POSTAL BALLOT - தபால் ஓட்டு செலுத்துவது எப்படி?

*
( POSTAL BALLOT).

தேர்தல் பணியில் இருக்கும் ஒருவர் தனது வாக்குரிமையினை பயன்படுத்துவதற்கான வழி இந்த தபால் வாக்கு முறை* ...

தேர்தல் பணியில் இருப்பவர்கள் பெரும்பாலும் அஞ்சல் வாக்கினை செலுத்துவதில்லை.

செலுத்தினாலும் ஏராளமான வாக்குகள் செல்லாமல் போய்விடுகின்றன.

அதனை எப்படி தவிர்ப்பது.

அது தான் இந்த பகுதி.

தேர்தல் பணியிலிருக்கும் அலுவலர் ஒருவர் தபால் வாக்கினை பெறுவதற்கு படிவம் 12 ஐ நிரப்பி தேர்தல் பணி ஆணை நகல் வாக்காளர் அடையாள அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து தனது வாக்கு இருக்கும் தேர்தல் நடத்தும் அலுவலருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

(தற்சமயம் பயிற்சிக்கு செல்லும் இடத்திலேயே படிவங்களை வழங்கினால் அவற்றை பிரித்து உரிய அலுவலர்களுக்கு அந்தந்த சட்டமன்ற தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர்களே  அனுப்பி வைக்கிறார்கள்)

படிவம் 12ல் விண்ணப்பத்தினை பெற்ற தேர்தல் நடத்தும் அலுவலர் தபால் வழியாகவோ அல்லது அடுத்த தேர்தல் வகுப்பிலோ உங்களுக்கு தபால் வாக்குச்சீட்டும் அத்துடன். படிவம் 13A, 13B, 13C, 13D ஆகியவற்றை உங்களுக்கு வழங்குவார்.

இனி இந்த படிவங்களை கொண்டு எவ்வாறு வாக்களிப்பது என்பதை பார்ப்போம்.

தபால் வாக்குச்சீட்டுடன் வழங்கப்படும் படிவம் 13A என்பது  அஞ்சல் வாக்குச்சீட்டு மூலம் வாக்களிப்பவர் அளிக்க வேண்டிய உறுதி மொழி ஆகும்

படிவம் 13Bஎன்பது ஒரு உறை (கவர்) ஆகும்.  
இது ( Cover A)

படிவம் 13Cஎன்பது ஒரு உறை ஆகும். 
இது  (Cover B)

13D instruction  ஆகும்.

13 A படிவத்தினை நிரப்பி அதில் வாக்களிப்பவர் ஒப்பமிட்டு அந்த ஒப்பத்தினை  அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரின் சான்றொப்பம் கட்டாயம் பெற வேண்டும்.

தேர்தல் நடத்தும் அலுவலர் வழங்கிய வாக்குச்சீட்டில் எந்த வாக்காளருக்கு வாக்களிக்க விரும்புகிறாரோ அவரின் பெயர் விபரம் அடங்கிய பகுதியில் ✅ செய்ய வேண்டும்.
 
வாக்கு செலுத்திய வாக்குச்சீட்டினை படிவம் 13B என்கிற கவரில் (Cover A) ல் வைத்து  அந்த கவரை ஒட்டிவிட வேண்டும்.

கவர் A என்ற உறையின் மேல் உள்ள படிவத்தினை முழுவதுமாக விடுதலின்றி நிரப்ப வேண்டும்.

கவர் A ன் மீது வழங்கப்பட்ட வாக்குச்சீட்டின் எண்ணை பதிவு செய்யவும்.

வாக்குச்சீட்டு வைக்கப்பட்டு ஒட்டப்பட்ட (கவர் A) உடன் படிவம் 13A வை சேர்த்து  படிவம் 13 C (Cover B ) யினுள் வைத்து அந்த கவரினையும் ஒட்டி விட வேண்டும்.

படிவம் 13 C ஐ நிரப்பி அதில் வாக்காளர் தனது முழு கையெழுத்தை இட வேண்டும்.

Recap

வாக்குச்சீட்டில் வாக்கினை டிக் மார்க் மூலம் பதிவு செய்யவும்..

படிவம் 13A ஐ நிரப்பி ஒப்பமிட்டு அதில் *அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரின்* சான்றொப்பம் பெறவும்.

வாக்கினை பதிவு செய்த வாக்குச்சீட்டினை படிவம் 13B (cover A) வினுள் வைத்து ஒட்டவும்.

வாக்குச்சீட்டு வைத்து ஒட்டிய படிவம் 13B  மற்றும் படிவம்13A இரண்டையும் படிவம் 13C உள்ளே வைத்து ஒட்டவும்.

கவர் B இன் மேல்  வாக்களிக்கும் அலுவலர் ஒப்பமிட்டு, வாக்குச்சீட்டு வழங்கிய தேர்தல் நடத்தும் அலுவலருக்கு அனுப்பவும்.

மறக்காம உங்கள் வாக்கினை பதிவு செய்யுங்கள்...

Post a Comment

0 Comments