நடுநிலைப் பள்ளி /தொடக்கப்பள்ளி
தலைமையாசிரியர் பதவி உயர்வு முன்னுரிமை பட்டியலில் TET தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களின் பட்டியல் தயார் செய்யும்படி மா.கல்வி அலுவலரின் நடவடிக்கை பற்றி மதிப்புமிகு தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதின் அடிப்படையில் கீழ்கண்ட விளக்கம் அளிக்கப் படுகிறது.
பதவி உயர்வு வழங்குவதில் TET தேர்ச்சி தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்துவருகிறது, அதற்காக TET தேர்ச்சி பெற்று நடுநிலைப் பள்ளி /தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவிக்கு தகுதி வாய்ந்தவர்கள், மற்றும் பணிமூப்பு பட்டியல் படி பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்தவர்கள் பட்டியல் நீதிமன்ற வழக்குக்காக தேவைப்படுகிறது அதற்காக பட்டியல் கேட்டுள்ளோம் ஆசிரியர்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என மதிப்புமிகு தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்கள் தெரிவித்தார்கள்.
என்று சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்
0 Comments
*இங்கு இடம்பெறும் கருத்துக்கள் யாவும் பார்வையாளர்களின் சொந்த கருத்தாகும்
* கருத்துக்கள் பண்பட்ட வாரத்தைகளாக அமைய வேண்டுகிறேன் .
* தவறுகளை சுட்டிக்காட்டும் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது
*உங்கள் கருத்துக்கள் பிறறைப் புண்படுத்தும் வகையில் இருந்தால் உடனடியாக நீக்க உரிமையாளருக்கு முழு உரிமை உண்டு. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.