தமிழ்நாட்டில் உள்ளஅரசு பள்ளிஆசிரியரின் குரல்.....
அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு படிப்பு மட்டும் சலுகையாக இலவசமாக தமிழகஅரசு வழங்கவில்லை..அவர்கள் குடும்பத்தின் வாழ்வாதாரத்திலும் அரசு திட்டங்கள் மூலம் பங்கெடுத்துவருகிறது.. தெரியுமா உங்களுக்கு.. இதோ அதில் குறிப்பாக 3 திட்டங்கள் மற்றும் பல விபத்துக்காப்பீடு தொடர்பான விளக்கங்கள் குறித்து.......I
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி குழந்தைகளுக்கு அவர்களின் எதிர்கால தேவைக்கு ,குடும்ப சூழலால் பெற்றோரை இழந்த அரசு அரசு உதவிபெறும் பள்ளியில் பயிலும் அந்த குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு குழந்தைகளுக்கும் ரூபாய்75000 உதவியும், ,அதேபோல் அரசு பள்ளிகளில் பயிலும்மாணவர்கள் எதிர்பாராத விதமாக பள்ளி நிகழ்வுகள் மற்றும் பள்ளி தொடர்பாக ஏற்படும் விபத்தால் இறந்துவிட்டால் அந்த மாணவரின் குடும்பத்திற்கு 1 லட்சம் நிவாரணத்தொகையும் தமிழக அரசு தருகிறது.
இது மட்டுமா சிங்கிள் (மிஷன் வாத்சால்யா திட்டம்)பெற்றோர் /பெற்றோர் ஒருவரையோ அல்லது இருவரையும் இழந்த வசதி இல்லாமல் சிரமப்படும் குடும்பத்தில்உள்ள ஒரு அரசுபள்ளி ,அரசு உதவிபெறும் பள்ளிகளில் உள்ள மாணவிக்கு ஒரு குடும்பத்திற்கு ஒரு குழந்தைக்கு மட்டும் 3 வருடத்திற்கு ரூபாய் 4000 மாதா மாதம் (குழந்தைகள் கல்வி கற்காமல் இடைநிற்றலை தவிர்க்க மாநில அரசு40 சதவீதம் மத்திய அரசு 60 சதவீதம் உதவித்தொகை பங்கு செய்கிறது.தற்போது வரை வருடத்திற்கு ஒரு மாவட்டத்திற்கு 41 குழந்தைகளுக்கு மட்டும்) உதவித்தொகை வழங்குகிறது.. இந்த திட்டம் மாவட்ட குழந்தைகள் நல அலுவலகம் வழியாக வழங்கப்படுகிறது
இந்த நலத்திட்டங்கள் குறித்து காண்போம்:
திட்டம் 1. 75000 உயர் கல்வி பயில நிதி உதவித்தொகை அரசாணை 39/2005,127/2005 ,195/2014ன் படி
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் 1முதல் 12ம் வகுப்பு வரை கல்வி பயின்று கொண்டிருக்கும் குழந்தைகளில் யாருடைய குடும்பத்திலாவது அவர்தம் பெற்றோரரில் ஒருவரோ அல்லது இருவருமோ சாலை விபத்தில், விபத்துகளால் மரணமடைந்திருந்தாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்திருந்தாலோ,அல்லது எதிபாராவிதமாக பாம்பு கடித்து இறந்திருந்தாலோ,மின்சாரம் தாக்கி,இடி மின்னல் தாக்கி இறந்திருந்தால் அல்லது எதிர்பாராவிதமாக மரணம் குறிப்பாக கிணற்றில் விழுந்து இறப்பு மரத்தில் இருந்து விழுந்து,இதுபோன்ற எதிர்பாராத விபத்தினால் மரணம் சம்பவித்திருந்தால் அல்லது விபத்தால் நிரந்தர முடக்கம் அடைந்திருந்தால் அவர்தம் குடும்பத்தில் அரசுமற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் அந்த குடும்பத்தை சார்ந்த படிக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தமிழக அரசு சார்பில் அரசாணைகள் 39/2005,127/2005 மற்றும் 195/ 27.11.2014 ன்படி மாணவர் கல்வி நிதி உதவித்தொகை ருபாய்75000 தமிழக அரசு கல்வித்துறை மூலம் விண்ணப்பித்து பெறலாம்.
