தினம் ஒரு நீதிக்கதை

      அடர்ந்த காட்டிற்குள் ஒரு மனிதன் நடந்து சென்று கொண்டு இருக்கும் போது அவனை பசியோடு இருந்த சிங்கம் ஒன்று துரத்தி வந்தது.....

ஓடி வந்த மனிதன் ஒரு மரத்தில் ஏறிக் கொண்டான்....

அந்த மரத்தில் வசித்து வந்த குரங்கு ஒன்று அவனுக்கு ஆறுதல் கூறியது
சிங்கத்திற்கு மரம் ஏற தெரியாது....
தைரியமாக இருங்கள்... சிங்கம் சென்றதும் தகவல் தருகிறேன் நீங்கள் இறங்கி செல்லலாம் என்று ஆறுதல் கூறியது...

சிறிது நேரத்தில் குரங்கு உறங்கி விட்டது....

கீழே நின்று இருந்த சிங்கம் அந்த மனிதனை பார்த்து குரங்கை கீழே தள்ளி விடு நான் உன்னை விட்டு விடுகிறேன் என்று கூறியது....

அந்த மனிதனும் குரங்கை கீழே தள்ளி விட்டான்... குரங்கு கீழே விழுந்தது...

சிங்கம் குரங்கிடம் சிரித்துக் கொண்டே கூறியது.... மனிதன் எப்போதும் நன்றி கெட்டவன் உதவி செய்த உனக்கே துரோகம் செய்து விட்டான்... உன்னை கொல்ல மாட்டேன்....நீ மேல சென்று அவனை
கீழே தள்ளி விடு என்று கூறியது...

மரத்தில் ஏறி குரங்கு அந்த மனிதனை கீழே தள்ளிவிடவில்லை.... சிங்கத்தை பார்த்து பெருமிதமாக கூறியது....

  *நம்பி வந்தவர்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்ய நான் ஒன்றும் மனிதன் அல்ல....*

Post a Comment

0 Comments