பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 04.09.2024

*பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்*
*நாள்*:-04-09-2024
*கிழமை:--புதன்கிழமை*

*திருக்குறள்:* 

பால் :பொருட்பால்

அதிகாரம்: இடுக்கண் அழியாமை

*குறள் எண்:628*

இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்பம் உறுதல் இலன்.

பொருள்:
 இன்பமானதை விரும்பாதவனாய்த் துன்பம் இயற்கையானது என்று தெளிந்திருப்பவன் துன்பம் வந்தபோது துன்ப முறுவது இல்லை.

*பழமொழி :*

யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே. 

 April showers bring forth May flowers.

*இரண்டொழுக்க பண்புகள் :* 

 *எனது பள்ளியின் வளர்ச்சிக்கான பணிகளில் எனது பெற்றோர்களும் ஈடுபட வலியுறுத்துவேன்.       

*ஊர் கூடி செய்யும் செயல்கள் அதிக நன்மை பயக்கும் என்பதால் அனைவரோடு சேர்ந்து எங்கள் பள்ளியின் வளர்ச்சிக்கு  பாடுபடுவேன்.

*பொன்மொழி :*

வெற்றி என்பது தற்செயலானது அல்ல. இது கடின உழைப்பு, விடாமுயற்சி, கற்றல், படிப்பு, தியாகம் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக, நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை

*பொது அறிவு :*

1. நம் உடம்பிலேயே மிகவும் கடினமான பகுதி எது?


விடை: பற்களிலுள்ள எனாமல்

2. X கதிர்களின் மின்னூட்டம்?

விடை: ஓரலகு எதிர் மின்னூட்டம்

*English words & meanings :*

tiny- சின்னஞ்சிறிய,

minuscule-குறைவான 

*வேளாண்மையும் வாழ்வும் :*

” அடைமழை” – ஐப்பசியில் பெய்வது

” கனமழை” – கார்த்திகையில் பெய்வது..4jg

*நீதிக்கதை*

 *உலக நடப்பு*

கிருஷ்ண தேவராயரும், தெனாலிராமனும் நாட்டு நடப்புகளை அறிய மாறுவேடத்தில் நகர்வலம் வருவார்கள். 

அன்று, இரவு முழுவதும் மழை பெய்தது. மறுநாள் பொழுது விடிந்தது,மழையும் ஓய்ந்தது. அரசரும் தெனாலிராமனும் வெள்ளத்தின் விளைவைக் காண சென்றனர். 

அங்கே ஓர் ஆடு மேய்க்கும் இளைஞன் தன் ஆட்டு மந்தையை ஒருபுறம் மேயவிட்டு, ஓடும் மழை நீரிலே தன் தலைக்குக் கீழே தனது கையை தலையணை போல் வைத்துக் கொண்டு வெள்ளத்திலே தலை ரோமம் நனைந்து அலைபுரள மெய்மறந்து உறங்கிக் கொண்டிருந்தான். 

அதைக்கண்டு அரசர் வியந்து, “தெனாலிராமா இந்த நிலையிலே ஒருவன் சுகமாகத் தூங்க முடியுமா ? நமக்கு ஜன்னல் கதவு திறந்திருந்தால் குளிரும் காய்ச்சலும் வந்து விடுகிறது. இந்த ஆடுமேய்க்கும் இளைஞனோ, ஓடும் மழை வெள்ளத்தின் மேல் பஞ்சனையில் தூங்குவதுபோல் சுகமாகத் தூங்குகிறானே! எப்படி இது சாத்தியம்” என்றார். 

அதற்கு தெனாலிராமன் “அரசே ! உத்தியோகத்திற்கு ஏற்ற சுகம் ! உடல் அமைப்புக்கு ஏற்ற குணம் ! உணவிற்கு ஏற்ற உடல். இதுதான் உலக நடப்பு ! இந்த ஆடு மேய்ப்பவனும் அரண்மனையிலே பெரிய பதவி பெற்று பாலும், சோறும் உண்டு, மிருதுவான பஞ்சனையில் உறங்கி, ஆனந்தமாக வாழ்ந்து, உடம்பில் காற்றும், மழையும்,பனியும் படாமல் சில காலம் இருந்து வருவானேயாகில் இவனுக்கும் காய்ச்சலும் ஜலதோஷமும் பிடிக்கத்தான் செய்யும் !” என்றார். 

