உயர் நீதிமன்ற உத்தரவுபடி தமிழக பள்ளிகளில் பயிலும் 1மற்றும் 2 ம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் வழங்கக்கூடாது இன்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது மேலும் பள்ளிகளில் வீட்டுப்பாடம் வழங்கப்படுகிறதா இல்லையா என்பதை ஆய்வு செய்ய குழு அமைத்து அதன் அறிக்கையை சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டுள்ளது .
1, 2-ம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் ( Home Work)தரக்கூடாது.
சென்னை உயர்நீதிமன்றம் வீட்டுப்பாடம் தர தடை விதித்துள்ள நிலையில், அதை முறையாக அமல்படுத்த வேண்டும்- முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.
பள்ளிகளில் பறக்கும் படையைக் கொண்டு ஆய்வு செய்து 1, 2-ம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் தராமல் இருப்பதை உறுதி செய்திட வேண்டும்.
ஆய்வுக்குப் பின் வீட்டுப்பாடம் தரப்பட்டதா? இல்லையா? என்ற அறிக்கையை சமர்ப்பிக்கவும் உத்தரவு.
0 Comments
*இங்கு இடம்பெறும் கருத்துக்கள் யாவும் பார்வையாளர்களின் சொந்த கருத்தாகும்
* கருத்துக்கள் பண்பட்ட வாரத்தைகளாக அமைய வேண்டுகிறேன் .
* தவறுகளை சுட்டிக்காட்டும் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது
*உங்கள் கருத்துக்கள் பிறறைப் புண்படுத்தும் வகையில் இருந்தால் உடனடியாக நீக்க உரிமையாளருக்கு முழு உரிமை உண்டு. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.