ஆசிரியர்களின் தேர்வுநிலை, சிறப்புநிலை ஊதிய மாற்றத்திற்கு வரும் அடுத்த செக்!!!!!?????????

        தமிழக அரசுப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் தங்களது பணிக்காலத்தில்  ஒரே பதவியில் 10 ஆண்டுகள்,  20 ஆண்டுகள்,  30 ஆண்டுகள் பணிபுரிந்து முறையே தேர்வுநிலை,  சிறப்புநிலை,  போனஸ் ஊதிய உயர்வு என சிறப்பு ஊதிய உயர்வு பெற்று வருகின்றனர்.  

            சில சமயங்களில் பதவி உயர்வுக்கு தேர்வான ஆசிரியர்கள்,  சிறப்புநிலை ,தேர்வுநிலை ஊதிய உயர்வுக்காக தங்களை தேடி வரும்  பதவி உயர்வை பணித் துறப்பு செய்கின்றனர் .சிறப்பு நிலை ,தேர்வு நிலை, போனஸ் ஊதிய உயர்வு வாங்கிய பின்னர் பதவி உயர்வை பெற்றுக்கொள்ளலாம் என வழக்கமான எண்ணமாக இருந்து வருகிறது. தற்போது தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செயல்முறைகளின் படி பதவி உயர்வை புறக்கணித்து பணித் துறப்பு செய்த ஆசிரியர்கள் , தேர்வுநிலை , சிறப்புநிலை  ஊதிய உயர்வுக்கு தகுதி அற்றவர்கள் . தங்களது பணிக்காலத்தில் எந்தப் பதவி உயர்வும் கிடைக்கப் பெறாத ஒரே நிலையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மட்டுமே தேர்வு நிலை ,சிறப்பு நிலை ,போனஸ் ஊதிய உயர்வு,  வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

            ஏற்கனவே உயர்கல்விக்கு ஊக்க ஊதிய உயர்வு நிறுத்தப்பட்டு  , மொத்த தொகை என  அறிவித்துள்ள நிலையில் தற்போது இந்த கடிதம் ஆசிரியர்கள் இடையே மேலும் ஒரு மேலும் ஒரு வியப்பை  ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment

0 Comments