PG TRB -Online விண்ணப்பம் நிறைவடைந்தது. தேர்வு தள்ளிப்போகிறது.!!!?????


முதுகலை பட்டதாரி ஆசிரியர் ,உடற்கல்வி
இயக்குனர் ,கணினி ஆசிரியர் பணியிடங்களுக்கானOnline  விண்ணப்பம் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் , விண்ணப்பிக்கும் இறுதிநாள் முடிந்த பின்பும்  சில காரணங்களுக்காக மறுவாய்ப்பு வழங்கப்பட்டது .தற்போது 14 நவம்பர் 2021 மாலை 5 மணியுடன் ஆன்லைன் விண்ணப்பம் நிறைவடைந்தது. ஏற்கனவே நவம்பர் 14 தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் , தற்போது விண்ணப்பிக்கும் கால அளவு மீண்டும் மீண்டும் நீட்டிக்கப்பட்டது தேர்வு காலம் தள்ளிப்போகும் சூழல் உருவாகியுள்ளது. ஏற்கனவே PG பாலிடெக்னிக் தேர்வு டிசம்பர் 8 ம் தேதி நடைபெறும் அறிவிக்கபட்டுள்ளதால் , PGTRB தேர்வும்  சுமார் இரண்டு மாதம் தள்ளிப்போகும் சூழல் உருவாகியுள்ளது. அதற்கேற்ற வகையில் TRB இணையதளத்தில் தேர்வுத் தேதி என்ற இடத்தில் தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும், என மாற்றம் செய்யப்பட்டுள்ளது எனவே PGTRB தேர்வு ஜனவரி மாதம் அல்லது அதன் பின்பு நடத்தப்படலாம் என தெரிகிறது.









Post a Comment

0 Comments