ஆப்ரகாம் லிங்கன் வாழ்வில்…
–
வக்கீலாக வேலை பார்த்த, ஆப்ரகாம் லிங்கன்,
கட்சிக்காரர்களிடம், ‘இவ்வளவு கொடுங்கள்…’ என, கேட்க
மாட்டார்; கொடுத்ததை வாங்கிக் கொள்வார்.
இதை பார்த்த அவர் மனைவி, ‘நீங்கள், எதற்காக வக்கீல்
தொழில் செய்கிறீர்கள்…’ என்று கேட்டார்.
‘புகழுக்காக… அந்த புகழால் கிடைக்கும் மன அமைதிக்காக…’
என்றார், லிங்கன்.
‘வெறும் புகழ் மட்டும், மனிதனுடைய வயிற்றை நிரப்பி விடாதே.
வாழத் தெரியாத வக்கீலாக உள்ளீரே…’ என்றார்.
‘இந்த ஒரு சாண் வயிறு நிரம்புவதை பற்றியா, நான் அதிகம்
கவலைப்பட வேண்டும். எந்த மிருகமும், பறவையும்
கவலைப்படாத ஒரு விஷயத்தை பற்றி, மனிதன் ஏன் மூளையை கு
ழப்பிக் கொள்ள வேண்டும்…’ என்றார்.
இந்த சமாதானம், அவர் மனைவியை திருப்திபடுத்தவில்லை.
‘மற்ற வக்கீல்கள், நிறைய சம்பாதிக்கின்றனர்; வசதிகளை
பெருக்கிக் கொள்கின்றனர். நீங்கள், இதற்கு மாறாக நடப்பதில்
என்ன லாபம்…’ என்றார்.
‘லாபம் சம்பாதிக்க, மூளை தேவையில்லையே…
ஒரே ஒரு கைத்துப்பாக்கியை வைத்து, ஊரை மிரட்டினால் கூட
பணம் குவிந்து விடும். நானும், அப்படி மாற வேண்டுமா…’ என்று
கேட்டதும், அவர் மனைவியிடமிருந்து பதில் இல்லை.
ஆண்டுகள் பல கடந்து, உழைப்பால், முயற்சியால், அமெரிக்க
ஜனாதிபதியானார், ஆப்ரகாம் லிங்கன்.
ஒருநாள், அவர் மனைவி, ‘ஒரு காலத்தில், உங்களை, பணம்
சம்பாதிக்கும்படி வற்புறுத்தினேன். இப்போது தான் அந்த
உண்மை எனக்கு புரிகிறது…’ என்றார்.
‘அது என்ன…’ என, கேட்டார், லிங்கன்.
‘பணம் சம்பாதித்த, வக்கீல்கள் யாரும், ஜனாதிபதியாக
வரவில்லை. புகழ் தேடிய தாங்கள், ஜனாதிபதியாகி விட்டீர்…’
என்றார்.✍🏼🌹
0 Comments
*இங்கு இடம்பெறும் கருத்துக்கள் யாவும் பார்வையாளர்களின் சொந்த கருத்தாகும்
* கருத்துக்கள் பண்பட்ட வாரத்தைகளாக அமைய வேண்டுகிறேன் .
* தவறுகளை சுட்டிக்காட்டும் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது
*உங்கள் கருத்துக்கள் பிறறைப் புண்படுத்தும் வகையில் இருந்தால் உடனடியாக நீக்க உரிமையாளருக்கு முழு உரிமை உண்டு. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.