இந்த விண்ணப்பத்திற்கு தேவைப்படும்.ஆவணங்கள் விபரம்....
ருபாய்75000 பெற்றோரை விபத்தில் இழந்த அரசு பள்ளி மாணவர் தமக்கு 75000 உயர் கல்வி நிதி உதவித்தொகை பெற தேவையான ஆவணங்கள்....
ஒரு குழந்தைக்கு மட்டும் தேவையான ஆவணங்கள் இது.மற்றொரு குழந்தை இருந்தால் அவர்களுக்கு. இதேபோல மேலும் தனியாக 4 நகல்கள் xerox தயார் செய்ய வேண்டும்.
ஒரு குழந்தைக்கு 4 படிகளில் விண்ணப்பம் தயார் செய்ய ஒவ்வொன்றிலும் 4 xerox நகல்கள் தேவை.
1. FIR நகல் .
2. பிரேத பரிசோதனை அறிக்கை
3. இறப்பு சான்று
4. வாரிசு சான்று
5. வருமான சான்று(ஒரு வருடத்திற்குள் பெறப்பட்டதாக இருத்தல் அவசியம்).
6. வருவாய் முடக்க சான்று(VAO அல்லது வட்டாச்சியரிடம் பெற வேண்டும்)
7. விதவை சான்று (கணவர் இறந்திருந்தால் மட்டும் இந்த சான்று தேவை)
8. மாணவரின் ஆதார் அட்டை நகல்
9. மாணவர் போட்டோ ஒட்டிய வங்கி கணக்கு புத்தக நகல் தெளிவாக வங்கி கணக்கு எண் தெரிய வேண்டும்.பெற்றோருடன் இணைந்து joint account தேசிய வங்கி ஏதேனும் ஒன்றில் சேமிப்பு கணக்கு.... நகல்
. 10.குடும்ப அட்டை நகல் ரேஷன் கார்டு நகல் இரண்டுபக்கமும் உள்ளது ஒரே பக்கத்தில் எடுக்க வேண்டும் .மாணவர் பெயர் இருக்க வேண்டும்.
11. உயிருடன் உள்ள பெற்றோர் ஆதார் அட்டை நகல்
12. மாணவரின் சீருடையுடன் உள்ள வண்ண புகைப்படம் (passport size )08 nos வேண்டும்.
13. மாணவர்தம் பிறப்பு சான்றிதழ் நகல்
மேற்கண்ட அனைத்தும் ஒரு மாணவருக்கு விண்ணப்பிக்க தேவையான ஆவண நகல்கள்.இவை ....நன்றி தகவலுக்காக.
II இரண்டாவது திட்டம் அரசாணை 17/2018
தமிழக அரசு,அரசு உதவிபெறும் பள்ளியில் பயிலும் மாணவர்கள் எதிர்பாராத விதமாக பள்ளி நிகழ்ச்சிகளிலும், பள்ளி தொடர்பாக வெளியே செல்லும்போது சாலை விபத்தில் மரணம் அல்லது காயம், பள்ளி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள பள்ளியின் உள்ளேயும்,வெளியேயும் ஏற்படும் எதிர்பாரா விபத்து அல்லது எதிர்பாராத விபத்துகளால் மரணமடைந்து விட்டால் ரூபாய் 1 லட்சம் நிவாரணத்தொகை மற்றும் லேசான காயம் முதல் பலத்த காயமடைந்தால் அவர்களுக்கு 25000 முதல் 50000 வரை நிதியுதவி அந்த மாணவரின் குடும்பத்திற்கு தமிழக அரசு அரசாணை 17/07-02-2018ன் படி வழங்கி வருகிறது. இந்த திட்டம் 2018 பிப்ரவரி முதல் அமலில் உள்ளது.