தெனாலிராமனின் பதில் 

அரசருக்கு விநோதமாக இருந்தது என்றாலும், அதைப் பரீட்சித்துப் பார்க்க விரும்பினார். 

அதுபோல ஆடுமேய்ப்பவனுக்கு அரண்மனையிலே பெரிய பதவி கொடுத்து அரச போகங்களில் சிலகாலம் வைத்திருந்து விட்டு, அவன் குடிசைக்குத் திருப்பி அனுப்பினார். 

ஆடு மேய்க்கும் இளைஞன் அவனது குடிசையினுள்ளே நுழையும் போது வாசலில் ஈரவாழை மரப்பட்டைகள் தெனாலிராமனின் உத்தரவுப்படி போடப்பட்டிருந்தது. அவற்றை மிதித்துக் கொண்டு நடந்து போனான் அந்தப் பட்டைகளிலுள்ள 

குளிர்ச்சியை அவனுடைய பாதங்கள் தாங்க முடியாமல் அவனுக்கு ஜலதோஷமும், காய்ச்சலும் பிடித்துக் கொண்டு விட்டது. மிகவும் அவதிப்பட்ட அவனுக்கு இராஜவைத்தியம் பார்த்துக் குணப்படுத்தினார் 

அரசர். 

தம்முடைய மதி மந்திரி தெனாலிராமன் கூறிய நடைமுறை அனுபவம் உண்மைதான் என்பதை உணர்ந்து  பாராட்டினார் அரசர்.

*இன்றைய செய்திகள்*

04.09.2024


* தொழிலாளர் நலவாரியத்துக்கு செலுத்த வேண்டிய தொழிலாளர் நல நிதியை நிறுவனங்கள் அதற்காக தொடங்கப்பட்ட "வெப் போர்ட்டலில்" செலுத்தும்படி தமிழ்நாடு தொழிலாளர் நலவாரியம் அறிவுறுத்தியுள்ளது.

* தமிழகம் முழுவதும் செப்டம்பர் 5-ல் ரேஷன் கடை ஊழியர்கள் வேலை நிறுத்தம் -

* புதுச்சேரியில் மின் கட்டண உயர்வுக்கு கடும் எதிர்ப்பு: வீட்டு உபயோக மின்சாரத்துக்கு அரசு மானியம் வழங்க ஆணை.

* 7 புதிய திட்டங்களுக்காக வேளாண் துறைக்கு ரூ.14,000 கோடி: மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

* பாரா ஒலிம்பிக் ஈட்டி எறிதல்: இந்திய வீரர் சுமித் அன்டில் தங்கம் வென்று சாதனை.

* பாரா வில்வித்தை - ஷீத்தல் தேவி-ராகேஷ் குமார் ஜோடி வெண்கலப் பதக்கம் வென்றது.

* பாரா ஒலிம்பிக் பேட்மிண்டன் விளையாட்டில், பெண்கள் ஒற்றையர் எஸ்.யு. 5 பிரிவில் தமிழக வீராங்கனைகளான துளசிமதி முருகேசன் வெள்ளிப்பதக்கமும், மனிஷா ராமதாஸ் வெண்கல பதக்கமும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

*Today's Headlines*

* The Tamil Nadu Labor Welfare Board has directed the companies to pay the labor welfare fund's  due,  to the Labor Welfare Board through the "web portal" launched for the purpose.

 * Ration shop workers strike on September 5 across Tamil Nadu -

 * There is Strong opposition to power tariff hike in Puducherry: Order is issued to provide government subsidy for household electricity.

 * Union Cabinet approved Rs 14,000 crore to agriculture department for 7 new schemes: 

 * Paralympic javelin throw: India's Sumit Antil won the gold.

* Para Archery - Sheetal Devi-Rakesh Kumar won the bronze medal.

 * In Paralympic Badminton, Women's Singles S.U. 5  category , Tamil Nadu players Tulasimathi Murugesan won silver medal and Manisha Ramadoss won bronze medal.

Post a Comment

0 Comments