உள்ளாட்சித் தேர்தல் 2024!!!!!. அடுத்து உள்ளாட்சி தேர்தல் பணி



*👉🎯உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகும் தமிழ்நாடு தேர்தல் ஆணையம்: ஆணைய இணையதளம் புதுப்பிப்பு..!*

🔹🔸மாநில தேர்தல் ஆணையத்தின் இணையதளம் தமிழில் புதுப்பிக்கப்பட்டு உள்ளது.

🔸🔹தமிழகத்தில், 36 மாவட்ட ஊராட்சிகள், 388 ஊராட்சி ஒன்றியங்கள், 12,525 ஊராட்சிகள் என மொத்தம் 12,949 ஊரக உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன.

🔹🔸இவற்றில், 1.19 லட்சம் பதவிகள் உள்ளன. இவற்றில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, தென்காசி மாவட்டங்களை தவிர்த்து, 27 மாவட்டங்களுக்கு 2019 டிசம்பரில் தேர்தல் நடந்தது.

🔸🔹இதைத் தொடர்ந்து, 2021 செப்டம்பரில் எஞ்சிய மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. 

🔹🔸ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என்பதால், மாநில தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. இதற்காக, ஆணையத்தின் இணையதளம் முழுமையாக தமிழில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

🔸🔹இதில், முன்பு பெரும்பாலான தகவல்கள் ஆங்கிலத்தில் இடம்பெற்று இருந்தன. இதனால், தேர்தல் குறித்த பல விபரங்களை வாக்காளர்கள், வேட்பாளர்கள் அறிந்து கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது.

🔹🔸மாநில தேர்தல் ஆணையராக புதிதாக பொறுப்பேற்றுள்ள ஜோதிநிர்மலா சாமி உத்தரவின்படி, அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில், முழுமையாக தமிழுக்கு இணையதளம் மாற்றப்பட்டு உள்ளது.

🔸🔹இணையதள முகப்பு பக்கத்தில், *'உள்ளாட்சி தேர்தலை நேர்மையாக, அமைதியாக நடத்துவோம்; மக்களாட்சிக்கு பெருமை சேர்ப்போம்; வாருங்கள் வாக்களிப்போம்'* என, அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

Post a Comment

0 Comments