கேள்வி - பதில் /
வினா - விடை
எது சரி?
கேள்வி :
கேள் + வி.
'கேள் ' என்பது கேட்டல் என்ற பொருளைத் தரும்.
'வி' என்னும் தொழிற்பெயர் விகுதியைப் பெற்று 'கேள்வி' என்றானது.
'கேள்வி' என்பது நல்ல தமிழ்ச்சொல் ஆகும். இதை பயன்படுத்துவதில் எந்தத் தவறும் இல்லை.
பதில் :
'பதில்' என்பது 'தமிழ்ச்சொல்' அன்று. 'உருது' மொழிச்சொல்லின் திரிபாகும் . ஆகையால், 'பதில்' என்னும் சொல்லை பயன்படுத்தத் தேவையில்லை.
'பதில்' என்னும் சொல் 'விடை' என்ற பொருளைத் தவிர வேறு பொருளிலும் வருகிறது.
பதில் மடல் (மறு மடல்)
பதில் ஆள் ( மாற்று ஆள்)
'அவருக்குப் பதிலாக இவர் ' என்றால் அவருக்கு மாற்றாக இவர் என்று பொருள்.
எனவே ' பதில் ' என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டாம்.
வினா - விடை ::
ஒன்றனைப் பற்றி அறிந்து கொள்ள ஒருவரை ஒருவர் வினவுகின்றனர். இப்படி வினவுவப்படுவதையே 'வினா' என்கின்றனர்.
வினவப்பட்ட வினாவுக்கு , விடுக்கப்படும் மறுமொழியே 'விடை' என்பர்.
ஆதலால் 'வினா-விடை' என்பதே சரியானது.
நம் தமிழ் இலக்கண நூல்களும் "அறுவகை வினா " என்றும் " எண்வகை விடை " என்றும்தான் வகைப்படுத்தி வைத்துள்ளன.
எனவே இலக்கண முறைப்படி "வினா - விடை " என்றே பயன்படுத்துவோம் .
0 Comments
*இங்கு இடம்பெறும் கருத்துக்கள் யாவும் பார்வையாளர்களின் சொந்த கருத்தாகும்
* கருத்துக்கள் பண்பட்ட வாரத்தைகளாக அமைய வேண்டுகிறேன் .
* தவறுகளை சுட்டிக்காட்டும் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது
*உங்கள் கருத்துக்கள் பிறறைப் புண்படுத்தும் வகையில் இருந்தால் உடனடியாக நீக்க உரிமையாளருக்கு முழு உரிமை உண்டு. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.