How to Link PAN-AATHAR? instruction
Click 👇 website
👉Enter PAN NUMBER
👉Enter Aathar number
👉Click Validate
👉Pay Late fee amount Rs.1000
👉Click submit
பான் எண்ணை, ஆதார் எண்ணுடன் இணைக்க வரும் மே 31ஆம் தேதி வரை வருமான வரித் துறை அவகாசம் நீட்டித்துள்ளது.
தவறும் பட்சத்தில் அதிகப்படியான வரித்தொகை பிடித்தம் செய்யப்படும் எனவும் வருமானவரித்துறை எச்சரித்துள்ளது.
பான் அட்டையை பயோமெட்ரிக் கொண்ட ஆதார் எண்ணுடன் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டது. தொடர்ந்து பான் - ஆதார் இணைப்பை வலியுறுத்தி தொடர் அறிவுறுத்தல்களும் வந்தன.
பான் அட்டையை ஆதாருடன் இணைக்க மத்திய அரசு பலமுறை கால அவகாசம் வழங்கி வருகிறது.
பான் - ஆதாரை குறிப்பிட்ட காலக்கெடுக்குள் இணைக்காதவர்களுக்கு பின்னர் அபாரதம் விதிக்கப்பட்டது. இருப்பினும், தொடர்ந்து பான் - ஆதார் இணைப்பில் தொய்வு நிலை இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பான் - ஆதாரை இணைப்பது குறித்து வருமான வரித்துறை மீண்டும் ஒரு எச்சரிக்கை ஒன்றை இன்று (மே 28) வெளியிட்டுள்ளது. அதிக விகிதத்தில் வரி விலக்குகளைத் தவிர்க்க வரும் மே 31 ஆம் தேதிக்குள் பான் எண்ணை ஆதாருடன் இணைக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. பான் கார்டு ஆதாருடன் இணைக்கப்படவில்லை என்றால், அதிகப்படியான வரித்தொகை பிடித்தம் செய்யப்படும் (டிடிஎஸ் பொருந்தக்கூடிய விகிதத்தில் 2 மடங்கு) எனவும் எச்சரித்துள்ளது
0 Comments
*இங்கு இடம்பெறும் கருத்துக்கள் யாவும் பார்வையாளர்களின் சொந்த கருத்தாகும்
* கருத்துக்கள் பண்பட்ட வாரத்தைகளாக அமைய வேண்டுகிறேன் .
* தவறுகளை சுட்டிக்காட்டும் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது
*உங்கள் கருத்துக்கள் பிறறைப் புண்படுத்தும் வகையில் இருந்தால் உடனடியாக நீக்க உரிமையாளருக்கு முழு உரிமை உண்டு. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.