ஒருங்கிணைந்த பள்ளி கல்வி புதுக்கோட்டை மாவட்டம்
அனைத்து வகை அரசு பள்ளிகளில் ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை போதிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான திட்டத்தின் கீழ் *Environment Building Programme* என்ற தலைப்பில் வரும் *திங்கள் 24.1.2022 அன்று* அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் அமையப்பெற்றுள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் வழி பயிற்சி வழங்க மாநில திட்ட இயக்ககத்திலிருந்து மின்னஞ்சல் வழி தகவல் பெறப்பட்டுள்ளது எனவே நம் மாவட்டத்தில் உள்ள அரசு நடுநிலை,உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் *அனைத்து பாட ஆசிரியர்களும் அவர்தம் பள்ளிகளில் அமையப்பெற்றுள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களில் திங்கள் அன்று காலை 10 மணி முதல் 12 மணிவரை இப்பயிற்சியில் பங்கேற்க வேண்டும் என்றும்*, நம் மாவட்டத்தில் உள்ள *அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் தங்கள் வசதிக்கேற்ப அருகாமையிலுள்ள அரசு உயர் அல்லது மேல்நிலைப்பள்ளி உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களில் இப்பயிற்சியில் கலந்து கொள்ளுதல் வேண்டும்* என்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. ஒரு பள்ளியில் 20-க்கும் மிகுதியாக ஆசிரியர் இருக்கும்பட்சத்தில் 20 நபர்களை மட்டும் உயர் தொழில்நுட்ப ஆய்வகத்திலும், பிறரை தங்கள் பள்ளியில் உள்ள OVER HEAD PROJECTOR,. SMART BOARD மூலமாகவோ ஒரு வகுப்பறையில் 20 நபர்களுக்கு மிகாமலும் இத்தகைய வசதி இல்லாத பள்ளிகள் ஆசிரியர்கள் தங்கள் அதனை சார்ந்த கைபேசி வழியும் இப்பயிற்சியில் பங்கேற்கச் செய்யலாம் என்ற தகவலும் மாநில திட்ட ஒருங்கிணைப்பாளர் இடமிருந்து தொலைபேசி வழி பெறப்பட்டுள்ளது என்ற தகவலும் தெரிவிக்கலாகிறது.
0 Comments
*இங்கு இடம்பெறும் கருத்துக்கள் யாவும் பார்வையாளர்களின் சொந்த கருத்தாகும்
* கருத்துக்கள் பண்பட்ட வாரத்தைகளாக அமைய வேண்டுகிறேன் .
* தவறுகளை சுட்டிக்காட்டும் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது
*உங்கள் கருத்துக்கள் பிறறைப் புண்படுத்தும் வகையில் இருந்தால் உடனடியாக நீக்க உரிமையாளருக்கு முழு உரிமை உண்டு. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.