தலைமைச் செயலகஊழியர் சங்கம் கண்டனம் மற்றும் கோரிக்கை- உடனடியாக தமிழக அரசு அகவிலைப்படி , நிறுத்தப்பட்ட சரண்டர் ,பழைய ஓய்வூதியத் திட்டதை அமல்படுத்துக.

        தமிழக முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் அவர்கள் முதல்-அமைச்சராக பதவி ஏற்றதும் தமிழகத்திலுள்ள அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் மற்றும் நிறுத்தி வைக்கப்பட்ட சரண்டர் மற்றும் அகவிலைப்படியை மீண்டும் வழங்குவோம் என தேர்தல் வாக்குறுதியில் அறிவித்திருந்தார். அதன்படி  அகவிலைப்படி மீண்டும் வழங்கப்பட்டது . மேலும் சரண்டர் மறு அறிவிப்பு வரும் வரை தடை தொடரும் என அறிவித்துள்ளது. 

      மேலும் தற்போது ஜனவரி 2022 முதல் உயர்த்தப்படவேண்டிய அகவிலைப்படி  மே மாதம் முடியும் தருவாயிலும் இன்னமும் அறிவிப்பு வெளியாகவில்லை . அத்துடன் சில நாட்களுக்கு முன்பு தமிழக நிதியமைச்சர் சட்டசபையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதில் மிகப்பெரிய சிக்கல் உள்ளது அமல்படுத்துவது சாத்தியம் இல்லாதது முதல்வரும் அவை முன்வரும் என்ன முடிவு எடுக்கிறார்கள் அதற்கு நான் கட்டுப்படுகிறேன் .என்ற வார்த்தையை பயன்படுத்தி பேசினார் .இந்த உரை தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர்கள் அவர்களின் மனதை மிகவும் காயப்படுத்தி உள்ளது .

    வாக்குறுதி அளித்து விட்டு ஆட்சிக்கு வந்தவுடன் மீண்டும் அந்த வாக்குறுதியை அமல்படுத்துவதில் முன்னுக்குப் பின் முரணான கருத்துக்களை முதலமைச்சருக்கு முன்னே தெரிவிப்பதும் ஜனநாயக பூர்வமான செயல் அல்ல என அனைத்து கல்வியாளர்களும், சங்கங்களும் வலியுரறுத்தியுள்ளன. 

   இதன் தொடர்ச்சியாக தமிழக தலைமைச் செயலகம் ஊழியர் சங்கம் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது அதன் விவரம் கீழே

Post a Comment

0 Comments