மனிதனாகப் பிறந்த அனைவருக்கும் ஏதாவது ஒருவிதத்தில் இன்பம், துயரம் வருவது தவிர்க்க முடியாதது.
மேடு, பள்ளம்,இரவு, பகல் இருப்பதுபோல...
மனிதனுக்கும் இன்ப, துன்பங்கள் இரண்டுமே மாறி மாறி வருவது இயல்புதான்.
துன்பங்களை துன்பங்களாக பார்க்காமல், அவைதரும்
அனுபவங்களை படிப்பினையாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.
அதற்கு உங்கள் மனது பக்குவ பட. வேண்டும் .
துன்பங்களை அனுபவமாக ஏற்றுக் கொள்ள உங்கள் மனது தயாராக இருக்க வேண்டும். உங்கள் மனதை அது போன்று பழக்க வேண்டும்.
ஒருவன் வாழ்க்கை பிடிக்காமல் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்தான்.
இரயில் தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்து உயிரை மாய்த்துக் கொள்ளலாம் என்ற முடிவோடு ரெயில் தண்டவாளம் அருகில் சென்று கொண்டு இருந்தான்.
அப்போது எங்கோ ஒலிபெருக்கியில் யாரோ பேசுவது இவன் காதில் கேட்டது.
தொடர் வண்டி வருவதற்கு இன்னும் நேரம் இருக்கிறது என்று அறிந்ததால், நேரத்துக்குள் அந்த சொற்பொழிவைக் கேட்டு வரலாம்.
அப்போது வண்டி வர நேரம் சரியாக இருக்கும், என்ற முடிவெடுத்து அந்தப் பேச்சைக் கேட்கச் சென்றான்.
சொற்பொழிவைக் கேட்டவன், தன் தற்கொலை முடிவை மாற்றிக் கொண்டான்.
அவன் மனதில் இப்படி நினைத்துக் கொண்டான்.
"பொருளே இல்லாம இவ்வளவு நேரம் பேசும் இந்தச் சொற் பொழிவாளன் உயிரோடு இருக்கிறான்..
ஒன்றுமே புரியா விட்டாலும் கைதட்டிப் பாராட்டும் இத்தனை மக்களும் உயிரோடு இருக்கிறார்கள்"..
நான் மட்டும் ஏன் வாழக்கூடாது..? என்று நினைத்து தன் தற்கொலை எண்ணத்தை மாற்றி தன்னம்பிக்கையோடு வீடு நோக்கி நடந்து சென்றான்.
மின்சாரத்தில் ''positive, negative'' என்ற இரண்டும் இருந்தால் தான் ஒளியை நாம் பெற முடியும்.
இன்பம், துன்பம், சுகம், துக்கம்,வெற்றி, தோல்வி என அனைத்தும் கலந்து இருப்பதுதான் வாழ்க்கை.
உங்களுக்கு ஏற்படும் தடங்கலை வெற்றியின் தடங்களாக கருதி, துணிச்சலுடனும், எதிர்கொண்டால், உங்கள் வாழ்வில் வெற்றி நிச்சயம்...
0 Comments
*இங்கு இடம்பெறும் கருத்துக்கள் யாவும் பார்வையாளர்களின் சொந்த கருத்தாகும்
* கருத்துக்கள் பண்பட்ட வாரத்தைகளாக அமைய வேண்டுகிறேன் .
* தவறுகளை சுட்டிக்காட்டும் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது
*உங்கள் கருத்துக்கள் பிறறைப் புண்படுத்தும் வகையில் இருந்தால் உடனடியாக நீக்க உரிமையாளருக்கு முழு உரிமை உண்டு. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.