள சரண்டர் மீண்டும் வழங்கவேண்டும் என்ற கோரிக்கை, ஆணையாளர் பணியிடத்தை இரத்து செய்து முன்புபோல் பள்ளிக் கல்வி இயக்குநர் பதவியை ஏற்படுத்துவது, பகுதிநேர பணியாளர்களை நிரந்தரமாக்குவது,தொகுப்பூதியத்தை இரத்து செய்யவது  போன்ற பல்வேறு கோரிக்கைகளை மீண்டும் வளியுறுத்தி முதல்வரிடம்* கேட்டுக் கொள்ளப்பட்டது.

*எல்லா காலங்களிலும் எல்லாமே நடந்துவிடுவது இல்லை நாட்டுக்கும் இது பொருந்தும்;வீட்டுக்கும் பொருந்தும்.*

ஜாக்டோ ஜியோவில் உள்ள ஒருங்கிணைப் பாளர்கள் வெளிப்படையாக சந்தித்த நிகழ்வுகளை வெளிப்படுத்திக் கொண்டு வருகின்றோம்.

*ஒரு பெரிய பாறாங்கல்லை பலரும் நகர்த்த முயன்று முடியாதபோது;சிறு கடப்பாரை அகற்றிவிடுவதைப்போல.* நமது 
 *ஜாக்டோ ஜியோ வின் அனுகுமுறை சொல்லுகின்ற சொற்கள், நடந்து செல்கின்ற பாதை எப்போதும் நல்லவழியில் இருக்கும்.* கண்டிப்பாக மாற்றத்தை கொண்டுவரும்.

*ஒரு சொல் கொள்ளும்* 

*ஒரு சொல் வெல்லும்*

வெல்லும் சொற்களையே பயண்படுத்துவோம்,வெற்றி பெறுவோம் என்ற 
*நம்பிக்கையோடு பயணம் செய்வோம்.*

*வங்கக்கடல் பெரிதா !*
*மாநாடு பெரிதா !* 

என வியக்கும் வண்ணம் *மாநாட்டை* நடத்திக்காட்டுவோம்.

*வெற்றி நமதே !*

*அன்புடன்.*
*ஜாக்டோ- ஜியோ* ஒருங்கிணைப் பாளர்கள்.

Post a Comment

0 Comments