முக்கிய குறிப்பு. மேற்கண்ட திட்டம் 1, 2 விண்ணப்பிக்கும்போது கவனத்தில் கொள்ளவும
விபத்தில் பெற்றோர்கள் இறந்த நாளன்றும் விண்ணப்பிக்கும்போதும்,அந்த குடும்பத்தில் உள்ள மாணவர் அரசு பள்ளியில் மாணவராக இருக்க வேண்டும்.
...மேற்சொன்ன திட்டம் 1,2 க்கு கல்வித்துறை மூலம் மட்டுமே விண்ணப்பித்து பெற முடியும்.
திட்டம் 3
மாதம் 4000 உதவித்தொகை 3 வருடத்திற்கு ஒரு குடும்பத்திற்கு ஒரு குழந்தைக்கு மட்டும்.....
பெற்றோரை இழந்து வறுமையில் வாடும் அரசு பள்ளியில் பயிலும் குடும்பத்தில் உள்ள ஒரு மாணவிக்கு மாவட்ட குழந்தைகள் நல அலுவலகம் வழியாக 3 வருடத்திற்கு மாதா மாதம் ரூபாய்4000 உதவித்தொகை ஒரு குடும்பத்திற்கு ஒரு குழந்தைக்கு மட்டும் இடைநில்லாமல் கல்வி பயில தமிழக அரசு உதவித்தொகை வழங்கி வருகிறது.
இந்த 4000 உதவித்தொகைதிட்டம் தமிழக அரசு, அரசு உதவிபெறும் பள்ளியில்1முதல் 12ம் வகுப்பு வரை(இப்போது10ம் வகுப்பு வரை என சொல்கிறார்கள்) பயின்றுகொண்டிருக்கும் மாணவர்களுக்கு மட்டும் பொருந்தும்.தனியார் பள்ளிகள்,matric பள்ளிகள் fully aided பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பொருந்தாது.
(இந்த விண்ணப்பத்திற்கான சான்று நகல்கள் மட்டும் எனக்கு கொடுத்தால் போதும்.இலவசமாக..ஆவணங்கள் நகல் மட்டும் பெற்றோரிடம் இருந்து பெற்று)
ஒரு ஆசிரியராக எனது குழந்தைகளுக்கு 2022 முதல் இந்த பணியினை செய்து பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவுகிறேன்...
உங்களால் ஒரு பகிர்வு செய்து எனக்கு உதவுங்கள் ஒரு மனித நேய உதவியாக....நமது அரசு பள்ளிகளில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக.....
நன்றியுடன்....
L. நாகராஜன்
பட்டதாரி ஆசிரியர் ஆங்கிலம்
ஊராட்சி ஒன்றிய நாடு நிலைப்பள்ளி,குளவாய்ப்பட்டி,
விராலிமலை ஒன்றியம்,புதுக்கோட்டை மாவட்டம்.
9865149705.
நமது மாவட்ட அளவில் பல தொடக்க ,நடுநிலை,உயர், மேல்நிலை பள்ளிகளில் தற்போது வரை பாதிக்கப்பட்ட அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு உதவி ஏயது வருகிறார்.. இலவச விண்ணப்பம் தயார் செய்து கொடுத்து...
இவரின் இலவச உதவிகளை பள்ளி அளவில் தேவைப்படுவோர் பயன்படுத்தலாமே.
நன்றி உங்கள் தகவலுக்காக..
0 Comments
*இங்கு இடம்பெறும் கருத்துக்கள் யாவும் பார்வையாளர்களின் சொந்த கருத்தாகும்
* கருத்துக்கள் பண்பட்ட வாரத்தைகளாக அமைய வேண்டுகிறேன் .
* தவறுகளை சுட்டிக்காட்டும் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது
*உங்கள் கருத்துக்கள் பிறறைப் புண்படுத்தும் வகையில் இருந்தால் உடனடியாக நீக்க உரிமையாளருக்கு முழு உரிமை உண்டு. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.